Wednesday, May 26, 2010

இசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்

இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!

குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை என் வாசகத்தில் பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.

எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்

தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர

முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம த்வைத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
-----------------------------
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
-----------------------------
"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!

என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி

எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.

சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.

"கனிநயம்":
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.

--------------------------------------------------
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:

வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.

"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது"
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
---------------
இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.

Tuesday, December 15, 2009

ஒரு சர்வாதிகாரியின் சிம்பொனி

சின்ன வயசுல ஓடியாடித் திரிஞ்ச காலத்துல, எங்க வயக்காடுகளில், அப்புறம் ஸ்கூல் லீவுல பசங்களோட காட்டுக்கு மாடு மேய்க்கப் போன சமயங்கள்ல, இந்த இசையமைப்புக்களை பல முறை கேட்டுருக்கேன்.

அப்பல்லாம் அதோட அருமையும் பெருமையும் புரியல.
புரிய வந்த சமயத்துல... படுக்கையே வாழ்வாகிப் போச்சு. (I am telling the fact.! yaar!!! Not feelings of India!!!!!!! )

இப்பவும் இந்த மாதிரி இசை, திடீர்னு பக்கத்துல எங்கயாச்சும் கேக்கற சந்தர்ப்பத்துல மெய்மறந்து, கேக்க ஆரம்பிச்சிடுவேன்.

நான் சொல்றதுக்கு முன்னாடியே, அந்த சர்வாதிகாரி யாருன்னு புரிஞ்சுட்டு இருப்பீங்களே...!

பிரபஞ்ச மகாசக்தி என்கிற, கடவுள் என்கிற , இன்னும் கணக்கில்லாத என்கிற-க்களைப் போட்டாலும்... அந்த எல்லாம் வல்ல சர்வாதிகாரிக்கு நம்மால பெயர் வைக்க ஏலுமோ? ஹ்ம்.

What an Orchestration?
எத்தினி இசையமைப்பாளர்கள் இணைஞ்சாலும் இப்படி ஒரு சிம்பொனி பண்ண முடியுமோ?

ஒகே! மக்களே... கேட்டுப்- பாஆஆருங்க!

(முடிஞ்சா ஹெட்போன் மாட்டிட்டு)இதோ இன்னொண்ணு.இம்மாதிரி இசை யாராவது வச்சுருந்தா... எனக்கு அனுப்பி வைக்க முடியுமா...?

-------------------------------------------------------------------------------------அப்புறம் எனக்குப் பிடிச்ச இன்னொரு இசை. உலகம் தோன்றுமுன்பாக இது தோன்றியதாக சொல்றாங்க. இதைக் கொஞ்ச நேரம் கேட்டீங்கன்னா, ஆட்டோமேட்டிக்கா..., தியான நிலைக்குப் போயிடுவீங்க.

இது பத்தி சொல்ல நிறைய்ய்ய இருக்கு.
ஒற்றைக் கையினால் ரொம்ப தட்டச்ச முடியாத காரணத்தால....
தவிரவும் என்னைவிட இந்த topic- ஐ அவர் எழுதினா நல்லா இருக்குமென்கிற காரணத்தால...

இதன் அருமை பெருமைகளை பட்டியலிட்டு ஒரு தனிப் பதிவாக இடுமாறு நம்ம மகாவிஷ்ணு-கே. ஆர். எஸ்- கிட்ட வேண்டிக்கறேன். (ஏற்கெனவே இட்டிருந்தா சுட்டி கொடுங்க)

இசை கேக்கலாமா????-------------------------------------------------------------------------------------


இதுவும் தியானத்துக்கு உதவும்.

காயத்ரி கோவிந்தராஜன் அவர்களின் வீணை..... அடடா.... என்னமாய்த் தாலாட்டுது...!

கேளுங்க..! கேளுங்க..! கேட்டுக்கிட்டே இருங்க.

Saturday, May 09, 2009

உளறினாலும் அழகிய பாட்டு வருமா?

ரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு பார்கறீங்கனு தெரியாது ... என்னை மாதிரி ஆளுங்க பாட தெரியாததுனால இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நல்ல பார்பாங்கனு நினைக்கிறேன் .. அதை பார்த்ததுனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..
ஹரிஹரன் சார் எப்படி பாடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.... அவரை கௌரவபடுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்கள் பாடனும்னு ஒரு சுற்று.. அதுல ஒருத்தர் பாடினது உதயா படத்துல வர "உதயா உதயா உளறுகிறேன்" பாட்டு மிக அருமையாக இருந்தது.. நீங்களும் கேளுங்களேன்.. சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல்

காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும் ...
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்...தீண்டவே
மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவனே
என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து
காதல்...
காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் ...காதல் ...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP