முதல் வணக்கம் - இசை மணக்கும்!
இசை பூக்குமா? பூக்குமே....
எங்கு? வலைப்பூவில்!
"இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவனே!" என்று
இறைவன் இசையாய் இருப்பதாகத் தான் பாடியுள்ளார்கள்.
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார் என்பது பைபிள்.
தமிழிசை இயக்கத்தின் இரு கண்கள் - சைவமும் வைணவமும்!
சிவபிரானிடம் உடுக்கை என்றால், பெருமாளிடம் சங்கு!
நந்தியிடம் மிருதங்கம், நாரதரோ வீணை!
இப்படி, இசையும் இறையும் இரண்டறக் கலந்து தான் உள்ளது!
இசை என்பதைப் பாடல்கள் மட்டும் என்றும் நிறுத்திக் கொள்ளாது,
- இசைக் கருவிகள்
- நடனம்
- நாட்டுப்புறப் பாடல்
- திரைப்படம்
- தொகுப்பிசை-Fusion-Album
- இவற்றின் பின்னணியில் சுவையான தகவல்கள்
- புதுப் பாடல்கள், பதிவுலக முயற்சிகள்
இசை, மொழிக்கு அப்பாற்பட்டது தான் என்றாலும், முதலில்
தெய்வத் தமிழ் இசையில் இருந்து தொடங்கலாம் என்பதே எண்ணம்.
முதலில் நம் வீட்டுப் பலகாரங்களைச் சிறிது சுவைத்து விட்டு,
பின்னர் ஒவ்வொன்றாக மற்ற விருந்துகளையும் சுவைக்கலாம்.
எதையும் தள்ளி விடப் போவதில்லை!
எல்லாவற்றையும் அள்ளி சுவைக்கத் தான் போகிறோம்!!
கணபதியானை வணங்கி,
ஆடல் வல்லானையும், ஆழி மாயனையும் வணங்கி,
நால்வரையும் ஆழ்வார்களையும் வணங்கி,
சங்கீத மும்மூர்த்திகளை வணங்கி,
வலைப்பூ மலரட்டும், வாசங்கள் வீசட்டும்!
எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனையோ மகான்கள் பூமியிலே! அத்தனை பேருக்கும் வந்தனமே!!
ஞான சம்பந்தப் பெருமான் தந்த இசையில், மூடிய கதவுகள் திறந்தன!
அதே போல், இசையால், நம் அகக் கதவுகளும் திறக்கட்டும்!
என்றும் போல, உங்கள் ஆதரவும், ஆசியும் அள்ளி வழங்க வேண்டுகிறேன்!
வலைப்பூவில், இசைப்பூ தொடுக்க ஆசைப்படும் நண்பர்கள்,
சொல்லுங்கள்! மகிழ்வுடன் அழைப்பு அனுப்புகிறோம்!
20 comments:
அழகான ஆரம்பம்....வாழ்த்துக்கள் தங்களது முயற்சி.
வாழ்த்துக்கள், வளரட்டும்!
இரவிசங்கர். மனம் போல் எல்லா நலமும் நிகழட்டும்.
இந்தக் கூட்டுக் கச்சேரியில் நான் இசை வல்லோனாக இல்லாமல் இசை மழையைப் பருகுவோனாக இருக்கிறேன். விரைவில் கச்சேரியைத் தொடங்குங்கள்.
ரவி,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Fusion-Album = தொகுப்பிசை ??
ரவி, இது நீங்கள் பரிந்துரைக்கும் சொல்லா அல்லது பரவலாக புழக்கத்தில் உள்ளதா?
உங்களின் மற்றும் குமரன், இராம்.கி ஐயா, இராகவன், செல்லி போன்றோரின் பதிவுகள் மூலம் புதுச் சொற்களை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. மிக்க நன்றிகள்.
ஆஹா,இன்னொரு புதுத்தொடரா?
இசைக்கு மயங்க நாங்க ரெடி.
இசையென்றதும் மனம் அசைந்திங்கே வந்ததே! வாழ்த்துகள் ரவி!
ஆஹா... இசைக்கு ஒரு பதிவா? ஜமாய் ராஜா ஜமாய்:-)))
இப்பத்தான் 'உன்னி கிருஷ்ணன்' பாடிய 'பலுகின்ன மாட்ட'வை தியாகராஜரில் தேடிக்கிட்டு
இருக்கேன். கிடைக்கலை.
ரவி,
நீங்கள் செல்வராஜ் அண்ணரின் பதிவில் குறிப்பிட்டிருந்த பாடலின் URL இதோ.
http://www.musicindiaonline.com/p/x/IqQ9DqTtv9.As1NMvHdW/
//மதுரையம்பதி said...
அழகான ஆரம்பம்....வாழ்த்துக்கள் தங்களது முயற்சி.//
மெளலி சார், முதல் வாழ்த்து உங்களிடம் இருந்து தான். அதுவும் தமிழ்மணத்தில் வெளியிடுவதற்கு முன்பே!
மிக்க நன்றி!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
வாழ்த்துக்கள், வளரட்டும்!
//
நன்றி ஜீவா.
//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். மனம் போல் எல்லா நலமும் நிகழட்டும்.//
நன்றி குமரன்.
//இந்தக் கூட்டுக் கச்சேரியில் நான் இசை வல்லோனாக இல்லாமல் இசை மழையைப் பருகுவோனாக இருக்கிறேன்//
ரசிகர்களாகத் தான் தொடங்கியுள்ளோம் குமரன்.
உங்களைப் போல நானும் பருகுவோன் தான் :-)
இசை வல்லார் பலரின் வழிகாட்டுதலோடு நல்லது செய்ய நாம் அனைவரும் முயல்வோம்!
// வெற்றி said...
Fusion-Album = தொகுப்பிசை ??
ரவி, இது நீங்கள் பரிந்துரைக்கும் சொல்லா அல்லது பரவலாக புழக்கத்தில் உள்ளதா?//
வாங்க வெற்றி
பரவலாக வழக்கில் இல்லை. எங்கோ கேட்ட நினைவு.
Nuclear fusionஇல் தேடினேன். அங்கு அணு உருக்கம் என்ற அளவில் தான் இருந்தது.
சரியென்று நாமே முயன்றால் என்ன என்று எண்ணிய போது, தொகுப்பிசை என்று இட்டேன். சரியாய் வருகிறதா? சொல் ஒரு சொல்லில் கேட்டுப் பார்க்கலாம்!
//வடுவூர் குமார் said...
ஆஹா,இன்னொரு புதுத்தொடரா?
இசைக்கு மயங்க நாங்க ரெடி.//
குமார் சார்
Profile படத்தில் வடுவூரார் சூப்பர்.
அங்கு படம் கண்டு மகிழ்ந்தீர்கள்.
உடனேயே அதில் திளைத்து விட்டீர்களே! பலே!
//ஷைலஜா said...
இசையென்றதும் மனம் அசைந்திங்கே வந்ததே! வாழ்த்துகள் ரவி!
//
நன்றி ஷைலஜா
உங்களை நம்பித் தான் துவங்கியுள்ளோம்! :-)
//துளசி கோபால் said...
ஆஹா... இசைக்கு ஒரு பதிவா? ஜமாய் ராஜா ஜமாய்:-)))//
நன்றி டீச்சர்!
//இப்பத்தான் 'உன்னி கிருஷ்ணன்' பாடிய 'பலுகின்ன மாட்ட'வை தியாகராஜரில் தேடிக்கிட்டு
இருக்கேன். கிடைக்கலை.//
ஆகா, கிடைத்தவுடன் இங்கு பாடல் வரிகளோடு ஒரு பதிவு போடுங்க டீச்சர்.
// வெற்றி said...
ரவி,
நீங்கள் செல்வராஜ் அண்ணரின் பதிவில் குறிப்பிட்டிருந்த பாடலின் URL இதோ.//
நன்றி வெற்றி
"வெல்டன் வெல்டன் வாஷிங்டன்
Excellent Temple for Lord Murugan!"
என்று என்ன ஒரு அழகான பாடல் முருகன் மீது! அதுவும் ஆங்கிலத்தில்!
சீர்காழி சிவசிதம்பரம் இதைப் பாடும் போது, நேரில் பார்த்து, ஒரே பரவசம்!
நவராத்ரி நாயகியே ...
...
தமிழிசை அமுதாய் வாழ்பவளே!
அந்த வாழ்பவளுக்கு ஒரு இணைய இடம் கிடைத்து விட்டது.
பாட்டு போடுங்க கேட்க ரெடி.
ரவி ஆரம்பிச்சா....
அது நல்லாப் போகுமேஏஏஎ
பழசு என்றாலும்
புதுசு என்றாலும்
கேட்க இனிக்குமே.:-0)
வாழ்த்துக்கள் ரவி.
//சிவமுருகன் said...
தமிழிசை அமுதாய் வாழ்பவளே!
அந்த வாழ்பவளுக்கு ஒரு இணைய இடம் கிடைத்து விட்டது//
நன்றி சிவா.
அன்னைக்கு இடம் நாம் என்ன கொடுப்பது?
அவள் நம்மிடம் உரிமை எடுத்துக் கொண்டு, நம்மிடம் வந்து அமர்ந்து விட்டாள் போலும் :-)
//வல்லிசிம்ஹன் said...
பாட்டு போடுங்க கேட்க ரெடி//
வல்லியம்மா
என்ன இது கேட்க ரெடி என்று சொல்லிட்டீங்க....
கச்சேரி நடத்த ரெடி என்று சொல்லுங்க!
திராச தலைமையில் உங்களையும் "நம்பி"த் தான் துவங்கி உள்ளோம்!
Post a Comment