Wednesday, July 23, 2008

+ve பதிவர் அந்தோணி வருகவே! ராஜாவின் ராஜாங்கம் தருகவே!

பதிவர் அந்தோணிமுத்துவை நம்மில் பலரும் அறிவோம் இல்லையா? Positive அந்தோணி என்றால் அவர் தான்! எழுந்து நிற்க இயலாவிடினும், உலகத்தின் முன் எழுந்து நின்றவர்! தான் யார் என்பதைச் சொல்லி வென்றவர்! ஆனந்த விகடன், ஆறாம் திணை, நிலாச் சாரல் என்று வளைய வந்தவர்!
மதிப்பிடமுடியாத அளவுக்கு தன்னம்பிக்கை வரம் கைக்கொண்ட இளைஞர்! நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இருந்தால், ஊனங்கள் ஓடியே ஒளியும்! உற்சாகம் தேடியே வருகும்! = இதை நம் அனைவருக்காகவும் இன்னொரு முறை மெய்ப்பிக்க வந்தவர் தான் அந்தோணி!
* அவர் எழுந்து நின்ற கதை இங்கே!
** அவர் வென்ற முதல் பரிசு இங்கே!

வெற்றியைப் படித்தல் பல நோய்களுக்கு நல்ல மருந்து! வெற்றிக் கதையைத் தந்த அந்தோணி அண்ணனும் ஒரு மருத்துவர் தான்!
அவர் கதையைப் படித்துப் பாருங்கள்! பிடித்துப் போகும்!

அந்தோணியிடம் ஒரு பெரிய புதையல் இருக்காம்! இந்த முறை சென்னை சென்றிருந்த போது (April-2008), அந்தோணி வீட்டுக்கு, நானும் மதுமிதா அக்காவும் சென்றிருந்தோம்! செம உபசரிப்பு!
அப்போ அவர் பாதுகாத்து வந்த புதையல் என் கண்ணில் பட்டு விட்டது!
அந்தப் புதையலை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை மதுமிதா அக்காவுக்கு!

ராகங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்! ராகதேவன் இளையராஜாவின் இசையில் குறுக்குச் சந்துகளும் நெடுக்குச் சாலைகளுமாய் பைக் ஓட்டுகிறார்! உச்சி வகிந்தெடுத்து, பிச்சிப்பூ வச்ச கிளி-ன்னு ஒரு பாட்டை வேறு விதமான ராக ஆலாபனையுடன் எடுத்து விட்டார் பாருங்க!
அவருடன் மதுமிதா அக்காவும் நானும் கூட ஈடு கொடுக்க முடியாமல் பாடினோம்!

அன்தோணி அண்ணன் வீட்டுச் சுண்டைக்காயும் செம்பருத்தியும் கூட இசை பாடும்!

இசை இன்பம் குழு வலைப்பூவுக்குப் பிச்சிப்பூ வைத்திட, அவர் புதையலை அங்கேயே அபேஸ் பண்ண அக்காவும் அடியேனும் கூட்டுச் சதி செய்து விட்டோம்!
இதோ, அந்தோணி அண்ணன் இசை இன்பத்தில் உலா வரத் தொடங்கி விட்டார்!

அவர் முதல் காதலி பேரு ரஞ்சனி!
அந்த முதல் காதலைச் சொல்லப் போறாரு!
கதை கேளு கதை கேளு!
இசை கேளு இசை கேளு!....
பாசிடிவ் அந்தோணியின் இசையை நல்லா கேளு...


இசை இன்பம் வலைப்பூவில் சினிமா-காரம்-காபி, வாத்தியக் கருவிகள், அன்னமாச்சர்யர் கீர்த்தனை என்று பல அருமையான பதிவுகளைப் பதிந்த நண்பர் CVR-க்கு இன்று (Jul-24) பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீவி! :)

10 comments:

jeevagv said...

இசை இன்பத்தில் இடுகைகளை அள்ளித்தர, எங்களையெல்லாம் இசை வெள்ளத்தில் ஆழ்த்திட,
உங்களை வருக வருகவென வரவேற்கிறோம், அந்தோணிமுத்து ஐயா.

கவிநயா said...

அந்தோணி முத்து அவர்கள் அளிக்கும் இசை இன்பத்திற்காகக் காத்திருக்கிறோம்.

சிவிஆர் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

ramesh sanijeeth sadasivam said...

"+ve பதிவர் அந்தோணி வருகவே! ராஜாவின் ராஜாங்கம் தருகவே!"

என அந்தோனி அவர்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கிறேன். வருக நண்வர் அந்தோனி அவர்களே!

ramesh sanijeeth sadasivam said...

CVR அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

\\அந்தோணி முத்து அவர்கள் அளிக்கும் இசை இன்பத்திற்காகக் காத்திருக்கிறோம்.

சிவிஆர் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!\\ ஆமோதிக்கிறேன்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாருங்கள் அந்தோணி உங்கள் இசை இன்பத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ள இயைந்தமைக்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்.

சி.வி.ஆர் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ள்.

மதுமிதா said...

வாங்க அந்தோணி... மஹாவிஷ்ணுவிடமிருந்து அழைப்பு வந்தாச்சு:-) இசைமழை பொழியலாம்...ரசிக்கலாம்...

சிவிஆருக்கு இனிய‌ பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Aruna said...

//எழுந்து நிற்க இயலாவிடினும், உலகத்தின் முன் எழுந்து நின்றவர்!//

இசையின்ப உலகில் எழுந்து நிற்க மட்டுமல்ல துள்ளிக் குதித்து ஓடவும் செய்வார் அந்தோணி முத்து என்ற நம்பிக்கை உண்டு.....மற்றும் உலகெங்கும் சுற்றி வர உளமார்ந்த வாழ்த்துக்கள்....
அன்புடன் அருணா

+Ve Anthony Muthu said...

மனமுருகி கண் கசிகிறேன்.

இந்தச் சாதாரணச் சாமனியனுக்கு இத்தனை பெரிய ஆளுயர மாலைகளா?

வரவேற்பா?

இந்த அளவுக்கு எனக்குத் தகுதியுண்டா?

கொஞ்சம் மலைப்பாகவும், கூடவே பயமாகவும் இருக்கிறது.

மஹாவிஷ்ணுவின், மதுமிதா அம்மாவின், மற்றும் என்னைவிட வலையுலகில் மூத்த பதிவர்களான உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன்.

தீர்ப்பு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஏதேனும் தவறிருந்தால் அது என் இசைஞானத்தின் கோளாறு.

பாரட்டுக்கள் எனில் அவை முழுமையாக,
என்னை இசை இன்பத்தில்
எழுத வைக்க முழுமுதற் காரணமாய் இருந்த மதுமிதா அம்மாவுக்கும், அதைச் செயலாக்கிய மஹாவிஷ்ணுவுக்கும், மட்டுமே.

வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,
என் கண்ணீருடன் கலந்த நன்றிகள்.

Sacred Heart Seminary said...

'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்' - லூக்கா நற்செய்தி 23:46

இன்று (23.08.2010) காலை 10 மணியளவில் அந்தோணிமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (24.08.2010) காலை 11 மணிக்கு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், பெரியநாயகி நகரில் நடைபெறும்.

"Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46

Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.

Funeral Mass will be offered at 11.00 a.m. on August 23, 2010, 11.00 a.m. at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP