Monday, September 22, 2008

புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!

வெற்றியாளர்கள்: (அனைத்து விடைகளையும் சரியாகச் சொன்னவர்கள்):
1. தியாகராஜன்
2. ஜிரா
3. முகிலரசி-தமிழரசன்
4. ப்ரசன்னா
5. திராச

வென்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு,
ஐயா குன்னக்குடி அவர்களின் இன்னுயிர், அவர் மிகவும் போற்றி வணங்கிய முருகப் பெருமான் திருவடிக் கழல்களில் இளைப்பாறி, காற்சிலம்பு கிண்கிணி கீதமாய் இசைக்க அஞ்சலிகள்!




மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா, மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!
குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!

* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! :)
அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! :)

* அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!
மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!



* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!
வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!

* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!

* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!

புகழில் சிக்கிய குன்னக்குடி, சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வதில் வல்லவர்!
திரைப்பட நடிகை சுகன்யா-வை வைத்து அவர் ஒரு படம் எடுத்து, அது வெளி வராமலே போனது-ன்னு நினைக்கிறேன்! அதில் சுகன்யா-வை, தியாகராஜ ஆராதனைப் பந்தலில் உட்கார வைத்துத் தனியாக ஒளிப்பதிவு செய்தது, பெரும் கலாட்டா ஆனது! :)

எது எப்படியோ, குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள் தான் இசைக் கலைஞர்களும்! குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் வேண்டும்!
கர்நாடக/தமிழிசைகளை எளிய மக்களும் ரசிக்கச் செய்து, அவற்றை இலக்கண இசையாய் மட்டும் இல்லாமல், மக்கள் இசையாக்கிய மாபெரும் கலைஞரை, வணங்கி மகிழ்வோம்!

சென்னை புரசைவாக்கத்தில், எங்கள் தெருவில், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அவர் வாசித்த போது,
சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் வயலினில் விரலை வளைத்தே கொடுத்த அட்டகாசம் இன்றும் என் நினைவில் இருக்கு!

அவர் மறைந்த போது, இசை இன்பம் வலைப்பூவில் அஞ்சலிப் பதிவு ஒன்று இட எண்ணி இருந்தேன். வேறு பல காரணங்களால் இட முடியாமற் போனது. அதான் இப்போ இந்தப் புதிரா புனிதமா? பார்க்கலாம், தமிழ் சினிமா ரசிகர்கள், குன்னக்குடியை எத்தனை தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று!

ஓவர் டு குன்னக்குடி! விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!




1

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்துக்கு, குன்னக்குடி தான் இசை.

படத்தில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேலி பேசும் நவநாகரீகப் பெண்மணிகளுக்குப் போட்டியாகச் சில தியாகராஜ கீர்த்தனைகளை மேற்கத்திய இசையில் பாடுவார் எம்.ஜி.ஆர்! :))

ட்யூன் போட்டது சாட்சாத் நம்ம குன்னக்குடி தான்! என்ன படம்? - சாரி, நோ சாய்ஸ்! :)

1

நவரத்தினம்

எம்.ஜி.ஆர்-உடன், ஒன்பது கதாநாயகிகள்-ன்னு நினைக்கிறேன்! லதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஜரீனா வகாப் -ன்னு பட்டாளம்! பின்னூட்டத்தில் மற்ற தகவல்களைச் சொல்கிறேன்!

2

கொட்டாம் பட்டி ரோட்டிலே, குட்டி போற ஷோக்கிலே, நான் ரொட்டியைத் தான் தின்பேனா? குட்டியைத் தான் பார்ப்பேனா-ன்னு ஒரு சரி குத்துப் பாட்டைப் போட்டாரு குன்னக்குடி! வழக்கம் போல பயங்கர எதிர்ப்பு! :)

அதுவும் ஒரு இசைக் கலைஞரைக் கதாநாயகனாகக் காட்டும் படம்! என்ன படம்?

2

அ) வா ராஜா வா

ஆ) தோடி ராகம்

இ) உன்னால் முடியும் தம்பி

ஈ) சிந்து பைரவி

3

திருப்பதி மலை வாழும் வேங்கடேசா - சீர்காழி பாட, குன்னக்குடி இசையமைத்த பாட்டு! திருமலை தென்குமரி என்னும் படத்தில்!

பாட்டுக்காக கோயில் மணிகளை ஸ்டூடியோ முழுக்க அதிர விடுவாராம் குன்னக்குடி! நடு நடுவில் சுலோகங்களை வயலினில் வாசித்துக் காட்ட, உடனுக்குடன் சீர்காழி பாடினாராம்!

என்ன சுலோகத்தை வாசித்துக் காட்டினார்?

3

அ) பல்லாண்டு-பல்லாண்டு

ஆ) புருஷ சூக்தம்

இ) சுப்ரபாதம்

ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்

4

மருதமலை மாமணியே முருகய்யா! - இதுக்கும் குன்னக்குடி தான் இசை! மெட்டுக்குப் பாட்டு எழுதாத கவிஞர் ஒருவர், குன்னக்குடி வயலினில் போட்டார் என்பதற்காகவே, மெட்டு போட்ட அடுத்த நிமிஷம், சுடச்சுட பாட்டும் எழுதிக் கொடுத்தாராம்!

தத்தித் தரிகட, தத்தித் தரிகிட தோம் தோம் - சத்தித் திருமகன், முத்துக் குமரனை மற வேன்! யான் மறவேன்! - யார் அந்தக் கவிஞர்?

4

அ) வாலி

ஆ) கண்ணதாசன்

இ) பூவை செங்குட்டுவன்

ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்

5

சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது!

அவர் வாசிச்ச மழை தருவிக்கும் ராகத்தின் பெயர் என்ன?

5

அ) கல்யாணி

ஆ) மேக சந்தேசம்

இ) சங்கராபரணம்

ஈ) அம்ருத வர்ஷிணி

6

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்! - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்!

கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க!

இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்!

சினிமாவில் பாட்டைப் பாடிய வள்ளி-தேவயானை ஜோடி யார்?

6

அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி

ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா

இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி

ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்

7அந்நியன் படத்தில், குன்னக்குடி ஒரு சீனில் தோன்றுவார்! எந்த சீன்? 7

அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன்

ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன்

இ) திருவையாறு ஆராதனை சீன்

ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்!

8

COLORS என்ற ஒரு ஆல்பம்! இதில் வயலின்-தபேலா என்று ஒரு Fusion! (தொகுப்பிசை).

குன்னக்குடியும், ஜாஹீர் உசேனும் செய்த இந்த ஆல்பத்துக்கு, கீ-போர்ட் வாசித்த பிரபலம் யார்? அவர் அப்போதைய பெயர் என்ன? - சாரி நோ சாய்ஸ்! :)

8

இன்றைய ஏ.ஆர்.ரகுமான்

அன்றைய திலீப் குமார்

9குன்னக்குடி தானே "கண்டுபிடிச்ச" ராகத்தின் பெயர் என்ன? :)

9

அ) மஹதி

ஆ) ராமச்சந்திரிகா

இ) ஜெயலலிதா

ஈ) இளையராகம்

10

சினிமாவில் பாடகர்கள் முகம் காட்டுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான்! குன்னக்குடி, தான் இசையமைத்த பல படங்களில், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாது, தன் அணியினரையும் முன்னிறுத்துவார்! புகழ்ச்சி விரும்பி என்று அவரைப் பல பேர் சொன்னாலும், அவரின் இந்த நல்ல முகத்தை மட்டும் பார்க்க அவர்கள் மறந்து விடுகின்றனர்!

பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, டி.எம்.எஸ், ரமணி அம்மாள், மதுரை சோமு என்று குன்னக்குடி இசையில் பாடிய அத்தனை பேரும் முகம் காட்டிய திரைப்படம் எது?

10

அ) கந்தன் கருணை

ஆ) தெய்வம்

இ) அகத்தியர்

ஈ) ராஜ ராஜ சோழன்



மருதமலை மாமணியே முருகய்யா, வயலினில்!



ஒட்டகத்தைக் கட்டிக்கோ, வயலினில்!

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) வா ராஜா வா ஆ) தோடி ராகம் இ) உன்னால் முடியும் தம்பி ஈ) சிந்து பைரவி

3 அ) பல்லாண்டு-பல்லாண்டு ஆ) புருஷ சூக்தம் இ) சுப்ரபாதம் ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்
4 அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) பூவை செங்குட்டுவன் ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்
5 அ) கல்யாணி ஆ) மேக சந்தேசம் இ) சங்கராபரணம் ஈ) அம்ருத வர்ஷிணி
6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்
7 அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன் ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன் இ) திருவையாறு ஆராதனை சீன் ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்!
8
9 அ) மஹதி ஆ) ராமச்சந்திரிகா இ) ஜெயலலிதா ஈ) இளையராகம்
10 அ) கந்தன் கருணை ஆ) தெய்வம் இ) அகத்தியர் ஈ) ராஜ ராஜ சோழன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP