சினிமா காரம் காபி - பாகம் 4
தமிழ்த்திரை உலகில் தற்பொழுதிருக்கும் இசை அமைப்பளர்களில் பெரிதும் மதிக்கப்படும் இசை அமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். அவரின் பல மனதை வருடும் பாடல்களை நானும் கேட்டு மயங்கி இருக்கிறேன்.ஒரு முறை இசை அமைப்பாளர் பற்றிய பேச்சு வரும்போது ரஹமானிற்கு இணையாக வித்யாசாகரும் திறமையானவர் என்று என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார ஒரு நண்பர்்!! அந்த அளவுக்கு தீவிரமான ரசிகர்கள் அவருக்கு உண்டு.
அந்த சண்டை இப்பொழுது இங்கே வேண்டாம்,ஆனால் வித்யாசகர் இசையில் நமக்கு காணக்கிடைக்கும் "இன்ஸ்பிரேஷன்ஸ்" வகையறாக்கள் சிலவற்றை பார்க்கலாமா??
சந்திரமுகி!!
இந்த படத்தை பற்றி என்ன சொல்வது?? தலைவர் படம்!! சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு மலையாளப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட ் இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை!! :-) இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் "ரா ரா" என துவங்கும் பாடல். ஆனால் இந்த பாடல் கன்னட படத்தில் அமைந்த "ரா ரா" பாடலை போலவே தான் இருக்கும்். படமே காபி எனும்போது இந்த பாட்டின் ஒற்றுமை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் "அத்திந்தொம் திந்தியும் தொந்தன திந்தாதினந்தோம்" எனதுவங்கும் பாடல்!! (இறைவா,சொல்லுறதுக்குல்லாற நாக்கு சுலுக்கெடுத்துகிச்சு!! நல்லா எழுதராய்ங்கையா பாட்ட!! :-P)!!!
நல்ல பாடல், அமைதியான ஓட்டம்,இனிமையாக இசைந்து, இருக்கமான மனதை இளக வைக்கும் அழகான பாடல். ஆனால் இந்த பாடல் அட்டை காபி என்ற விஷயம் எனக்கு வெகு நாட்களாக தெரியாது.
அட!! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா??? நாடான் பாட்டு எனும் கேரள நாட்டுப்புற பாட்டை நீங்களும் கேட்டால்தான் உங்களுக்கும் புரியும். கேரள நண்பர்கள் இதை பற்றி பின்னூட்டத்தில் மேலும் தகவல்களை அளித்தால் நன்றாக இருக்கும்!! :-)
அத்திந்தோம் - சந்திரமுகி
அத்திந்தோம் - நாடான் பாட்டு
அடுத்ததா நாம பாக்க போறது அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த "கர்ணா" என்ற படத்தில் வரும் பாடல். வித்யாசாகரை நான் கவனிக்க ஆரம்பித்த படம் என்றால் அது கர்ணா படம்தான்.அந்த படத்தில் வரும் "மலரே மௌனமா" எனும் பாடல் என்னை அப்படியே உருக வைத்து விடும்.அருமையான ஹிந்துஸ்தானி இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகியின குரல் இழைந்து குழைந்து இதயத்தை தாலாட்டு பாடி தூங்க வைத்து விடும்!! ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போவது வேறு ஒரு பாடல்.
படத்தில் "ஏய் ஷப்பா ஏய் ஷப்பா' என்று ஒரு பாட்டு.மத்திய கிழக்கு நாடுகளின் இசை பாணி பாட்டில் அமைந்த வேகமான பாட்டு.நல்ல ரசிக்கும்படியாக, படத்தில் இயனக்குனரின் தேவையை நிறைவேர்த்தக்கூடிய பாட்டு.இந்த பாட்டு ஒரு ஈயடிச்சான் காபி என்று உங்களுக்கு தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)
ஹே ஷப்பா - கர்ணா
ஏய் சப்பா
இது வரை முழுப்பாடல் காபியை பார்த்தொமல்லவா இப்பொழுது பாடலின் ஒரு பகுதி மட்டும் முழுவதுமாக காபி அடிக்கப்பட்ட சில தருணங்களை பார்க்கலாம். :-)
தீராத தம்மு வேணும் - பார்த்தீபன் கனவு
லையோலை லயலோ.........
பார்த்தீங்களா?? இதே போல இன்னொரு பிட் இப்போ கேளுங்க!! :-)
என்ன செய்ய - பார்த்தீபன் கனவு
ஃப்யூகோ - ஷைன்
Powered by Podbean.com
ஹ்ம்ம்ம்!!
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை!! :-)
அடுத்த முறை இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்!!
வரட்டா?? :-)
நன்றி :
http://www.itwofs.com/
15 comments:
இதெல்லாம் சகஜமாகிவிட்டது.
அடுத்து யுவனா?
அந்த "லூசுப் பெண்ணே" பாட்டு கூட அப்பட்டமான காப்பி தான் போல இருக்கு.இங்கு வானொலியில் ஒரு ஆங்கில பாடல் ஒலிபரப்பினார்கள்..அப்படியே இருந்தது.
சும்மா அடிச்சு தூள் கெளப்பறீங்க.
grass itching...cvr kalakuringa :D
unga friend paavam.itha padicha avaru manasu kastam padume.hehe
thalaiva, unga thagavalgal ellaamey arumiyaa irundhuchu..idhodu innum sila copy aditha padalgal neenga nabhavey mudiyaadha alavukku vidhyaasagar avaragal copy adichu irukkaar...Anbe sivam endra padathil anbe sivan enna thuvangum padalil varum pinnani isai ..naatukkoru nallavan endra rajini padathil irundhu copy adikka pattadhu..unnithu gavanithal theriyavarum....
@குமார்
ஈயடிச்சான் காபி அடிப்பது இன்றைய இசை உலகில் சாதாரணமாகி விட்டது என்று நீங்கள் கூறுவதை கேட்டால் சிறிது வருத்தமாகத்தான் இருக்கிறது.
அடுத்த பாகத்தில் யுவனை பற்றி போட்டு விடுவோம்!!
சரியா??? ;-)
@உங்கள் தமிழன்
நன்றி எங்கள் தமிழரே!!! :-)
@துர்கா
வாங்க அக்கா!!
உண்மை சில சமயம் கசக்கத்தான் செய்யும்!! என்ன பண்ணுறது!! :-)))
@கார்த்தி
"நாட்டுக்கொரு நல்லவன்" படத்துல ஒரு பாட்டுதான் ஞாபகம் வருது!!
நான் அந்த படம் பாக்கல , அதனால பின்னனி இசை பற்றி தெரியவில்லை!!
எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்டு பார்க்க வேண்டும்!! ;-)
//கேரள நண்பர்கள் இதை பற்றி பின்னூட்டத்தில் மேலும் தகவல்களை அளித்தால் நன்றாக இருக்கும்!! :-)//
துர்கா...CVR எதற்கு சேச்சிகளைத் தேடுவதில் முனைப்பாக இருக்கார்?
//இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட//
Note this point, Your Honour!
//அத்திந்தொம் திந்தியும் தொந்தன திந்தாதி னந்தோம்" எனதுவங்கும் பாடல்!! (இறைவா,சொல்லுறதுக்குல்லாற நாக்கு சுலுக்கெடுத்துகிச்சு!!//
இப்படிச் சுளுக்கு எடுக்கறதுக்குன்னே/
சொல்லறத்துக்குன்னே கொன்னக்கோல் என்ற கலை உள்ளது. முடிந்தால் இசை இன்பத்தில் அதைப் பற்றியும் போடுங்கள் CVR!
நானும் இந்த குட்டையில் தான் இருக்கேன் என்று நம்ம வித்யாவும் பண்ணி இருக்கார்.
இதில் சில சமயம் நம் இயக்குனர்கள் பங்கும் இருக்கு, அந்த பாட்டு மாதிரி வேணும் என கேட்க, அந்த பாட்டு மாதிரி என்ன அதே பாட்ட போட்டு கொடுத்துறேன் என்று போட்டு விடுகிறார்கள்.
சில பாடல்களை இவர் தழுவி இசை அமைத்து இருந்தாலும் வித்யாசாகர் ஒரு நல்ல, கவனிக்க கூடிய, நம்ப கூடிய, காதை அதிகம் காயப்படுத்தா மெலடி தரக் கூடி இசையமைப்பாளர் என்பது உண்மை.
உங்களது சென்ற (ஜாஸ் பற்றிய) பதிவிலேயே குறிப்பிட வேண்டுமென்று நினைத்தேன். 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் reggae திறமையைப் பற்றி புளகாங்கிதமடைந்து ஒரு பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதில் உங்கள் உதாரணப் பாட்டான 'முஸ்தஃபா முஸ்தஃபா' என்னும் பாடல் Carlos Santanaவின் Esperando என்ற பாடலின் clever imitation.
பிறகு 'ஹே ஷப்பா' - தமிழ் பாடல் ஒரு அரபிப் பாடலின் காப்பி மட்டுமல்ல. அதே கலைஞரின் இரு பாடல்களிலிருந்து சுடப்பட்ட பாகங்களைக் கொண்டதுதான் அந்தத் தமிழ் பாட்டு. பாடலின் intro இசை Les Ailes (by Khaled) என்ற பாடலின் intro இசையாகும். வரிகள் பாடல் மெட்டு நீங்கள் குறிப்பிட்ட Chebba (Khaled) என்ற பாடலின் மெட்டுதான். இந்த இரு பாடல்களுமே Khaledஇன் Nssi Nssi என்ற ஆல்பத்தில் இடம்பெற்றவை.
இன்னொன்று - தேவாவின் இசையில் வந்த நேருக்கு நேர் படத்தின் 'மனம் விரும்புதே' பாடலை இறக்குமதி செய்ய வெளி மாநிலம் / வெளிநாடுகளுக்கெல்லாம் அவர் செல்லவில்லை. ஒரு தமிழரான இசை விற்பன்னர் எல். சுப்ரமணியத்தின் Motherland (from his jazz fusion album "Super Instinct") என்ற instrumentalஇன் அப்பட்டமான நகல்தான் அந்த நேருக்கு நேர் படப் பாட்டின் மெட்டு.
நான் கூறுவதைவிட விலாவாரியாக இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். நமது 'இசை ஞாநிகள்', 'இசைப்புயல்கள்', 'மெல்லிசை மன்னர்கள்' ஆகியவர்களின் தனித் திறமைகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இசையமைப்பு என்ற பெயரில் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்காகக் கிண்டியதெல்லாம் வெறும் உப்புமாதான்.
இந்நிலையில் சிலர் தமிழ்திரையில் ஜாஸ், தமிழ்த்திரையில் சுஃபி என்று ஆய்வுக் கட்டுரை levelலுக்கு எழுதும்போது சிரிப்புதான் வருகிறது.
//ஆனால் அவர்கள் இசையமைப்பு என்ற பெயரில் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்காகக் கிண்டியதெல்லாம் வெறும் உப்புமாதான். //
அது எப்படிங்க ஒரு சில ஏன் பல பாடல்களாவே இருக்கட்டும். அதை வைத்து ஒட்டு மொத்தமாக அவர்கள் இசையமைத்தது எல்லாம் உப்புமா என்று முடிவுக்கு வந்து வீட்டீர்கள். நீங்க கூறியது போல அவர்கள் சில பாடல்களை அச்சு பிசுக்காமல் அப்படி எடுத்து போட்டு உள்ளார்கள் என்பது உண்மை தான். அது தவறும் கூட. அடுத்தவர்களின் சிந்தனை எடுத்தாள்வது மிகவும் தவறு தான்.
அதற்காக அவர்களின் ஒட்டு மொத்த இசைப்பயணத்தையும் உப்புமா என்று ஒதுக்கி விட முடியாது.
எம்.எஸ்.வி, இளையராஜா எல்லாம் எத்தனை ஆண்டுகளாக இசை அமைத்து கொண்டு உள்ளார்கள். எத்தனை அற்புதமான இசையை கொடுத்து உள்ளார்கள். அவற்றில் பல தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத பாடல்கள். சில உப்புமா பாடல்களும் உண்டு. படத்துக்கு ஒரு பாடல் என்றால் கூட அவற்றின் எண்ணிக்கை குறைவு தான்.
அத்தியுந்திந்தோம்...மலையாள நாட்டு நாடான் பாட்டு என்று அழைக்கப்படும். மலைநாட்டு மக்களின் நாட்டுப்புறப்பாட்டு. சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரியின் இசையில்....ஸ்வப்னம் என்று நினைக்கிறேன்....அதில் வாணி ஜெயராம் "நாடான் பாட்டிலே மைனா...நாராயணக்கிளி மைனா" என்று பாடுவார். அந்த நாடான் பாட்டுதான் இந்தப் பாட்டு.
// நான் கூறுவதைவிட விலாவாரியாக இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். நமது 'இசை ஞாநிகள்', 'இசைப்புயல்கள்', 'மெல்லிசை மன்னர்கள்' ஆகியவர்களின் தனித் திறமைகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இசையமைப்பு என்ற பெயரில் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்காகக் கிண்டியதெல்லாம் வெறும் உப்புமாதான். //
நண்பரே..இந்தக் கருத்தோடு முழுமையாக என்னால் ஒத்துப் போக முடியவில்லை. நீங்கள் குடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன். அதில் மெல்லிசை மன்னருக்கு inspired என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு heavily inspired...ஆனா மத்தவங்களுக்கெல்லாம் அட்டக்காப்பீன்னு போட்டிருக்கு.
மெல்லிசை மன்னராகட்டும் இளையராஜாவாகட்டும்...உப்புமாவாகவே கிண்டினார்கள் என்று நான் நினைக்கவில்லை. உப்புமா கிண்டுகிறவர்கள் எல்லாம் இன்றைக்குக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் வெறும் உப்புமா நாள்பட இருக்காது. ஊசிப் போகும்.
ஆனா ஒன்னு..உப்புமான்னே வெச்சுக்கிட்டாலும்...இந்த உப்புமாவே இன்னும் ருசியா இருக்குதே. விசு 50ல வந்தாருன்னு நெனைக்கிறேன். பல பாட்டுகள இன்னமும் கேக்குறோம். இளையராஜாவின் ஆரம்பகாலப் பாட்டுகளையும் ரசிக்கிறோம். உப்புமான்னு சொல்றத விட...நேத்து வெச்ச மீன் கொழம்புன்னு சொல்லலாமா?
வயசானவங்கள, அனுபவசாலிங்கள மதிக்கணும்ங்கறதில முழு உடன்பாடு. அதுக்காக அவங்களை விமர்சனத்துக்கு இடமில்லாம ஏத்துக்கணும்ங்கறத என்னால ஒப்புக் கொள்ள முடியல. அயல் சங்கீதங்களிலிருந்து அப்படியே எடுத்துப் போடுறது இன்னிக்கி நேத்திக்கி நடக்கிறது கிடையாது. ஹிந்தி பாடல்களை காப்பியடிக்கறது, ஆங்கிலப்பாடல்களை காப்பியடிக்கிறது, இதெல்லாம் அறுபதுகளிலேயே இருந்து வந்த பழக்கம்தான். மேதமை இருக்குமிடத்தில் திருட்டு(?) இருக்க முடியுமாங்கற கேள்வியை கேக்காமலே விட்டுடுவோம். இவர்களை நான் ஒதுக்குவதற்கு அது மட்டும் காரணமில்லை.
முக்கியமா பெரும்பாலான பாடல்களின் சராசரித்தனம், அரைத்த மாவையை அரைத்த நெடுங்கால வரலாறு, TMS போன்ற பாடகர்களுக்குக் அளித்த ஆதரவு :) ஆகிய பல நுணுக்கமான காரணங்களை சொல்லலாம்.
பெரும்பாலும் இவங்க பாடல்கள்ல இசைன்னா தபலா மட்டும்தான் வெளில கேட்கும் (but for interludes). இதுக்கு தொழில்நுட்ப குறைபாடு காரணமா, இல்ல interlude வர்ற வரைக்கும் மத்தவங்கல்லாம் கைய கட்டிக்கிட்டு நின்னாங்களான்னு தெரியல. 60s / 70s தொடக்கத்தில் இருந்த ஹிந்தி இசையமைப்பாளர்கள் (பேரெல்லாம் தெரியாது) அளவுக்கு இவங்களோட பாடல்களில் ஆழம் இருந்த மாதிரி தெரியல.
ஒரு plus point, nativity. Nativity ததும்பும் பாடல்களை நானும் சிலாகித்து பதிவெழுதியிருக்கேன். அதுக்கு மேல தமிழ்த் திரையிசையில தேடறதுக்கு வேறெதுவும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல. இவை என்னோட கருத்துகள். :)
//துர்கா...CVR எதற்கு சேச்சிகளைத் தேடுவதில் முனைப்பாக இருக்கார்?
//இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட//
Note this point, Your Honour!
//
அண்ணா,உண்மை எனக்குத் தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியவில்லை.பயமாக இருக்கின்றது :(
சிவிஆரின் இரசிக பெருமக்கள் எல்லாம் சிங்கப்பூர் வரை ஆட்டோ அனுப்புவோம் என்று மிரட்டி விட்டார்கள்.
இனிமேல் எல்லாமே உங்கள் கையில்தான் அண்ணா :(
Post a Comment