Monday, January 14, 2008

தமிழ் சினிமாவில் பொங்கல் பாடல்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
எங்கூரு வாழைப்பந்தலில், இன்னிக்கி யாரைப் பார்த்தாலும், பால் பொங்குச்சா?-ன்னு கேப்பாங்க! அட வெண்ணெ, பால் பொங்காம, பானையா பொங்கும்? அப்படின்னு எதிர்க்கேள்வி எல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க! :-)

பொங்கலோ பொங்கல்-ன்னு ஜாலியா பதில் சொல்லிட்டு, பாடிக்கிட்டே போயிக்கிட்டு இருப்பாங்க! அப்படி ஒரு பாட்டு மூட் வந்துரும் எல்லாருக்கும்!
மாலையில் பெருமா கோயிலு மண்டபத்து வாசப்பக்கம் சடக்கு சடக்கு-ன்னு பெண்கள் கும்மி வேற! அப்படி நாள் முழுக்க சந்தோசமா, பாட்டு பாடியே, பொங்க பொங்கும்!

6AA7612AA62

இப்பெல்லாம் வானொலி, தொலைக்காட்சியில் பொங்கல் அன்னிக்கி ஒரே சத்தமா இருக்குல்ல? காலையில் கொஞ்ச நேரம் வேணும்னா ஏதோ பொங்கல் விழா பத்திக் காட்டுவாய்ங்க!
மீதி நேரம் எல்லாம் பட்டிமண்டபம், பாட்டிமண்டபம், அரட்டை அரங்கம், சினிமாப் பாட்டு, புது ரிலீஸ், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக-ன்னு ரெண்டு சிறப்புப் படம் - இப்படியே பொங்கல் ஓடிடும்! போதாக்கொறைக்கு பொன்னம்மா, நடிகைங்க எப்படி கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கறாங்க - அப்படி இப்படின்னு, கும்மாளத்துக்கு இடையில் கூச்சலும் கொஞ்சம் அதிகம் தான்! :-)

நம்ம மக்கள்ஸ்-உம் பொங்கல் அன்னிக்கி டிவி பெட்டி முன்னாடி உக்காந்துட்டா சொல்லவே வேணாம்! பொங்கல் பொங்கும் சமயமாப் பார்த்து, அம்மா அடுக்களையில் இருந்து கூப்பிட்டாக் கூட, ஆடி அசைஞ்சி தான் சிலது வருதுங்க!
மஞ்சக் கொத்து, முழுக் கரும்பு, மொச்சை, காராமணி, வள்ளிக் கிழங்கு, பூசணிப் பத்தை! பரங்கிப்பூ இலையில் அத்தனையும் கொட்டிப் பொங்கல் பரப்பி வைக்கறது எல்லாம் சென்னையில் இன்னும் எம்புட்டு நாள் இருக்கும்-னு நினைக்கிறீங்க? :-)

சும்மா டிவி பொட்டிய மட்டும் கட்டிக்கினு அழாம, நம்ம தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டெல்லாம் என்ன-ன்னு ஒரு கணக்கு எடுக்கலாம் வாரீகளா?
எனக்குத் தெரிஞ்சதை நான் துவங்கி வைக்கிறேன்!
பழசோ, புதுசோ எல்லாப் பாட்டையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா!
பொங்கலோ பொங்கல்!


1.
காட்டுக்குயிலு மனசுக்குள்ள, பாட்டுக்கொன்னும் பஞ்சமில்ல, பாடத் தான்!
படம்: தளபதி
குரல்: SPB, ஜேசுதாஸ் | இசை: இளையராஜா

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்



2.
தைப் பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்!
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!

(இதுக்கு ஒலிச்சுட்டி யாரிடமாச்சும் இருக்கா?)
படம்: தைப் பிறந்தால் வழி பிறக்கும்
குரல்: மருதகாசி(?) | இசை: கே.வி. மகாதேவன்

3. பொங்கலை பொங்கல வைக்க, மஞ்சள மஞ்சள எடு, தங்கச்சி தங்கச்சி தங்கச்சி!
பூ பூக்கும் மாசம் தை மாசம்!
படம்: வருஷம் 16
குரல்: சித்ரா | இசை: இளையராஜா

4. தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது
படம்: மகாநதி
குரல்: சித்ரா | இசை: இளையராஜா

5. ஐ.ஆர். நாட்டுக்கட்டு
படம்: மஜா
குரல்: சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம் | இசை: வித்யாசாகர்


6. தை மாதப் பொங்கலுக்கு, தாய் தந்த செங்கரும்பே!
படம்: நிலவே நீ சாட்சி
குரல்: பி.சுசீலா | இசை: MSV

7. பொதுவாக என் மனசு தங்கம்
படம்: முரட்டுக் காளை
குரல்: மலேசியா விஸ்வநாதன் | இசை: இளையராஜா


8. கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி..
படம்: விவசாயி
குரல்: TMS | இசை: KVM

9. நல்ல நல்ல நிலம் பார்த்து
படம்: விவசாயி
குரல்: TMS | இசை: KVM

10.அஞ்சாத சிங்கம் என் காளை
படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
குரல்: பி.சுசீலா | இசை: ஜி.ராமநாதன்


11.மணப்பாறை மாடு கட்டி
படம்: மக்களைப் பெற்ற மகராசி
குரல்: TMS | இசை: KVM

12.இந்தப் பூமியே எங்க சாமீயம்மா
படம்: புதுப் பாட்டு
குரல்: ஜானகி, மனோ | இசை: இளையராஜா


அப்படியே கன்டினியூ பண்ணுங்க மக்கா!
தலைவர் எம்.ஜி.ஆர் பாட்டு எத்தினி இருக்கு?
விவசாயி - எங்க இருக்கீங்க? வாங்க கோதாவுக்குள்ள! உங்க திருநாள் இது! :-)

12 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி...பின்னூட்டக் கயமைத்தனம் மொத முறையாச் செய்யறேன்! :-)

ஏன்னா, இவ்வளவு தானா பொங்கல் பற்றிய பாட்டு நம் சினிமாவில்?
சேச்சே...இன்னும் நிறைய இருக்கும்! யாராச்சும் எடுத்துக் கொடுப்பாங்க பாருங்க! அதான் பி.க.

கானா பிரபா said...

தல

பொங்கல் வாழ்த்துக்கள்

ஆடிப்பட்டம் தேடிச்செந்நெல் வித போட்டு - மைக்கேல் மதன காமராஜன் (படத்தில் வரவில்லை)
இந்த பூமியே எங்க சாமி அம்மா - புதுப்பாட்டு

இன்னும் நிறைய இருக்கு தல, ராமராஜனை கேளுங்க

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கானா பிரபா said...//

பொங்கல் வாழ்த்துக்கள் கா.பி. அண்ணாச்சி! செங்கரும்பு கடிச்சி சாப்பிட்டீங்களா? இல்லை கரும்பு ஜூஸ் குடிச்சி கொண்டாடினீங்களா? :-)

//ஆடிப்பட்டம் தேடிச்செந்நெல் வித போட்டு - மைக்கேல் மதன காமராஜன் (படத்தில் வரவில்லை)
இந்த பூமியே எங்க சாமி அம்மா - புதுப்பாட்டு//

இதுக்குத் தான் எங்க தல, எங்க அண்ணாச்சி நீங்க வேணுங்கிறது!

//இன்னும் நிறைய இருக்கு தல, ராமராஜனை கேளுங்க//

வலையுலக ராமராஜனைக் கேப்போமா? :-)

jeevagv said...

//சும்மா டிவி பொட்டிய மட்டும் கட்டிக்கினு அழாம...//
:-)
பாடல்களை கேட்க இப்பொது நேரமில்லை - அப்புறம் நிதானமாக கேட்க வேண்டும்!

cheena (சீனா) said...

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜல்லிக்கட்டுப் பாடல் :

அஞ்சாத சிங்கம் என் காளை......

cheena (சீனா) said...

மக்களைப் பெற்ற மகராசி :

மணப்பார மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சீனா சார்...கலக்கல்! கரீட்டாப் புடிச்சிக் கொடுத்திருக்கீங்க! :-)

அஞ்சாத சிங்கம் என் காளை, மணப்பாறை மாடு கட்டி
- ரெண்டு பாட்டும் பதிவுல சேர்த்து விடுகிறேன்! நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பாடல்களை கேட்க இப்பொது நேரமில்லை - அப்புறம் நிதானமாக கேட்க வேண்டும்!//

பொங்கல் முடிஞ்சி, மாட்டுப் பொங்கல் முடிஞ்சி, காணும் பொங்கல் வந்திருச்சி! "காணும்" பொங்கல் அன்னிக்கி "கேட்டு"டுங்க ஜீவா! :-)

rahini said...

இசை யை நான் உணவா உண்ணும் போது இந்தப்பக்கம ஓடிவந்தேன்
ம் ம் பாடல் நல்லா இருக்கே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//rahini said...
இசை யை நான் உணவா உண்ணும் போது இந்தப் பக்கம ஓடிவந்தேன்
ம் ம் பாடல் நல்லா இருக்கே//

ஆகா, இசைப் பொங்கல் சாப்பிட்டீங்களா ராகினி! இசை இன்பம் பதிவுகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கலாம்! திரை இசையில் ராகங்கள்-னு நம்ம ஜீவா தொடர் பதிவுகள் போட்டுக் கலக்கிக்கிட்டு இருக்காரு! பாருங்க!

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

Shanmuga Subramanian said...

👍👌

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP