Sunday, August 26, 2007

இசை விளையாட்டு விளையாடலாம் வரீங்களா?

வணக்கம் மக்களே!!
ஒரு சுவையான இசை விளையாட்டோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!

நாம பாட்டு கேக்கும் போது பாட்டின் நடுவில் வரும் இசையை ரசித்திருக்கிறீர்களா?? பல பாட்டுகளில், பாட்டு ஆரம்பித்து இசையை நாம் உள்வாங்கி சுவைக்க ஆரம்பிக்க, இந்த இடையில் வரும் இசை பாட்டின் தடத்தை நம் மனதில் திடமாக பதித்து விடும். பல இசையமைப்பாளர்களுக்கு தன் திறமையை நிரூப்பிக்க இந்த நடு பகுதிதான் வசதியான ஆடுகளம். அழகான மெட்டுகளில் பல்வேறு இசைகருவிகளின் இனிமையான இசையை கோர்த்து நம் ரசனைக்கு விருந்து படைத்து விடுவார்கள்.

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் விளையாட்டும் இந்த நடுப்பகுதி சம்பந்தப்பட்டதுதான்!!

நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் தமிழ் சினிமாவிலிருந்து ஐந்து பாடல்களின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி உங்கள் முன்னே படைத்திருக்கிறேன். அதை கேட்டு எந்த பாடல் என்று நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். எனக்கு என்னமோ நீங்கள் நொடிகளில் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தான் தோன்றுகிறது!!!
ஆனால் ஒவ்வொரு பாடலும் நான் பெரிதும் விரும்பி கேட்கும் இசை,அதுவுமில்லாமல் உங்களுக்கு இது சுவையான விலையாட்டாகவும் இருக்கும்!

கேட்டுதான் பாருங்களேன்!! கேட்டு விட்டு விடைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
முடிவுகளை நான் நாளைக்கு அறிவிக்கிறேன்!! :-)

பிற்சேர்க்கை
---------------
இந்த பதிவை இடும்போது மிக சுலபமாக எல்லோரும் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்தேன்!! ஆனால் உங்கள் திறமைக்கு சவாலாகவும்,இனிமையான இசையை உங்கள் மனதில் உலவ ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த போட்டி அமைந்ததில் மகிழ்ச்சி.
அடுத்த முறை பாடலின் கொஞ்சம் சுலபமாகவும் மேலும் சுவை கூட்டவும் முயற்சிகள் செய்கிறேன் (அதற்கான உங்கள் யோசனைகளை தயவு செய்து பின்னூட்டவும்)
விடைகள் இதோ!! :-)

பாடல் 1


விடை:
படம் - உள்ளம் கேட்குமே
பாடல் - என்னை பந்தாடப்பிறந்தவனே....


----------------------------------------------

பாடல் 2


விடை:
படம் - உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் - பச்சைக்கிளி முத்துச்சரம்....


----------------------------------------------

பாடல் 3


விடை:
படம் - ஆலயமணி
பாடல் - தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே....


----------------------------------------------

பாடல் 4


விடை:
படம் - சூரசம்ஹாரம்
பாடல் - நீலக்குயிலே....


----------------------------------------------

பாடல் 5


விடை:
படம் - சங்கமம்
பாடல் - முதல் முறை....


----------------------------------------------

விடைகள் அளித்த அனைவருக்கும் நன்றி (Gtalk-இல் மட்டும் விடையளித்தவர்களையும் சேர்த்து!! :-))

சகாதேவன் - 3ஆவது கேள்வி

முத்துலெட்சுமி - 2 ஆவது,5 ஆவது படம் மட்டும் சரியா கண்டு பிடிச்சாங்க,ஆனா பாட்டு தப்பு!! :-)

பாலராஜன் கீதா - 2 மற்றும் 3 ஆவது கேல்விகளுக்கு சரியான விடை அளித்தார், 3ஆவது கேள்விக்கு படத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டிருந்தார்

ப்ளாகேஸ்வரி - முதல் கேள்விக்கு மட்டும் சரியான விடை

G3 - 1,2 மற்றும் 5ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

K4K - 1 மற்றும் 5 ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

CDK - 1 மற்றும் 2ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

மை ஃபிரண்ட் - 1,2 மற்றும் 5

தம்பி - 1 மற்றும் 5

ஜிரா - 2 மற்றும் 3

அனானி - 4
கடைசி வரைக்கும் யாராலையும் 4 ஆவது கண்டு பிடிக்க முடியலையே என்று நினைத்த போது ,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து சரியான விடையை சொன்ன அனானி நண்பர் நம் கவனத்தை பெறுகிறார்.
:-)

இது தவிர இசை இன்பம் அன்பர்கள் கே.ஆர்.எஸ் மற்றும் ஜீவாவின் பதில்கள் இதோ

கே.ஆர்.எஸ் - 1,2,3,5 (இது தான் டாப் ஸ்கோர்!! :-))
ஜீவா - 1ஆவது பாட்டுக்கு சரியான விடை!!

பங்கு பெற்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!! :-)

Thursday, August 02, 2007

நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)

எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை கேட்ட பின் முன்பு எப்பொழுதோ எம்.எஸ்ஸின் தெய்வீக குரலில் இந்த பாட்டை கேட்ட ஞாபகம் வந்து விட்டது.
கே.ஆர்.எஸ் அண்ணாவின் கருணையால் இணையத்தில் அதற்கான ஒலிப்பேழை கிடைத்தது. அதை திரும்ப திரும்ப கேட்க கேட்க இவ்வளவு அழகான பாடலை நம் இனிய தமிழில் கேட்டால் என்ன என்று தோன்றியது!!! எனக்கு தெரிந்து இந்த பாட்டிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியாது. அதுவுமில்லாமல் எனக்கு தெலுங்கு வேறு தெலுசு லேது!! :-(
என்ன செய்வது????

சகலாகலா வல்லவர் கே.ஆர்.எஸ் அண்ணாவையே திரும்பவும் துணைக்கழைத்தேன். எனக்காக மெனக்கெட்டு இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தார். அதை பார்த்ததில் இருந்து மனதில் ஒரே குஷி. வீட்டிற்கு வந்ததில் இருந்து வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை திரும்ப திரும்பக்கேட்டு கீர்த்தனையில் மூழ்கியே போய் விட்டேன்.
அந்த மூடில் பிறந்தது தான் கீழே நீங்கள் பார்க்கும் அடியேனின் மொழிபெயர்ப்பு. பாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் பொருளுக்கு பொருந்தியும் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து எழுதியதால் ஆங்காங்கே வட மொழி சொற்கள் வருவதையும்,வேறு சில விட்டுக்கொடுக்கல்களையும் தவிர்க்க முடியவில்லை (Some compromises had to be made).

வரிகளை படிக்கும் போது எம்.எஸ்ஸின் இந்த ஒலி கோப்பை கேட்டுக்கொண்டே படித்தால்,கீர்த்தனையின் சுவையை ரசிக்கலாம்.

பாம்பே சகோதரிகளின் குரலில் அமைந்த ஒலிப்பேழையும் உங்களுக்காக உண்டு!!

பாட்டில் இரண்டாவது பத்தி ஒலிப்பேழையில் பாடப்படவில்லை என்பதால் பாட்டு கேக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு மூன்றாவது பத்திக்கு நேரடியாக தாவி விடுங்கள்!! :-)

ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : அன்னமாச்சாரியா


நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ?
கண்களில் மறைவது பேரின்பமோ!!

பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??
எதிரினில் விரிவது, பிரபஞ்சமோ
கடைசியில் கை சேரும் பேரின்பமோ

உண்ணும் உணவும்,உடுத்திடும் உடையும்
இதன் இடை இவண் பணி நாடகமோ!!??
இதில் தோன்றும, இடர் தரும் உபயகர்மங்களும்
இவை தாண்டி இறை சேர்ந்தால்,பேரின்பமோ

தங்கும் பாவமும்,தீராத புண்யமும்
நகைக்கிற காலமும் நாடகமோ
எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனை அன்றி
எது தரும் குறைவில்லா,பேரின்பமோ.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP