Sunday, October 28, 2007

காதல் இன்பம்: Bryan Adams - Everything I do, I do it for you!

நீங்க முதல் முதலில் கேட்ட மேல்நாட்டு இசை என்ன-ன்னு ஞாபகம் இருக்கா? - அதுவும் அதை மிகவும் ரசித்துக் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட முதல் அனுபவம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

பொதுவா எங்க வீட்டுல கேக்கற மீசிக், எப்பமே தமிழ் சினிமாப் பாட்டு தான்!
யாம் அறிந்த இசைகளிலே தமிழ் சினிமா
இசையைப் போல் எங்கும் காணேன்! - ஏன்னா, தமிழ் சினிமாவைத் தவிர அப்ப வேற ஒண்ணும் தெரியாது! :-))

எங்க வீட்டுல எனக்கு அண்ணனும் இல்ல, தம்பியும் இல்ல! அப்போ எல்லாம் வலையுலகத் தம்பிகளும் கிடையாது! அப்பாவை எதிர்த்துப் போராடி நம்ம மீசிக்கை ஸ்பீக்கரில் அலற வுடறதுக்கு சரியான கூட்டணி இல்ல! ஜிஸ்டர் என்னிக்குமே எதிர்க்கட்சி தான்! (சினிமா டிக்கெட் வாங்கும் போது மட்டும், அவளுக்கு நான் சத்குரு! அதுக்கப்புறம் மீண்டும் எதிர்க்கட்சி :-)

அன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க!
(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க!); அவங்க நமக்குப் ப்ராஜெக்ட் மேட்டும் கூட! அவங்க கையில ஒரு சிடி.
இது Bryan Adams-ன்னு ஒருத்தர், கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி போட்ட பாட்டாம்! ரொம்ப உருக்கமா இருக்கு! கேக்கறயா ரவின்னு சொன்னாங்க!

உடனே நமக்குச் சொல்லணுமா?..... இங்கிலீஷ் பாட்டு வேற!
அம்மாவை நான் பார்க்க, அந்தப் பொண்ணும் அம்மாவைப் பார்க்க...பொண்ணு பார்த்ததும் அம்மா ஓகேன்னு சொல்லிட்டாங்க! :-)
வீட்டில் முதல் முறையா, ஃபுல் வால்யூமில், ஸ்டிரியோவுடன்,
Look into my eyes - you will see,.......
What you mean to me......
என்ற அற்புதமான காதல் கவிதை!
Everything I do, I do it for you! என்று ஒவ்வொரு வரியிலும் முடியும்! அப்படியே காற்றில் பறக்கும் மென்பஞ்சு சிறகு போல், அப்படி ஒரு சுகம்!

அன்னிக்கு கேக்க ஆரம்பிச்சது தாங்க!
இசையை மொழி, மதம், நாடு, இனம் எல்லாத்தையும் கடந்து ரசிக்கலாம்-னு அப்பப்ப ஒரு பில்ட்-அப் கொடுத்துட்டு, கேட்டுக்கிட்டே இருந்தாலும்...
முதல் காதல் போல், இந்த முதல் இசையும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது!
இன்றும் என் காரில், இந்தப் பாடலின் சிடி இல்லாமல், பயணம் இருக்காது!

பாட்டையும் வரிகளையும் நீங்களே படிச்சி என்சாய் பண்ணுங்க!
ஒவ்வொரு வரியும் வைர வரிகள்! தனிமையில் கேட்கும் போது காதல் விஞ்ஞானிகளும் கவிழ்ந்து விடுவார்கள்!
எனக்குப் பிடித்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும்-ன்னே நினைக்கிறேன்!
mp3 வேண்டும் என்றால் சொல்லுங்க; upload செய்கிறேன்!




எந்தவொரு காதலுக்கும் இந்தப் பாடலைப் பொருத்தறாங்க. மேலே கண்டது Lord of the Rings-க்கு பொருத்தியது! கீழே ஒரிஜினல் ராபின்ஹூட் வீடியோவும், Bryan Adams அவரே பாடுவதும் கொடுத்துள்ளேன்!

Look into my eyes - you will see
What you mean to me
Search your heart - search your soul
And when you find me there - you'll search no more

Don't tell me it's not worth tryin' for
You can't tell me it's not worth dyin' for
You know it's true
Everything I do - I do it for you

********************************************************
Look into your heart - you will find
There's nothin' there to hide
Take me as I am - take my life
I would give it all - I would sacrifice


Don't tell me it's not worth fightin' for
I can't help it - there's nothin' I want more
Ya know it's true
Everything I do - I do it for you

********************************************************
There's no love - like your love
And no other - could give more love

There's nowhere - unless you're there
All the time - all the way


Oh - you can't tell me it's not worth tryin' for
I can't help it - there's nothin' I want more
I would fight for you - I'd lie for you
Walk the wire for you - ya I'd die for you
********************************************************
Ya know it's true
Everything I do - I do it for you





இது ஒரு காதலன் பாடுவது போல், தன் உள்ளத்தைச் சொல்லும் பாட்டு!
Don't tell me it's not worth fightin' for
Everything I do, I do it for you! என்று சொல்கிறான்!

பாட்டின் பின்னணி கொஞ்சம் பார்ப்போமா?
Waking up the neighbours என்ற ஆல்பத்துக்காக, Bryan Adams எழுதிய பாடல்! இது சூப்பர் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதினாறு வாரங்களுக்கு மேல்...டாப் டென்-னில் நம்பர் ஒன்னாக நின்றதாம்! - பின்னாளில் இதற்கு Grammy Award வேறு கொடுத்திருக்காங்க!
அன்றில் இருந்து, இன்று வரை பல முன்னணிப் பாடகர்கள் இதைப் பாடி இருக்காங்க! - இன்னிக்கும் Brandy குழுவிலும் இதைப் பாடுறாங்க!

ராபின் ஹூட் பற்றிய ஒரு படம், Robin Hood - Prince of Thieves!
அதற்கு பாட்டும் எழுதி, இசையமைத்துப் பாட Bryan Adams-ஐக் கூப்பிட்டாங்க! அவர் நண்பர் Mutt Lange உம் உடன் பாடினார்!
ஆனா அவங்க பாடிய விதம் ஏனோ, அந்தப் படம் எடுத்த கம்பெனிக்குப் பிடிக்காமல் போனது!
மாற்றிப் பாடும் படி எவ்வளவு சொல்லியும், ஆடம்ஸ் பாட்டின் ஜீவனை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்! அதனால் படத்தின் இறுதியில் Cast and Credit -இல் எங்கோ ஒரு மூலையில் ஆடம்ஸ்-இன் பெயரைப் போட்டுட்டாங்க!

ஆனா பாடல் வெளி வந்த பின், நம்பர் ஒன் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ,
ஆடம்ஸ் Cast and Credit -இல் சிறு புள்ளியாய்த் தோன்றினாலும், இசை வானில் பெரும் புள்ளியாய் ஆகி விட்டார்!
முப்பது நாடுகளில் ஹிட்டாகி, 1991-இல் அதிகம் விற்கப்பட்ட தனிப்பாடலாக வளர்ந்தது!
ஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மானிய மொழிகளிலும் பின்னர் ரெக்கார்ட் செய்யப்பட்டது!

References (உசாத்துணை):
http://wc06.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=10:t2jv7iajg74r
http://en.wikipedia.org/wiki/Everything_I_Do




BBC-ராபின்ஹூட்-ஒரு காட்சி


ப்ரையன் ஆடம்ஸ்-இன் லைவ் ஷோ !


பியானோவில், அதே வாசிப்பு!

21 comments:

இலவசக்கொத்தனார் said...

ரவி, ரொம்ப கொசுவர்த்தி சுத்தவிட்டுட்டீங்க. அப்பா அம்மா கேட்கும் கர்நாடக சங்கீதத்தைக் கேட்பதா என சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள், பரவலாக கேட்டிறாத இசை என ஒரு சுற்று சுற்றிவிட்டு பின் கர்நாடக இசையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுதர ஒரு ஆள் கிடைக்க அதன் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால் இந்த பாடல் நம்ம பேவரேட் லிஸ்டில் இருந்த பாடல்தான். :))

SurveySan said...

great song indeed!

rock style songsil piditha miga silavatrul, idhuvum ondru.

VSK said...

12 வருஷமா இன்னிக்கும் என்னோட ஃபேவரிட் பாடலா இருக்கும் இதைப் பார்த்ததும், கேட்டதும் ஒரு பரவச உணர்ச்சி!!

உடனே அவசர அவசரமாக என் மனைவியை எழுப்பி....
அவரை இதை மீண்டும் கேட்கச் செய்து....

அப்புறம் நடந்ததெல்லாம் .....

சென்ஸார் செய்யப் பட்டது!
:)))))))

உங்கள்ச்சின் வேகம் கண்டு அகமகிழ்கிறேன், ரவி!

Anonymous said...

Good song.
I enjoyed.
Did you hear "The Lake House" Love song.
Did you like it.
If so comment on it.
RR

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
ரவி, ரொம்ப கொசுவர்த்தி சுத்தவிட்டுட்டீங்க.//

ஹிஹி!
ஒரே புகை!....

//ஒரு சுற்று சுற்றிவிட்டு பின் கர்நாடக இசையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுதர ஒரு ஆள் கிடைக்க அதன் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை ரசித்துக் கொண்டிருக்கிறேன்//

சூப்பர்!

//ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால் இந்த பாடல் நம்ம பேவரேட் லிஸ்டில் இருந்த பாடல்தான். :))//

ஹூம்ம்ம்...எனக்கும் இந்தப் பாடல் தான் அயல்நாட்டு இசை துவக்கம் கொத்ஸ்!
ஆனா உய்யால லூகவய்யா...என்று கேட்கும் போது அதுவும் ஒரு தனி சுகம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SurveySan said...
great song indeed!
rock style songsil piditha miga silavatrul, idhuvum ondru.//

ஓ...உங்களுக்கு ராக் அவ்வளவா பிடிக்காதா சர்வேசன்?
இந்தப் பாடல் ராக் ஸ்டைல் தான் என்றாலும் அப்படி ஒரு மென்மை இழையோடும்!

rv said...

கே.ஆர்.எஸ்,
கேட்டு பல யுகங்களாச்சு. ஆனாலும் என்னிக்கும் கேட்டுகிட்டே இருக்கலாம் மாதிரி பாட்டு. எடுத்து இட்டதுக்கு நன்னி.

back to you தான் இவரோட பாடல்களிலேயே என்னோட பேவரிட். காரணம் ஒண்ணுமில்ல.. ரொம்ப லவ்வி லவ்வி பாலட்டுறது நமக்கு ஆவாது. :)

நானும் இவர்கிட்ட சாப்டா தொடங்கி சப்பாத், மெயிடன், வான் ஹாலன் வரைக்கும் போய் மண்டை காய்ஞ்சி --- திரும்ப நம்ம மண்ணோட ம்யூசிக்குக்கே புல் சர்க்கிள் வந்தாச்சு! இப்போ தமிழ் சினிமாவும் கர்நாடக சங்கீதமும் மட்டுமே. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
12 வருஷமா இன்னிக்கும் என்னோட ஃபேவரிட் பாடலா இருக்கும் இதைப் பார்த்ததும், கேட்டதும் ஒரு பரவச உணர்ச்சி!!//

பன்னிரண்டு வருடப் பாட்டா இது? இப்ப கூட MTV-ல ப்ளே பண்ணுறாங்க SK!

//உடனே அவசர அவசரமாக என் மனைவியை எழுப்பி....
அவரை இதை மீண்டும் கேட்கச் செய்து....
அப்புறம் நடந்ததெல்லாம் .....
சென்ஸார் செய்யப் பட்டது!
:)))))))//

ஹிஹி....
வாழ்த்துக்கள்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//rranbu@hotmail.com said...
Good song.
I enjoyed.//

வாங்க அன்பு! உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியே!

//Did you hear "The Lake House" Love song. Did you like it.//

மிகவும் பிடிக்கும்! தனிப் பதிவு போடலாமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராமநாதன் said...
கே.ஆர்.எஸ்,
கேட்டு பல யுகங்களாச்சு. ஆனாலும் என்னிக்கும் கேட்டுகிட்டே இருக்கலாம் மாதிரி பாட்டு. எடுத்து இட்டதுக்கு நன்னி//

வாருமய்யா இசை வித்தகரே!
ஒமக்கும் புடிச்ச பாட்டா இது? சந்தோசம்!

//back to you தான் இவரோட பாடல்களிலேயே என்னோட பேவரிட். காரணம் ஒண்ணுமில்ல.. ரொம்ப லவ்வி லவ்வி பாலட்டுறது நமக்கு ஆவாது. :)//

ஆகா லவ்வி ஆகாதா?
back to you-வும் நல்லாத் தான் இருக்கும்!

//நானும் இவர்கிட்ட சாப்டா தொடங்கி சப்பாத், மெயிடன், வான் ஹாலன் வரைக்கும் போய் மண்டை காய்ஞ்சி --- திரும்ப நம்ம மண்ணோட ம்யூசிக்குக்கே புல் சர்க்கிள் வந்தாச்சு!//

கொத்ஸ் போலவே நீங்களும் ஃபுல் சர்க்கிளா? கலக்குங்க!
இசை இன்பத்தில் இது தான் மொத வெளிநாட்டுப் பாடல்! :-)

வல்லிசிம்ஹன் said...

ரவி,
ராபின்ஹூட் வந்த போதில் எம்டிவியில் பார்த்துக் கேட்டு மயங்கிய பாட்டு. அ டோடல் எக்ஸ்பீரியன்ஸ்.

இவரோட ப்ளீஸ் fஅர்கிவ் மீ யும்கேட்டு இருப்பீங்க.

என்னோட முதல் மேற்கத்திய இசை என்றால் பீட்டில்ஸும் கம்செப்டம்பர் டைட்டில் ம்யூசிக்கும் தான்.

அதுவும் அம்மா அப்பா வீட்டில் இல்லாத போது கேக்கணும் சத்தமா:)))
நன்றி ரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ரவி,
ராபின்ஹூட் வந்த போதில் எம்டிவியில் பார்த்துக் கேட்டு மயங்கிய பாட்டு. அ டோடல் எக்ஸ்பீரியன்ஸ்.//

வாவ்; கலக்குறீங்க வல்லியம்மா!
மரபிசைப் பாடல்-ல தான் கலக்குவீங்கன்னு தெரியும்; இதிலயுமா? சூப்பரு!

//என்னோட முதல் மேற்கத்திய இசை என்றால் பீட்டில்ஸும் கம்செப்டம்பர் டைட்டில் ம்யூசிக்கும் தான்//

கம் செப்டம்பர் எல்லாம் இப்ப அமெரிக்கா வந்த பின்னாடி ஒவ்வொன்னா பழச எல்லாம் நோண்டிக் கேட்டது!

//அதுவும் அம்மா அப்பா வீட்டில் இல்லாத போது கேக்கணும் சத்தமா:)))//
Dank U Dank u
நீங்களும் நம்ம கட்சி போல இருக்கே! :-)

sury siva said...

A compilation highly innovative.
Creativity is the essence of one's inner soul. Enjoy it in its perfection and uniqueness. God Bless You and your family.

For a change, kindly go around your own temple at a distance place in Tamil Nadu. Sit awhile for a moment and project your mind. You are already there, listening to the sweet music dedicated to deities in a Siva temple.
http://movieraghas.blogspot.com
Sury

MyFriend said...

//அன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க!
(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க!); //

ஆஹா.. நானும் யோசிச்சே. எப்போ நான் கே.ஆர்.எஸ் வீட்டுக்கு போனேன்னு. :-P

MyFriend said...

பாட்டு நல்லா இருக்கே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//sury said...
A compilation highly innovative.
Creativity is the essence of one's inner soul. Enjoy it in its perfection and uniqueness. God Bless You and your family//

நன்றி சூரி சார்!

//For a change, kindly go around your own temple at a distance place in Tamil Nadu. Sit awhile for a moment and project your mind. You are already there, listening to the sweet music dedicated to deities in a Siva temple.
http://movieraghas.blogspot.com
Sury //

ஹூம்..
இந்த அனுபவம் எனக்குப் பல முறை கிட்டி இருக்குங்க!
எங்கூரு வாழைப்பந்தல் ஆற்றில், பச்சையம்மன் கோவிலில் உட்கார்ந்து பாட்டு கேட்பது!

இதே போல் திருவையாறு, திருவரங்கம், திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவில், திருக்கோவிலூர்-ன்னு ஆத்தோரமா கேக்கற பாட்டின் சுவையே தனி தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//அன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க!
(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க!); //
ஆஹா.. நானும் யோசிச்சே. எப்போ நான் கே.ஆர்.எஸ் வீட்டுக்கு போனேன்னு. :-P//

அதுனால என்ன சிஸ்டர்!
அடுத்த முறை சென்னை வரும் போது வீட்டுக்கு வந்துடுங்க!

//பாட்டு நல்லா இருக்கே! :-)//

பாட்டை ஹம் பண்ணிப் பாடுங்க!
ஒங்க கிட்ட இந்த பாட்டு ஒட்டிக்கும் :-)

குமரன் (Kumaran) said...

வேகவேகமா படிச்சு முடிச்சேன் இரவி. இதுவும் ஒரு புல்லாகிப் பூண்டாகி மாதிரி கதையோ? காதலன் பாடும் பாட்டை எதுக்கு குடுத்தாங்க அவங்க? நீங்களும் குறிப்பா நாலைஞ்சு இடத்துல எதையோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே? வீட்டுல தங்கமணிகிட்ட எல்லா கதையும் சொல்லியாச்சுல்ல?

தோழி said...

lovable song with touching lyrics. everything we can do for a song like this. playing it in the car going for a long drive with a person close to heart in a drizzling rain... yes everything we can do for this song...

thanks for sharing/

Om Santhosh said...

lovable very nice song

Dr.V.K.Kanniappan said...

'தமிழிசை பாடுகின்ற வானம்பாடி'ஒரு இனிமையான தமிழ்ப் பாடல்.பாடலாசிரியர் யார் என அறிய ஆவல். மதுரையில் தமிழிசை விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் இத்தருணத்தில் இந்தப் பாடலை எழுத்து வலைதளத்தில் ஆதாரம்:இசை இன்பம் வலைப்பூ/2007 என்று குறிப்பிட்டு பதிய உள்ளேன்.
டாக்டர் வ.க.கன்னியப்பன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP