Tuesday, December 15, 2009

ஒரு சர்வாதிகாரியின் சிம்பொனி

சின்ன வயசுல ஓடியாடித் திரிஞ்ச காலத்துல, எங்க வயக்காடுகளில், அப்புறம் ஸ்கூல் லீவுல பசங்களோட காட்டுக்கு மாடு மேய்க்கப் போன சமயங்கள்ல, இந்த இசையமைப்புக்களை பல முறை கேட்டுருக்கேன்.

அப்பல்லாம் அதோட அருமையும் பெருமையும் புரியல.
புரிய வந்த சமயத்துல... படுக்கையே வாழ்வாகிப் போச்சு. (I am telling the fact.! yaar!!! Not feelings of India!!!!!!! )

இப்பவும் இந்த மாதிரி இசை, திடீர்னு பக்கத்துல எங்கயாச்சும் கேக்கற சந்தர்ப்பத்துல மெய்மறந்து, கேக்க ஆரம்பிச்சிடுவேன்.

நான் சொல்றதுக்கு முன்னாடியே, அந்த சர்வாதிகாரி யாருன்னு புரிஞ்சுட்டு இருப்பீங்களே...!

பிரபஞ்ச மகாசக்தி என்கிற, கடவுள் என்கிற , இன்னும் கணக்கில்லாத என்கிற-க்களைப் போட்டாலும்... அந்த எல்லாம் வல்ல சர்வாதிகாரிக்கு நம்மால பெயர் வைக்க ஏலுமோ? ஹ்ம்.

What an Orchestration?
எத்தினி இசையமைப்பாளர்கள் இணைஞ்சாலும் இப்படி ஒரு சிம்பொனி பண்ண முடியுமோ?

ஒகே! மக்களே... கேட்டுப்- பாஆஆருங்க!

(முடிஞ்சா ஹெட்போன் மாட்டிட்டு)இதோ இன்னொண்ணு.இம்மாதிரி இசை யாராவது வச்சுருந்தா... எனக்கு அனுப்பி வைக்க முடியுமா...?

-------------------------------------------------------------------------------------அப்புறம் எனக்குப் பிடிச்ச இன்னொரு இசை. உலகம் தோன்றுமுன்பாக இது தோன்றியதாக சொல்றாங்க. இதைக் கொஞ்ச நேரம் கேட்டீங்கன்னா, ஆட்டோமேட்டிக்கா..., தியான நிலைக்குப் போயிடுவீங்க.

இது பத்தி சொல்ல நிறைய்ய்ய இருக்கு.
ஒற்றைக் கையினால் ரொம்ப தட்டச்ச முடியாத காரணத்தால....
தவிரவும் என்னைவிட இந்த topic- ஐ அவர் எழுதினா நல்லா இருக்குமென்கிற காரணத்தால...

இதன் அருமை பெருமைகளை பட்டியலிட்டு ஒரு தனிப் பதிவாக இடுமாறு நம்ம மகாவிஷ்ணு-கே. ஆர். எஸ்- கிட்ட வேண்டிக்கறேன். (ஏற்கெனவே இட்டிருந்தா சுட்டி கொடுங்க)

இசை கேக்கலாமா????-------------------------------------------------------------------------------------


இதுவும் தியானத்துக்கு உதவும்.

காயத்ரி கோவிந்தராஜன் அவர்களின் வீணை..... அடடா.... என்னமாய்த் தாலாட்டுது...!

கேளுங்க..! கேளுங்க..! கேட்டுக்கிட்டே இருங்க.

16 comments:

jeevagv said...

அருமையான தொகுப்பை தந்திருக்கிறீர்கள் திரு.அந்தோணி ஐயா, அருமை!

இயற்கையும் இனிய குரல் வளம் மிக்க இனிய பறவை ஒலிகளும் என்றென்றும் கேட்க ஆனந்தம்!

இப்படி சொல்லிக்கிட்டு இருக்கும்போது, தீடீர்ன்னு, ஓம்கார நாதத்தை எடுத்து தந்தும் இருக்கீங்க! ஆகா! மனம் ஒருநிலைப்பட கைகொடுக்கும் கையினை கைகாட்டி இருக்கீங்க.

மனம் வசப்பட்டால் அப்புறம் வானமே எல்லை!
இசையால் இயலாதது இல்லை!

அதை அழகாய் சுட்டிய உங்களுக்கு பெரும் நன்றிகள்!

jeevagv said...

தமிழ்மணத்திற்கு அனுப்பவில்லை போலும்,
அனுப்பி அங்கே மணம் வீசச்செய்கிறேன்.

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

க்ரோம்ல ஒளி\ஒலித்துண்டுகள் பார்க்க முடியவில்லையே...

கலகலப்ரியா said...

beautiful...!

கவிநயா said...

மிக அருமை! மிக்க நன்றி.

+Ve Anthony Muthu said...

//மனம் வசப்பட்டால் அப்புறம் வானமே எல்லை!
இசையால் இயலாதது இல்லை!//

ஆம் ஜீவா சார்.

இப்ப இந்த மன ஒருமுகத்துக்கு தனி சாஃப்ட்வேர் வந்தாச்சு கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணிட்டு, ஹெட்ஃபோனை மாட்ட வேண்டியதுதான்.

5 வருஷம் தியானம் பழகியவர், எப்படி சரளமாக தியான நிலைக்குள் போவாரோ, அந்தளவு சுலபமா... நிமிஷத்துல போயிடலாம்.

Binaural beats என்று கூகுளாண்டவனைக் கேட்டுப் பாருங்கள்.

அள்ளி அள்ளித் தருகிறான்.

விஞ்ஞானம் தியானத்துக்கு உதவும் அற்புதம்.

+Ve Anthony Muthu said...

ஜீவா (Jeeva Venkataraman) said...

//தமிழ்மணத்திற்கு அனுப்பவில்லை போலும்,
அனுப்பி அங்கே மணம் வீசச்செய்கிறேன்.//

மிக்க நன்றி ஜீவா ஐயா.

+Ve Anthony Muthu said...

அறிவன்#11802717200764379909 said...

//க்ரோம்ல ஒளி\ஒலித்துண்டுகள் பார்க்க முடியவில்லையே...//

வேற உலாவி இல்லீங்களா அறிவன்?

நான் realone player இன்ஸ்டால் பண்ணியிருக்கேன். ஆன்லைனில் பார்க்கச் செலவழிக்கும் நேரத்தில் அதை நம் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்யும் வசதி அதில் உண்டு.

+Ve Anthony Muthu said...

கலகலப்ரியா said...

//beautiful...!//

நன்றி கலக்கல்ப்ரியா. :-)

+Ve Anthony Muthu said...

கவிநயா said...

//மிக அருமை! மிக்க நன்றி.//

பாராட்டுக்கு நன்றி கவிநயா!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா! தங்கள் பக்கத்தின் இசை மிக அருமை.ஆமாம்,தாங்கள் அந்தமானுக்கு 9 வது திருக்குறள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த அந்தோனி ஐயாவா? அப்படி இருந்தால் ஆம் என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்களேன்,தயவு செய்து.

நன்றி
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்.
knshanthi.lakshmanan@gmail.com

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா! தங்களை பற்றி அறிந்ததும் எனக்குள் தன்னம்பிகை பெருக்கெடுக்கிறது.நன்றி! தங்கள் சகொதரி உங்களுக்கு தெய்வம்.எங்களுக்கு முன் மாதிரி. அவர்களுக்கு என் மனமுருகிய நன்றிகள். எனது கடந்த கருத்துரையை பொருட்படுத்த வேண்டாம் தயவு செய்து.அதை விடுங்கள்.நான் இப்போதுதான் தியானம் பழகுகிறேன்.தங்கள் பக்கத்தின் "ஓம்கார இசை" உதவியாக இருக்கும். நன்றி
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்.
knshanthi.lakshmanan@gmail.com
http:andamantamizhosai.blogspot.com

+Ve Anthony Muthu said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாந்தி அம்மா.

நீங்களோ...
ஜீவா ஐயாவோ...,
என்னை ஐயா என்று அழைக்க...

நான் தகுதியற்றவன்.

'அந்தோணி' என்றழைத்தாலே போதுமானது.

=============================

நானறிந்தவரை ஓம்காரத்துக்கு இணையாய் மனதை கட்டிவைக்கும் ஒலி உலகில் இல்லை.

மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு அடிவயிற்றிலிருந்து... மென்மையாக "அவ்ம்" என்று துவங்கி மெதுவாக மூச்சை வெளி விட்டுப் பாருங்கள்.

அது ஒரு சுகானுபவம்.

சில முறை செய்தாலே கூட போதும். பலனுண்டு.

(இது என் வழிமுறை. எல்லாருக்கும் சரி வருமா தெரியலை.)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா! உங்களை இப்படி அழைக்கவே என் மனம் விரும்புகிறது. தகுதி என்று எதைச்சொல்கிறீர்கள்.உங்கள் தகுதி உங்களுக்குப் புரியவில்லை.இனிமேல் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களுக்கு உங்களின் வலைத்தளத்தை பரிந்துரை செய்ய அனுமதி தர வேண்டுகிறேன்.மன்னிக்கவும்.நன்றி.
அன்புடன்
க.நா.சாந்திலக்ஷ்மன்

Tamilan said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

Unknown said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP