Tuesday, December 15, 2009

ஒரு சர்வாதிகாரியின் சிம்பொனி

சின்ன வயசுல ஓடியாடித் திரிஞ்ச காலத்துல, எங்க வயக்காடுகளில், அப்புறம் ஸ்கூல் லீவுல பசங்களோட காட்டுக்கு மாடு மேய்க்கப் போன சமயங்கள்ல, இந்த இசையமைப்புக்களை பல முறை கேட்டுருக்கேன்.

அப்பல்லாம் அதோட அருமையும் பெருமையும் புரியல.
புரிய வந்த சமயத்துல... படுக்கையே வாழ்வாகிப் போச்சு. (I am telling the fact.! yaar!!! Not feelings of India!!!!!!! )

இப்பவும் இந்த மாதிரி இசை, திடீர்னு பக்கத்துல எங்கயாச்சும் கேக்கற சந்தர்ப்பத்துல மெய்மறந்து, கேக்க ஆரம்பிச்சிடுவேன்.

நான் சொல்றதுக்கு முன்னாடியே, அந்த சர்வாதிகாரி யாருன்னு புரிஞ்சுட்டு இருப்பீங்களே...!

பிரபஞ்ச மகாசக்தி என்கிற, கடவுள் என்கிற , இன்னும் கணக்கில்லாத என்கிற-க்களைப் போட்டாலும்... அந்த எல்லாம் வல்ல சர்வாதிகாரிக்கு நம்மால பெயர் வைக்க ஏலுமோ? ஹ்ம்.

What an Orchestration?
எத்தினி இசையமைப்பாளர்கள் இணைஞ்சாலும் இப்படி ஒரு சிம்பொனி பண்ண முடியுமோ?

ஒகே! மக்களே... கேட்டுப்- பாஆஆருங்க!

(முடிஞ்சா ஹெட்போன் மாட்டிட்டு)



இதோ இன்னொண்ணு.



இம்மாதிரி இசை யாராவது வச்சுருந்தா... எனக்கு அனுப்பி வைக்க முடியுமா...?

-------------------------------------------------------------------------------------



அப்புறம் எனக்குப் பிடிச்ச இன்னொரு இசை. உலகம் தோன்றுமுன்பாக இது தோன்றியதாக சொல்றாங்க. இதைக் கொஞ்ச நேரம் கேட்டீங்கன்னா, ஆட்டோமேட்டிக்கா..., தியான நிலைக்குப் போயிடுவீங்க.

இது பத்தி சொல்ல நிறைய்ய்ய இருக்கு.
ஒற்றைக் கையினால் ரொம்ப தட்டச்ச முடியாத காரணத்தால....
தவிரவும் என்னைவிட இந்த topic- ஐ அவர் எழுதினா நல்லா இருக்குமென்கிற காரணத்தால...

இதன் அருமை பெருமைகளை பட்டியலிட்டு ஒரு தனிப் பதிவாக இடுமாறு நம்ம மகாவிஷ்ணு-கே. ஆர். எஸ்- கிட்ட வேண்டிக்கறேன். (ஏற்கெனவே இட்டிருந்தா சுட்டி கொடுங்க)

இசை கேக்கலாமா????



-------------------------------------------------------------------------------------


இதுவும் தியானத்துக்கு உதவும்.

காயத்ரி கோவிந்தராஜன் அவர்களின் வீணை..... அடடா.... என்னமாய்த் தாலாட்டுது...!

கேளுங்க..! கேளுங்க..! கேட்டுக்கிட்டே இருங்க.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP