சினிமா காரம் காபி - பாகம் 3
இந்த பதிவுல தேவா பத்தி எழுதலாமனுதான் நினைத்தேன்,ஆனால் வலையுலகில் தேவாவிற்கு இருக்கும் அன்பும் ஆதரவையும் பார்த்து அவரை பற்றி பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அதற்கு இணையாக சுவாரஸ்யம் மிகுந்த வேறோரு தமிழ்திரையுலக காபி பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.
ஒரு படத்தின் எல்லா பாடலகளையுமே ஈயாடித்தான் காபி அடித்த இசை அமைப்பாளரும்,அப்படி காபி அடிக்கப்பட்ட படம் பற்றியும் தெரியுமா உங்களுக்கு். இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர் இசை அமைப்பாளர் சிற்பி ,நாம் பார்க்கப்போகும் திரைப்படம் "உள்ளத்தை அள்ளித்தா".
உள்ளத்தை அள்ளித்தா திரைவானில் தோன்றிய புத்துணர்வு கூட்டக்கூடிய இளமை படம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி இழையோடிய நகைச்சுவையால் பின்னப்பட்டு , கலகலப்பாக செல்லக்கூடிய லேசான படம். நடிகை ரம்பாவை மர்லின் மன்ரோ ரேஞ்சுக்கு அறிமுகத்தோடு திரையுலகில் தன் பயணத்தை தொடக்கிவைத்த படம். படத்தில் கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் லூட்டிகளுடன் சேர்த்து படத்தின் இனிமையான இசையும் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தின் ஐந்து பாடல்களும் எப்பொழுது பார்த்தாலும் அலறிக்கொண்டு இருந்தது.
ஆனால் இந்த ஐந்து பாடல்களுமே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா???
தெரிய வேண்டும் என்றால் மேலே படியுங்கள்!! ;-)
1.) படத்தின் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று "அழகிய லைலா" எனப்படும் ரம்பாவின் அறிமுகப்பாட்டு. இதில் தான் மர்லின் மன்ரோவைப்போன்று கிலுகிலுப்பான காட்சியுடன் பாடல் ஆரம்பமாகும். இந்த பாட்டை மக்கள் (ஆண்கள்(!?) ) திரும்ப திரும்ப விரும்பி பார்த்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடலை கேட்கும் போதே பாடலில் மத்திய கிழக்கு நாடுகளின் இசைச்சாயல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது!! ஆனா இந்த பாட்டே ஒரு மத்திய கிழக்கு இசை பாடலின் அச்சு அசல் காபி என்று தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)
உள்ளத்தை அள்ளித்தா - அழகிய லைலா
ஹிஷமப்பாஸ் - அஹ்லமஃபெகி
இதுல என்ன காமெடினா,"யெஸ் பாஸ்" எனும் இந்தி படத்தில் வரும் "சுனியே தோ" எனும் பாட்டும் இதே பாட்டின் காபி தான்!!அந்த படத்தின் இசை அமைப்பாளரின் பெயர் ஜடின் லலித்!! :-)
2.)படத்தில் எல்லோரும் ஒன்று கூடி உண்டு மகிழ்ந்து இருக்கும் வேலையில் கதாநாயகி பாடுவது போல ஒரு பாட்டு வரும்.பாட்டின் மெட்டும்,படமாக்கிய விதமும் பார்பவற்கு ஒரு இதமான மன நிலையை கொடுத்து விடும்.
பின்பு ஒரு முறை எம்.டிவியில் பாலி சகுவின் மறு கலவை பாட்டு ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்த பாட்டை எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று தோன்றியது!! பிறகு தான் உறைத்தது ,இது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கேட்டோமே என்று.
நான் கேட்ட பாடல் "மேரி லௌங் கவாச்சா" என் தொடங்கும் பஞ்சாபி பாடல்.நுஸ்ரத் ஃபதே அலி கான் எனப்படும் புகழ் பெற்ற பாகிஸ்தானிய இசை கலைஞரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த பாடல் பாலி சகு மூலமாக மறு கலவை (Remix)செய்யப்பட்டு வெளிவந்தது. அதைத்தான் நம் சிற்பி "சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு' எனும் பாடலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்!! அடக்கடவுளே என்று சொல்வதை தவிர எனக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை!! நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன்!! :-)
உள்ளத்தை அள்ளித்தா - சிட்டு சிட்டு குருவிக்கு
மேரி லௌங் கவாச்சா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு
3.) படத்துல வர அப்பா கதாபாத்திரம் ,தன் மகனுக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக தெரியும் என்றும் அதனால் வீட்டிலேயே ஒரு கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்று பேச்சு வர அப்பொழுது "மாமா நீ மாமா" என்று ஒரு பாட்டு வரும். பாட்டை கேட்டவுடன் கர்நாடக சங்கீதம் என்று சொல்லிவிட்டு வட இந்திய இசை மெட்டு படி பாட்டு அமைந்திருக்கிறதே ந்ன்று நான் அப்பொழுதே நினைத்ததுண்டு. பின்பு தான் தெரிந்தது இதுவும் நுஸ்ரத் ஃபதே அலி கான பாலி சாகு கூட்டணியில் வந்த ஒரு புகழ்பெற்ற பாட்டின் ஈயடிச்சான் காபி என்று. ச ரி க ம என்று எது வந்தாலும் மக்கள் கர்நாடக சங்கீதம் தான் என்று நம்பி விடுவார்கள் என்று முடிவே செய்துவிட்டார்கள் போலும். :-)
உள்ளத்தை அள்ளித்தா - மாமா நீ மாமா
கின்னா சோனா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு
பி.கு:இதே பாட்டை நதீம் ஷ்ரவன் கூட்டணி "ராஜா ஹிந்துஸ்தானி" படத்தில் "கித்னா ப்யாரா துஜே" எனும் பாட்டிற்காக காபி அடித்திருக்கிறார்கள்.
4.)படத்தில் வரும் இன்னொரு ஜாலியான பாடல் "அடி அனார்கலி" என தொடங்கும் பாடல்.படத்தில் ரெக்கே இசை பாணியின் சாயல் பட்டவர்தனமாக தெரியும்.இந்த பாடலை "Mungo Jerry" எனும் இசைக்குழுவின் "In the summertime" என்ற பாடலில் இருந்து சுட்டிருக்கிறார்கள். இந்த பாடல் ஷாகி எனும் புகழ்பெற்ற ரெக்கே பாடகரால் 1995-இல் முறுமுறை வெளியிடப்பட்டிருந்தது். இதனால் இந்த பாட்டு மிக புகழ் பெற்றது.பாடலை ஒரு முறை கேட்டாலே இது காபி என்று புரிந்துவிடும்.
உள்ளத்தை அள்ளித்தா - அடி அனார்கலி
Mungo Jerry - In the summertime
இன்னொரு பி.கு: இதே பாடலை Tarazu எனும் படத்தில் "ஹசீனா கோரி கோரி" எனும் படலின் மூலம் இசை அமைப்பாளர் ராகேஷ் ரோஷன் அட்டை காபி அடித்திருப்பார் (நம்ம கூட போட்டி போடலைனா,இந்த பசங்களுக்கு தூக்கமே வராது போல) :-)
5.) படத்தில் மிக பிரபலமான பாட்டு "I love you,love you,love you,love you சொன்னாலே" (அடங்கொக்கா மக்கா,எவ்ளோ love you டா சாமி,நமக்கெல்லாம் ஒரு தடவையே யாரும் சொல்ல மாட்றாங்க!! :-P)
சென்னையில் அப்பொழுது புதிதாக வந்திருந்த MGM பொழுதுபோக்கு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்ட காட்சிகள் பாட்டையும் அந்த பூங்காவையும் செமத்தியாக பிரபலப்படுத்தியது.இனிமையான பாடல் தான் ஆனால் இந்த பாடல் ஒரு மத்திய கிழக்கு (திரும்பவும்) பாடலில் இருந்து அச்சு அசல் காபி (முதலில் வரும் ஆலாபனையில் இருந்து)
நீங்களே கேட்டு பாருங்க!! :-)
உள்ளத்தை அள்ளித்தா - I love you சொன்னாலே
ஹிஷம் அப்பாஸ் - வன்ன வன்ன வன்ன
காபியோ டீயோ படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது,இதனால் படமும் சுப்பர் ஹிட். இதனால் சிற்பிக்கும் நிறைய படங்கள் ஒப்பந்தம் ஆனது. லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த "சுந்தர புருஷன்" எனும் படத்தின் மூலம் சிறிது பேசப்பட்டார்.(அதில் எந்த அளவுக்கு சொந்த சரக்கு இருந்தது என்று தெரியவில்லை).பின்பு காணாமல் போனார்.
அடுத்த பதிவில் இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்.
வரட்டா?? ;-)
நன்றி : http://www.itwofs.com/
11 comments:
//இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர் இசை அமைப்பாளர் சிற்பி//
சிற்பி - பேரு நல்லாத் தான் இருக்கு!
செதுக்கனாரா இல்லை ஒதுக்கனாரா-ன்னு தான் தெரியலை!
"அழகிய லைலா" பாட்டில் ரம்பாவையே பார்த்துக் கொண்டு இருந்ததில், இவ்வளவு பெரிய சதி சட்டுன்னு பலருக்கும் புலப்படாம போயிடுச்சு!
நல்ல வேளை CVRன்னாச்சும் ரம்பாவைப் பார்க்காம...இப்படி டீடெய்லா நோட் பண்ணியிருக்காரு-ன்னு நினைக்கும் போதே .....
//"அடி அனார்கலி" என தொடங்கும் பாடல். "Mungo Jerry" எனும் இசைக்குழுவின் "In the summertime"//
அடப் பாவிங்களா...ஈயடிச்சான் காபி தெரியும்...சரி போனாப் போகுது...சின்ன ஈ தானேன்னு விட்டுறலாம்...இது யானை அடிச்சாங் காப்பி போல் அல்லவா உள்ளது!
In the summertime மிகப் பிரபலமான பாடல் ஆயிற்றே...ஒருத்தருமா கேட்கலை? சிற்பிக்கு மெய்யாலுமே தில்லு தான்! :-))
//"அழகிய லைலா" பாட்டில் ரம்பாவையே பார்த்துக் கொண்டு இருந்ததில், இவ்வளவு பெரிய சதி சட்டுன்னு பலருக்கும் புலப்படாம போயிடுச்சு!//
அதுல உங்க பேரையும் சேத்துக்கலாமா தலைவா?? :-)
//சிற்பிக்கு மெய்யாலுமே தில்லு தான்! :-))//
சரியா சொன்னீங்க தலைவா.தன் முதல் படத்திலேயே எல்லா பாட்டையும் அச்சு அசல் காபி அடிப்பதற்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கும் அவருக்கு!! :-)
இது என்னப்பா கா(ப்)பியிலே டிக்காஷன் ரொம்ப (வே) தூக்கலா இருக்கு.
எல்லாம் 'மலைவிழுங்கி மஹாதேவன்'களா?
காப்பியைத் தவிர வேற என்ன தயாரிக்கிறார்கள்.வெஸ்டர்னிலிருந்து ஹிந்திக்கு வரும்.
இந்தியி யிலிருந்து தமிழுக்கு வரும்.
ஒரிஜினல் மியூசிக்
போடமாட்டோம்னு இசை உலகத்தில் நுழையும்போதே
சபதம் எடுப்பதாகக் கேள்வி.
சிற்பி மொதல்ல அறிமுகம் ஆனபடம்.....பேரு மறந்து போச்சு..பொன்வண்ணன் இயக்கிய படம். படமும் ஒரு மாதிரி நல்லாயிருக்குன்னு வெச்சுக்கயேன். ஆனா ஸ்டார் வேல்யூ இல்லாம படம் ஓடலை. அதுல உண்மையிலேயே நல்ல பாட்டுக குடுத்திருந்தாரு. யாரும் கண்டுக்கலை. செதுக்கீட்டாரு இந்தப் படத்துல.
ஏன்....வித்யாசாகர் கூட மொதல்ல நல்ல பாட்டு போட்டாரு. கண்டுக்கலை....அர்ஜுன் படத்துல காப்பியடிச்சாரு..பெரியாளாயிட்டாரு. இப்ப திரும்ப நல்ல பாட்டு குடுக்குறாரு.
@துளசி டீச்சர்
//இது என்னப்பா கா(ப்)பியிலே டிக்காஷன் ரொம்ப (வே) தூக்கலா இருக்கு.
எல்லாம் 'மலைவிழுங்கி மஹாதேவன்'களா?//
என்ன பண்றது டீச்சர்!! எல்லாம் இயக்குனர்கள் தரும் அழுத்தம்தான்!!
@வல்லிசிம்ஹன்
//ஒரிஜினல் மியூசிக்
போடமாட்டோம்னு இசை உலகத்தில் நுழையும்போதே
சபதம் எடுப்பதாகக் கேள்வி.//
இயக்குனர்கள் எனக்கு இது மாதிரி பாட்டு வேணும் ,அந்த மாதிரி பாட்டு வேணும்னு சொல்லும்போது ,அவங்க கேக்கறா "மாதிரி"யே கொடுத்துடறாங்க!!இசை அமைக்கறது எல்லாம் ரொம்ப கஷ்டம் அக்கா,இயக்குனர் ரொம்ப அழுத்தம் கொடுத்தால் தாங்க முடியாமல் காபி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!! :-)
@ஜிரா
//சிற்பி மொதல்ல அறிமுகம் ஆனபடம்.....பேரு மறந்து போச்சு..பொன்வண்ணன் இயக்கிய படம்//
அப்படியா?? ஒருத்தருக்கு நாலு பேர கேட்டுட்டுதானே போட்டேன்!! இது சிற்பியின் முதல் படம் கிடையாதா??
//ஏன்....வித்யாசாகர் கூட மொதல்ல நல்ல பாட்டு போட்டாரு. கண்டுக்கலை....அர்ஜுன் படத்துல காப்பியடிச்சாரு..பெரியாளாயிட்டாரு. இப்ப திரும்ப நல்ல பாட்டு குடுக்குறாரு.//
அடுத்த சினிமா காரம் காபியின் கதாநாயகனை சரியாக எடுத்து கொடுத்துட்டீங்களே ஜிரா!! :-)
அஞ்சு பாட்டுல ஒன்னு கூட ஒரிஜினல் இல்லையா? தேவாவுக்கு அண்ணனா இருப்பார் போல. சிற்பியோட முதல் படம் கோகுலம்னு நினைக்கிறேன்.
அடக் கொடுமையே.... என்னத்த சொல்ல...
எப்படிங்க கண்டுபிடிச்சீங்க, CVR?!
/சிற்பியோட முதல் படம் கோகுலம்னு நினைக்கிறேன். /
நானும் அப்படிதான் நினைக்கிறேன், மணிகண்டன்!
ada pavi makka!!what a copy cat!?
//சாமி,நமக்கெல்லாம் ஒரு தடவையே யாரும் சொல்ல மாட்றாங்க!! //
manasulla ulla aasai ellam eppothaan veliye varuthu..
//v
அடுத்த பதிவில் இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்.
வரட்டா?? ;-)
//
eppo thambi deva varuvar?
சிற்பி கொஞ்சநாள் துபாய்ல வேலை செஞ்சார்(நிஜமாவேப்பா) அதுனாலதான் அவரோட இசைல அரபி + பாகிஸ்தானிய சூஃபி இசைகளின் சாயல் அதிகமா இருக்கும். முக்கியமா நுஸ்ரத்தின் பாடல்கள் மற்றும் அரபி பாடல்கள்.
Post a Comment