புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!
முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
வெற்றியாளர்கள்: (அனைத்து விடைகளையும் சரியாகச் சொன்னவர்கள்):
1. தியாகராஜன்
2. ஜிரா
3. முகிலரசி-தமிழரசன்
4. ப்ரசன்னா
5. திராச
வென்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு,
ஐயா குன்னக்குடி அவர்களின் இன்னுயிர், அவர் மிகவும் போற்றி வணங்கிய முருகப் பெருமான் திருவடிக் கழல்களில் இளைப்பாறி, காற்சிலம்பு கிண்கிணி கீதமாய் இசைக்க அஞ்சலிகள்!
மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா, மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!
குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!
* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! :)
அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! :)
* அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!
மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!
* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!
வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!
* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!
* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!
புகழில் சிக்கிய குன்னக்குடி, சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வதில் வல்லவர்!
திரைப்பட நடிகை சுகன்யா-வை வைத்து அவர் ஒரு படம் எடுத்து, அது வெளி வராமலே போனது-ன்னு நினைக்கிறேன்! அதில் சுகன்யா-வை, தியாகராஜ ஆராதனைப் பந்தலில் உட்கார வைத்துத் தனியாக ஒளிப்பதிவு செய்தது, பெரும் கலாட்டா ஆனது! :)
எது எப்படியோ, குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள் தான் இசைக் கலைஞர்களும்! குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் வேண்டும்!
கர்நாடக/தமிழிசைகளை எளிய மக்களும் ரசிக்கச் செய்து, அவற்றை இலக்கண இசையாய் மட்டும் இல்லாமல், மக்கள் இசையாக்கிய மாபெரும் கலைஞரை, வணங்கி மகிழ்வோம்!
சென்னை புரசைவாக்கத்தில், எங்கள் தெருவில், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அவர் வாசித்த போது,
சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் வயலினில் விரலை வளைத்தே கொடுத்த அட்டகாசம் இன்றும் என் நினைவில் இருக்கு!
அவர் மறைந்த போது, இசை இன்பம் வலைப்பூவில் அஞ்சலிப் பதிவு ஒன்று இட எண்ணி இருந்தேன். வேறு பல காரணங்களால் இட முடியாமற் போனது. அதான் இப்போ இந்தப் புதிரா புனிதமா? பார்க்கலாம், தமிழ் சினிமா ரசிகர்கள், குன்னக்குடியை எத்தனை தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று!
ஓவர் டு குன்னக்குடி! விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!
1 | புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்துக்கு, குன்னக்குடி தான் இசை. படத்தில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேலி பேசும் நவநாகரீகப் பெண்மணிகளுக்குப் போட்டியாகச் சில தியாகராஜ கீர்த்தனைகளை மேற்கத்திய இசையில் பாடுவார் எம்.ஜி.ஆர்! :)) ட்யூன் போட்டது சாட்சாத் நம்ம குன்னக்குடி தான்! என்ன படம்? - சாரி, நோ சாய்ஸ்! :) | 1 நவரத்தினம் எம்.ஜி.ஆர்-உடன், ஒன்பது கதாநாயகிகள்-ன்னு நினைக்கிறேன்! லதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஜரீனா வகாப் -ன்னு பட்டாளம்! பின்னூட்டத்தில் மற்ற தகவல்களைச் சொல்கிறேன்! |
2 | கொட்டாம் பட்டி ரோட்டிலே, குட்டி போற ஷோக்கிலே, நான் ரொட்டியைத் தான் தின்பேனா? குட்டியைத் தான் பார்ப்பேனா-ன்னு ஒரு சரி குத்துப் பாட்டைப் போட்டாரு குன்னக்குடி! வழக்கம் போல பயங்கர எதிர்ப்பு! :) அதுவும் ஒரு இசைக் கலைஞரைக் கதாநாயகனாகக் காட்டும் படம்! என்ன படம்? | 2 அ) வா ராஜா வா ஆ) தோடி ராகம் இ) உன்னால் முடியும் தம்பி ஈ) சிந்து பைரவி |
3 | திருப்பதி மலை வாழும் வேங்கடேசா - சீர்காழி பாட, குன்னக்குடி இசையமைத்த பாட்டு! திருமலை தென்குமரி என்னும் படத்தில்! பாட்டுக்காக கோயில் மணிகளை ஸ்டூடியோ முழுக்க அதிர விடுவாராம் குன்னக்குடி! நடு நடுவில் சுலோகங்களை வயலினில் வாசித்துக் காட்ட, உடனுக்குடன் சீர்காழி பாடினாராம்! என்ன சுலோகத்தை வாசித்துக் காட்டினார்? | 3 அ) பல்லாண்டு-பல்லாண்டு ஆ) புருஷ சூக்தம் இ) சுப்ரபாதம் ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம் |
4 | மருதமலை மாமணியே முருகய்யா! - இதுக்கும் குன்னக்குடி தான் இசை! மெட்டுக்குப் பாட்டு எழுதாத கவிஞர் ஒருவர், குன்னக்குடி வயலினில் போட்டார் என்பதற்காகவே, மெட்டு போட்ட அடுத்த நிமிஷம், சுடச்சுட பாட்டும் எழுதிக் கொடுத்தாராம்! தத்தித் தரிகட, தத்தித் தரிகிட தோம் தோம் - சத்தித் திருமகன், முத்துக் குமரனை மற வேன்! யான் மறவேன்! - யார் அந்தக் கவிஞர்? | 4 அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) பூவை செங்குட்டுவன் ஈ) குன்னக்குடி வைத்தியநாதன் |
5 | சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது! அவர் வாசிச்ச மழை தருவிக்கும் ராகத்தின் பெயர் என்ன? | 5 அ) கல்யாணி ஆ) மேக சந்தேசம் இ) சங்கராபரணம் ஈ) அம்ருத வர்ஷிணி |
6 | திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்! - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்! கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க! இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்! சினிமாவில் பாட்டைப் பாடிய வள்ளி-தேவயானை ஜோடி யார்? | 6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம் |
7 | அந்நியன் படத்தில், குன்னக்குடி ஒரு சீனில் தோன்றுவார்! எந்த சீன்? | 7 அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன் ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன் இ) திருவையாறு ஆராதனை சீன் ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்! |
8 | COLORS என்ற ஒரு ஆல்பம்! இதில் வயலின்-தபேலா என்று ஒரு Fusion! (தொகுப்பிசை). குன்னக்குடியும், ஜாஹீர் உசேனும் செய்த இந்த ஆல்பத்துக்கு, கீ-போர்ட் வாசித்த பிரபலம் யார்? அவர் அப்போதைய பெயர் என்ன? - சாரி நோ சாய்ஸ்! :) | 8 இன்றைய ஏ.ஆர்.ரகுமான் அன்றைய திலீப் குமார் |
9 | குன்னக்குடி தானே "கண்டுபிடிச்ச" ராகத்தின் பெயர் என்ன? :) | 9 அ) மஹதி ஆ) ராமச்சந்திரிகா இ) ஜெயலலிதா ஈ) இளையராகம் |
10 | சினிமாவில் பாடகர்கள் முகம் காட்டுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான்! குன்னக்குடி, தான் இசையமைத்த பல படங்களில், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாது, தன் அணியினரையும் முன்னிறுத்துவார்! புகழ்ச்சி விரும்பி என்று அவரைப் பல பேர் சொன்னாலும், அவரின் இந்த நல்ல முகத்தை மட்டும் பார்க்க அவர்கள் மறந்து விடுகின்றனர்! பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, டி.எம்.எஸ், ரமணி அம்மாள், மதுரை சோமு என்று குன்னக்குடி இசையில் பாடிய அத்தனை பேரும் முகம் காட்டிய திரைப்படம் எது? | 10 அ) கந்தன் கருணை ஆ) தெய்வம் இ) அகத்தியர் ஈ) ராஜ ராஜ சோழன் |
மருதமலை மாமணியே முருகய்யா, வயலினில்!
ஒட்டகத்தைக் கட்டிக்கோ, வயலினில்!
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 |
2 அ) வா ராஜா வா ஆ) தோடி ராகம் இ) உன்னால் முடியும் தம்பி ஈ) சிந்து பைரவி |
3 அ) பல்லாண்டு-பல்லாண்டு ஆ) புருஷ சூக்தம் இ) சுப்ரபாதம் ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம் |
4 அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) பூவை செங்குட்டுவன் ஈ) குன்னக்குடி வைத்தியநாதன் |
5 அ) கல்யாணி ஆ) மேக சந்தேசம் இ) சங்கராபரணம் ஈ) அம்ருத வர்ஷிணி |
6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம் |
7 அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன் ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன் இ) திருவையாறு ஆராதனை சீன் ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்! |
8 |
9 அ) மஹதி ஆ) ராமச்சந்திரிகா இ) ஜெயலலிதா ஈ) இளையராகம் |
10 அ) கந்தன் கருணை ஆ) தெய்வம் இ) அகத்தியர் ஈ) ராஜ ராஜ சோழன் |
63 comments:
1. நவரத்தினம்
2. ஆ) தோடி ராகம் - கதாநாயகன் சேஷகோபாலன்
3. இ) சுப்ரபாதம் (வேங்கடேச)
4. ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்
5. ஈ) அம்ருத வர்ஷிணி
6. அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி
7. இ) திருவையாறு ஆராதனை சீன்
8. திலீப் (எ)ஏ.ஆர்.ரஹ்மான்
9. இ) ஜெயலலிதா
10. இ) அகத்தியர்
- சிமுலேஷன்
கோவி அண்ணாவின் மொதப் பின்னூட்டம் வெளியிடப் பட மாட்டாது!
விடைக்கான க்ளுவையும் பொதுப் பின்னூட்டத்தில் கொடுத்தா, பொது மாத்து தான் விழும் அண்ணா! :)
சிமுலேஷன் அண்ணாச்சி வாங்க!
எம்.ஜி.ஆர் படம் அசால்ட்டா கொடுத்துட்டீங்க! சூப்பர்!
அதே போல் ஜாகீர்/குன்னக்குடிக்கு கீ-போர்ட் வாசிச்ச பிரபலம் விடையும் சூப்பர்!
4, 6, 10 தவறு!
மத்த எல்லாம் சரி! ரெண்டாம் ஆட்டம் அடிச்சி ஆடுங்க! :)
= 7/10
அப்ப நான் தான் மீ த பர்ஸ்டா ?
1. Navarathnam
2 ஆ) தோடி ராகம்
3 இ) சுப்ரபாதம்
4 ஆ) கண்ணதாசன்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6 ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8 who else- AR Rehman!
9 இ) ஜெயலலிதா
10 ஆ) தெய்வம்
-thiyagarajan
1. Navarathnam
2 ஆ) தோடி ராகம்
3 இ) சுப்ரபாதம்
4 ஆ) கண்ணதாசன்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6 ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8 who else- AR Rehman!
9 இ) ஜெயலலிதா
10 ஆ) தெய்வம்
thiyagarajan
தியாகராஜன்...
கலக்கி இருக்கீங்க...வாழ்த்துக்கள்!
ஆனா 9.5/10 தான்!
அந்த கீ போர்ட் ப்ளேயரின் முந்தைய பெயரும் சொல்ல வேண்டும்! கேள்விய ஒருக்கா பாருங்க! :)
கோவி.கண்ணன் said...
விடை சொல்லும் அளவுக்கு கிட்னி வேலை செய்யலை, **** ராகம் போட்டார் என்பது தெரியும்.
:)
உன்னத கலைஞனை நினைவு கூறும் இந்த பதிவு பாராட்டத்தக்கது. பதிவுலகினர் சார்பில் கலைஞர்களை போற்றும் நற்செயலுக்கு 'வாழ்க நீ எம்மான்' என்று வாழ்த்துகிறேன்.
இராஜ இராஜ சோழன் படம் பற்றிய தகவலைக் காணும் ? 'தஞ்சை பெரிய கோவில்...பல்லாண்டு வாழ்கவே...' குன்னகுடி இசைதான்
1. காதல் வாகனம்
2 ஆ) தோடி ராகம்
3 அ) பல்லாண்டு-பல்லாண்டு
4 இ) பூவை செங்குட்டுவன்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8 ஏ.ஆர். ரஹமான்
9 அ) மஹதி
10 ஆ) தெய்வம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
2,5,7,8,10 சரி! 8-க்கு இன்னொரு பெயரையும் சொல்லுங்க! :)
=4.5/10
Amendment!
AR reman's name:
Dileep kumar>
thiyagarajan
தியாகராஜன்...கலக்கிட்டீங்க! வாழ்துக்கள்!
=10/10
ஆனால் போட்டி தொடர்ந்து நடக்கும்! மத்த மக்கள்ஸ்-க்காக! :)
கலக்கறீங்க, வாழ்த்துக்கள்!
2. அ) வா ராஜா வா
3. இ) சுப்ரபாதம்
4. இ) பூவை செங்குட்டுவன்
5. ஈ) அம்ருத வர்ஷிணி
6. ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
7. இ) திருவையாறு ஆராதனை சீன்
9. இ) ஜெயலலிதா
10. ஆ) தெய்வம்
1.நேற்று இன்று நாளை ?
2. ஆ ?
3. இ
4. இ
5. இ
6. ஆ
7. இ
8. ரஹ்மான் (திலீப்)
9. இ
10. ஆ
குன்னக்குடியின் இசையை ஏற்காதார் ஏற்காதாரே. விட்டுத்தள்ளுங்கள் அவர்களை. அவர்களுக்கு அவர்களே சீரார். மற்றோர் வேறூரார்.
வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலி. அவரை இழந்து வாடும் சுற்றம் சூழல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
1. நவரத்தினம். இந்தப் படத்துலதான் "குருவிக்கார மச்சானே"ங்குற பாட்டு இருக்கு. ஏ.பி.நாகராஜன் இப்பிடியொரு படத்தை எடுத்திருக்க வேண்டாம்னு மனசுல தோணும். ஆனாலும் படத்துல குன்னக்குடியின் இசைக்காகப் போகலாம். "புரியாததைப் புரிய வைக்கும் புது இடம்...அதைப் புரிந்துகொண்டால் பொழுதெல்லாம் நான் உன்னிடம்...நீ என்னிடம்" பாட்டும் அந்தப் படத்துலதான்.
2. அது தோடி ராகம். மதுரை டி.என்.செஷகோபாலன்-நளினி நடிச்ச படம். அதுல ஷோக்குப் பேர்வழியா வருவாரு டி.என்.செஷகோபாலன். அந்தப் படத்துலதான் "கொட்டாம்பட்டி ரோட்டிலே" பாட்டு. இன்னொரு பாட்டும் நல்லாருக்கும். ஆனா நினைவில்லை.
4. கவியரசர் கண்ணதாசன். தெய்வம் திரைப்படத்துல அத்தனை பாடலும் கவியரசர் கண்ணதாசன் தான் எழுதுனது.இந்தப் படம் வந்தப்ப அவர் மக கல்யாணம். பணமுடையாம். அப்பத்தான் இந்தப் படம் வந்து பணமும் வந்ததாம். அப்பத்தான் கண்ணதாசன் சொன்னாராம்...கண்ணனிடம் கேட்டேன் கொடுக்கவில்லை. கந்தன் கொடுத்தான். அப்படீன்னு.
1. நவரத்தினம்
2 ஆ) தோடி ராகம்
3 இ) சுப்ரபாதம்
4 ஆ) கண்ணதாசன்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6 ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8 A.S.திலீப் குமார்
9 ஈ) இளையராகம்
10 ஆ) தெய்வம்
8. தற்போதைய பெயர் - A.R.ரெஹ்மான்
(தாய்மண்ணே வணக்கம்)
முதல் கேள்விக்கு பதில் சட்னு தெரிந்து விட்டது. "பச்சைகிளிக்கொரு செவந்த பூவினில் தொட்டிலை கட்டி வைத்தேன்னு" ஒரு பாட்டு வரும் மறக்க முடியாத படங்கள்.
KRS,
வழக்கப்படி கொஞ்சம் முயண்றுள்ளேன்!
இரு கேள்விகளுக்கு (கூகிள்) ஆண்டவர் தான் பதில் சொன்னார்!
1 மழை வற்ற ராகம்
2 கொட்டாம் பட்டி ரோட்டில...
3. சுப்ரபாதம்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6 ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8. Dilip Kumar
9 இ) ஜெயலலிதா
10 ஆ) தெய்வம்
குமரன்
1,2,4,8 தப்பு! மத்த எல்லாம் சரி!
அது என்ன fill in the blanks மட்டும் சாய்ஸ்-ல வுடற பழக்கம்? :)
=6/10
கோவி அண்ணா
1, 4, 5 தவறு!
எம்.ஜி.ஆர் படம் உங்களுக்கா தெரியலை? OMG! என்னால நம்ப முடியலை! :(
4 ஆம் கேள்வி கவிஞர் பத்தி சிங்கையே சொல்லும்!
= 7/10
@ஜிரா
1, 2, 4 மட்டுமே முயன்று இருக்கீங்க போல! மூனுமே சரி!
= 3/10
கண்ணனிடம் கேட்டேன் கொடுக்கவில்லை! கந்தனிடம் கேட்டேன், காசு கிடைச்சது!
- ஹா ஹா ஹா!
மருமகன் கிட்ட தானே மாமனின் பணம் இருக்கு! அப்பறம் எப்படி மாமன் கிட்ட போயி கேட்டாராம் கவிஞர்?
கவிஞருக்கு ஒரு பொண்ணு கல்யாணத்துக்கே காசு தேவைப்படுது! பாவம், மாமன் ரெண்டு பொண்ணு கல்யாணத்துக்கான காசை அல்லவா செலவழிச்சி இருக்கான்? விவஸ்தை வேணாம் கவிஞருக்கு? :)))
@சிவமுருகன்!
சூப்பருங்க! 9 மட்டுமே தவறு! மத்த எல்லாம் பின்னிப் பெடல் எடுத்துருக்கீங்க!
=9/10
@ஜிரா...
ஓ...காபி குடிச்சிட்டு வந்து மத்த கேள்விக்கெல்லாம் பின்னாடி பதில் சொல்லி இருக்கீயளா? ஜூப்பரு!
8 ஆம் கேள்விக்கு அவரின் தற்போதைய பேரும் சொல்ல வேண்டும்! மத்த எல்லாம் சரி ராகவா! பின்னிப் பெடல் எடுத்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!
= 9.5/10
8. tharpothaiya peru alla rakha rahman. pothuma?
ஜிரா முழுப் பேரும் சொல்லிட்டாரு!
=10/10
கலக்கல் கேள்விகள், மற்றவங்களுக்கு இடம் கொடுக்கிறேன் ;)
நல்ல வகையில் செய்யப்படும் சிறப்பான அஞ்சலி. பாராட்டுக்கள். முடிவுகள் சொல்லப்படும் அன்று வந்து நான்கு புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன்.
குன்னக் குடி ஐயா வயலினால் பாடி பேசி ஏன் நடனம் கூட ஆடக்கூடிய வித்தகர். அவர்களை பற்றி நல்ல பதிவு. வாழ்துக்கள். எனக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியவில்லை. :(
எனக்குத் தெரிஞ்சது இம்புட்டுதான்.
1
2 ஆ) தோடி ராகம்
3
4 இ) பூவை செங்குட்டுவன்
5 ஈ) அம்ருத வர்ஷிணி
6
7 இ) திருவையாறு ஆராதனை சீன்
8 ஏ ஆர் ரஹ்மான் - திலீப்
9 ஜெயலலிதா
10 அகத்தியர்
1. நவரத்தினம்
2. ஆ) தோடி ராகம்
3. இ) சுப்ரபாதம்
4.ஆ) கண்ணதாசன்
5.ஈ) அம்ருத வர்ஷிணி
6.அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி
7.இ) திருவையாறு ஆராதனை சீன்
8. A.R. ரகுமான், திலீப்
9. இ) ஜெயலலிதா
10.ஆ) தெய்வம்
1. நவரத்தினம்
2. ஆ) தோடி ராகம்
3. இ) சுப்ரபாதம்
4.ஆ) கண்ணதாசன்
5.ஈ) அம்ருத வர்ஷிணி
6.அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி
7.இ) திருவையாறு ஆராதனை சீன்
8. A.R. ரகுமான், திலீப்
9. இ) ஜெயலலிதா
10.ஆ) தெய்வம்
நானும் ஒருதடவையாவது 10/10 வாங்கிடணுமுன்னு பாத்தா.. முடியலை. ஏதாவது ஒரு கேள்வி மாட்டிக்குது.
வாங்க கொத்ஸ்!
2,5,7,8,9 சரி!
=5/10
சரி, குன்னக்குடி வாசிப்புல உங்க Faves என்ன? :)
திராச
6 தவிர மற்ற எல்லாம் சரி!
=9/10
சூலமங்கலம், இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணுங்க! :)
திராச ஐயா
நீங்க தான் இசை இன்பம் வலைப்பூ முதலாளி என்பதால் உங்க பின்னூட்டம் தானாகவே பப்ளீஷ் ஆயிருச்சி!
பிட் அடிச்சிறப் போறாங்களோ-ன்னு அடியேன் delete பண்ணிட்டேன்! மன்னிக்கவும் :)
ப்ரசன்னா....
ஹிஹி, எப்பமே ஏதாச்சும் ஒரு கேள்வியில மட்டும் மாட்டிக்கிட்டு 10/10 கோட்டை விட்டுடறீங்க போல! :)
இன்னிக்கும் அதே தான்! 6 தவறு!
=9/10 :))))
நான் அனுப்பின பதில் என்னாச்சு???????????????
முகிலரசி-தமிழரசன் மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருந்தாங்க!
3rd mattum thappu!
8-kku, avarin ippothaiya perum cholla venum :)
@முகிலரசி-தமிழரசன்
இப்போ மூனு சரி! எட்டாம் விடையில் தற்போதைய பெயரும் சரியே!
புடிங்க 10/10 :)
வாழ்த்துக்கள் முகில் :)))
என்ன கொடுமை கே ஆர் எஸ் இது?
சரி, ஒருத்தர் பதில் சொல்லி 2 பேரும் மார்க் வாங்கிட்டோம்!
சொல்ல மறந்துட்டேன், பதில் நானே எழுதினேன்.
6. ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
இப்போ சரின்னு நினைக்கிறேன். அடுத்த முறையாவது முதல் முயற்சியிலேயே 10/10 வாங்கும்படி கேள்வி கேளுங்க...:-)
6) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா
ப்ரசன்னா இப்போ ஆறாம் கேள்விக்குச் சரியாச் சொல்லி 10/10-ப்பா! :)
தல,
அடுத்த தபா நீங்க மொதல்லயே எல்லா பதிலும் சொல்றா மாதிரி கேள்வி எல்லாம் கஷ்டமா கேட்டுடறேன்! :)
திராச-வும் 10/10 :)
அவர் பதிலை லீக்-அவுட் செஞ்சிட்டாரு! :)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
கலக்கறீங்க, வாழ்த்துக்கள்!
//
ஜீவா
வாழ்த்து ஓக்கே! பதில்கள் எங்கே? :)
//G.Ragavan said...
குன்னக்குடியின் இசையை ஏற்காதார் ஏற்காதாரே. விட்டுத்தள்ளுங்கள் அவர்களை. அவர்களுக்கு அவர்களே சீரார். மற்றோர் வேறூரார்//
சீரார்-ஊரார் என்று ஜிரார்! நன்றி! :)
குன்னக்குடியுடன் அவர் சேரார். அதனால் மக்கள் பல்சையும் பாரார்! :)
//வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலி. அவரை இழந்து வாடும் சுற்றம் சூழல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//
இறைவன் திருக்கழலில் இசைமணி குன்னக்குடியார் இளைப்பாறட்டும்!
//சிவமுருகன் said...
முதல் கேள்விக்கு பதில் சட்னு தெரிந்து விட்டது. "பச்சைகிளிக்கொரு செவந்த பூவினில் தொட்டிலை கட்டி வைத்தேன்னு" ஒரு பாட்டு வரும்//
சிவா
அது இந்த எம்.ஜி.ஆர் படம் இல்லையே! நீதிக்குத் தலை வணங்கு-ன்னு படமாச்சே!
//சிவமுருகன் said...
இரு கேள்விகளுக்கு (கூகிள்) ஆண்டவர் தான் பதில் சொன்னார்!
1 மழை வற்ற ராகம்
2 கொட்டாம் பட்டி ரோட்டில...//
என்ன சிவா இது! கூகுளாண்டவர் வேற நாம வேறயா? எல்லாம் ஒன்னுகுள்ள ஒன்னு தான்! :))
//கானா பிரபா said...
கலக்கல் கேள்விகள், மற்றவங்களுக்கு இடம் கொடுக்கிறேன் ;)//
எங்க கா.பி அண்ணாச்சி இடம் கொடுக்கறீங்க? கம்போடியாவில் உங்க அரண்மனையில் தானே? சூப்பரு! :)
//RATHNESH said...
நல்ல வகையில் செய்யப்படும் சிறப்பான அஞ்சலி//
நன்றி ரத்னேஷ் ஐயா!
அன்னார் நினைவில் நல்லனவற்றைக் கொள்வதும் ஒரு அஞ்சலி தான்!
//முடிவுகள் சொல்லப்படும் அன்று வந்து நான்கு புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன்//
ஆகா! அது என்ன புதிய செய்தி? இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல முடிவுகள் ரிலீஸ்!
//shri ramesh sadasivam said...
குன்னக் குடி ஐயா வயலினால் பாடி பேசி ஏன் நடனம் கூட ஆடக்கூடிய வித்தகர்.//
:)
சாமியே சரணம் ஐயப்பா-ன்னு பக்தர்கள் கோஷம் கேட்டிருக்கேன் ரமேஷ் சதாசிவம் ஐயா! ஆனா வயலின் கூட சரணம் ஐயப்பா கோஷம் போடும்-ன்னு குன்னக்குடி கிட்ட தான் கண்டேன்!
//எனக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியவில்லை. :(//
அதனால் என்ன? இதோ பதில் சொல்லிடறோம்! தெரிஞ்சிக்கோங்க! குன்னக்குடி அஞ்சலியாக ஆகி விடும்!
அப்பு, அது நட்சத்திரம் இல்ல, நவரத்தினம்!
எம்.ஜி.ஆர் நடித்து-குன்னக்குடி இசையமைத்த நவரத்தினம் திரைப்படம் பற்றிய மேலதிக தகவல்கள்:
இது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த 1977-இல் ரிலீசான படமாம்! ஏபி நாகராஜன் தான் இயக்கம்! படம் ஒன்றும் அப்படி பெரிய வெற்றி இல்லை! எம்.ஜி.ஆருக்கு இதுவே தர்ம சங்கடமாகிப் போக, படத்தை மறுபடியும் ரீ-எடிட் செஞ்சி வெளியிட்டு இருக்கிறார்கள்!
படத்துல பாலமுரளி கிருஷ்ணாவைப் பாட வ்ச்சாரு குன்னக்குடி!
என்ன பாட்டு தெரியுமா?
குருவிக் கார மச்சானே - நம்ம கடவுள் சேத்து வச்சானே! :)
திருடனாட்டம் குடிசைக்குள்ள பூனை போல நுழைஞ்ச
புருசனாட்டம் மனசுக்குள்ள முழுக்க முழுக்க நெறைஞ்ச
- வாணி ஜெயராம் கூட குருவிக்கார டூயட்!
ஒரு தமிழ்ப் படத்துல, அதுவும் எம்.ஜி.ஆர் படத்துல ஒரு ஃபுல் ஹிந்திப் பாட்டு வச்சாரு குன்னக்குடி! லட்கா-லட்கீ-ன்னு வரும்! மறந்து போச்சு! தெரிஞ்சவங்க சொல்லுங்க!
Sound of Music - ம்யூசிக்கல்-ல வர High on the Hill பாட்டையும் குன்னக்குடி இந்தப் படத்துல வச்சாரு!
ஓஹோ லேடி, ஹோ ட்லி, ஹோ-ன்னு வரும்! பாலமுரளியும், வாணியும் கலக்கி இருப்பாய்ங்க!
Come on dears and cheers-ன்னு பாடிக்கிட்டே....
ஏதா வுனரா, நிலுகட நீக்கு
எஞ்சி சூடனகு, அகப்படவு-ன்னு தியாகராஜர் கிட்ட வந்து முடியும்! கல்யாணி ராகம்!
ஏதா வுனரா? எங்கடா இருக்க ராமா? எங்க பாத்தாலும் அகப்பட மாட்டேங்குறியே? :)
சான்ஸே இல்லை!
Kunnakudi is a great public music experimentor!
//தமிழரசன் said...
அப்பு, அது நட்சத்திரம் இல்ல, நவரத்தினம்!//
சாரி அண்ணாச்சி!
ஏதோ நட்சத்திரம்-ன்னு பலத்த யோசனை!
பதிவுல கொஞ்சம் வேண்டத் தகாத கும்மி போயிக்கிட்டு இருந்தது! அதுல நவரத்தினம் என்பதை நட்சத்திரம்-ன்னு போட்டுட்டேன்!...அம்புட்டு கவனம்! :)
குன்னக்குடி அவர்களின் உடன் வாசிக்கும் வாத்யக்காரர்கள் பற்றியும் தனி பதிவு செய்தல் அவசியம்.அவரைப் போலவே பொட்டு வைத்துக் கொள்ளும் மிருதஙகக் காரர்.மேல் சட்டை பட்டனை திறந்து விட்டு அனாயசமாய் கடம் வாசிக்கும் குரும்புப் பார்வை நபர்.சாதுவாக பொட்டி போடும் பெரியவர்........என நீளும் வத்தியக்காரர்களிடம் குன்னகுடியுடனான அனுபவஙகளை
கேட்டு பெறவேண்டும்.மீடியா காரர்கள் முயலட்டும்.
kunnakkudiyai kunrin mel etriyatharkku nanriyum paraattukkalum Avaraal violinum violinaal avarum isai ulagam puthiya parinamathai kandathu enraal athu migaiyaagaathu.
Post a Comment