Sunday, August 26, 2007

இசை விளையாட்டு விளையாடலாம் வரீங்களா?

வணக்கம் மக்களே!!
ஒரு சுவையான இசை விளையாட்டோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!

நாம பாட்டு கேக்கும் போது பாட்டின் நடுவில் வரும் இசையை ரசித்திருக்கிறீர்களா?? பல பாட்டுகளில், பாட்டு ஆரம்பித்து இசையை நாம் உள்வாங்கி சுவைக்க ஆரம்பிக்க, இந்த இடையில் வரும் இசை பாட்டின் தடத்தை நம் மனதில் திடமாக பதித்து விடும். பல இசையமைப்பாளர்களுக்கு தன் திறமையை நிரூப்பிக்க இந்த நடு பகுதிதான் வசதியான ஆடுகளம். அழகான மெட்டுகளில் பல்வேறு இசைகருவிகளின் இனிமையான இசையை கோர்த்து நம் ரசனைக்கு விருந்து படைத்து விடுவார்கள்.

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் விளையாட்டும் இந்த நடுப்பகுதி சம்பந்தப்பட்டதுதான்!!

நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் தமிழ் சினிமாவிலிருந்து ஐந்து பாடல்களின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி உங்கள் முன்னே படைத்திருக்கிறேன். அதை கேட்டு எந்த பாடல் என்று நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். எனக்கு என்னமோ நீங்கள் நொடிகளில் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தான் தோன்றுகிறது!!!
ஆனால் ஒவ்வொரு பாடலும் நான் பெரிதும் விரும்பி கேட்கும் இசை,அதுவுமில்லாமல் உங்களுக்கு இது சுவையான விலையாட்டாகவும் இருக்கும்!

கேட்டுதான் பாருங்களேன்!! கேட்டு விட்டு விடைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
முடிவுகளை நான் நாளைக்கு அறிவிக்கிறேன்!! :-)

பிற்சேர்க்கை
---------------
இந்த பதிவை இடும்போது மிக சுலபமாக எல்லோரும் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்தேன்!! ஆனால் உங்கள் திறமைக்கு சவாலாகவும்,இனிமையான இசையை உங்கள் மனதில் உலவ ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த போட்டி அமைந்ததில் மகிழ்ச்சி.
அடுத்த முறை பாடலின் கொஞ்சம் சுலபமாகவும் மேலும் சுவை கூட்டவும் முயற்சிகள் செய்கிறேன் (அதற்கான உங்கள் யோசனைகளை தயவு செய்து பின்னூட்டவும்)
விடைகள் இதோ!! :-)

பாடல் 1


விடை:
படம் - உள்ளம் கேட்குமே
பாடல் - என்னை பந்தாடப்பிறந்தவனே....


----------------------------------------------

பாடல் 2


விடை:
படம் - உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் - பச்சைக்கிளி முத்துச்சரம்....


----------------------------------------------

பாடல் 3


விடை:
படம் - ஆலயமணி
பாடல் - தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே....


----------------------------------------------

பாடல் 4


விடை:
படம் - சூரசம்ஹாரம்
பாடல் - நீலக்குயிலே....


----------------------------------------------

பாடல் 5


விடை:
படம் - சங்கமம்
பாடல் - முதல் முறை....


----------------------------------------------

விடைகள் அளித்த அனைவருக்கும் நன்றி (Gtalk-இல் மட்டும் விடையளித்தவர்களையும் சேர்த்து!! :-))

சகாதேவன் - 3ஆவது கேள்வி

முத்துலெட்சுமி - 2 ஆவது,5 ஆவது படம் மட்டும் சரியா கண்டு பிடிச்சாங்க,ஆனா பாட்டு தப்பு!! :-)

பாலராஜன் கீதா - 2 மற்றும் 3 ஆவது கேல்விகளுக்கு சரியான விடை அளித்தார், 3ஆவது கேள்விக்கு படத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டிருந்தார்

ப்ளாகேஸ்வரி - முதல் கேள்விக்கு மட்டும் சரியான விடை

G3 - 1,2 மற்றும் 5ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

K4K - 1 மற்றும் 5 ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

CDK - 1 மற்றும் 2ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

மை ஃபிரண்ட் - 1,2 மற்றும் 5

தம்பி - 1 மற்றும் 5

ஜிரா - 2 மற்றும் 3

அனானி - 4
கடைசி வரைக்கும் யாராலையும் 4 ஆவது கண்டு பிடிக்க முடியலையே என்று நினைத்த போது ,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து சரியான விடையை சொன்ன அனானி நண்பர் நம் கவனத்தை பெறுகிறார்.
:-)

இது தவிர இசை இன்பம் அன்பர்கள் கே.ஆர்.எஸ் மற்றும் ஜீவாவின் பதில்கள் இதோ

கே.ஆர்.எஸ் - 1,2,3,5 (இது தான் டாப் ஸ்கோர்!! :-))
ஜீவா - 1ஆவது பாட்டுக்கு சரியான விடை!!

பங்கு பெற்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!! :-)

30 comments:

SurveySan said...

என்ன கொடுமைங்க இது. ஒரு பாட்டும் தெரியலியே?

4 & 5 ஒரே மாதிரி இருக்கு?

பாட்டு நடுவுல வரது கஷ்டம்தான் கண்டுபிடிக்க. ஆரம்ப பிட் போட்டீங்கன்னா டக்குனு சொல்லிடுவேன்.

MyFriend said...

என்னமோ விளையாட்டுன்னு ஆர்வமா வந்தேன். பாட்டு கேட்கனுமா? headphone இல்லையே ஆபிஸ்ல????

:(((

சகாதேவன் said...

எனக்கு 3-வது பாட்டு மட்டும்தான் தெரிகிறது.
"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே" தானே.
சகாதேவன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டாவது பச்சைக்கிளி முத்துசரம் எம்ஜிஆர் பாட்டு... ??

4 அண்ட் 5 ஒன்னே தான் சர்வேசன் சொன்னமாதிரி...தவறா எதுவும் போட்டுட்டீங்களா?

CVR said...

@சர்வேசன்
அட!!
எல்லோரும் சுலபமாக கண்டு பிடிச்சிருவாங்கன்னு நெனைச்சனே!! :-)
அடுத்த தடவையில் இருந்து கொஞ்சம் சுலபமாக்கிடலாம்!! :-)

சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐந்தாவது போட்டதில் காபி பேஸ்ட் பிழையாகி விட்டது!! :-(
இப்பொழுது சரி செய்து விட்டேன்.


@மை ஃபிரண்ட்
வீட்டுக்கு போய் பொறுமையா கேட்டு பாத்துட்டு சொல்லுங்க யக்கோவ்!! :-)

@சகாதேவன்
மூன்றாவது கேள்விக்கான உங்கள் விடை சரியானது!!
மத்த பாடல்கள் தெரியலையா??

@முத்துலெட்சுமி
இரண்டாவது கேள்விக்கான உங்கள் விடை சரி!!
சர்வேசன் சொன்னது போல் நான் தான் தவறு செய்து விட்டேன்!
இப்பொழுது கேட்டு பாருங்கள்!! :-)

என்ன ஆச்சரியம்! பழைய பாடல்கள் எல்லாம் சரியா சொல்றாங்க, ஆனா புது பாடல்களை இது வரை யாரும் கண்டு பிடிக்க வில்லையே!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆளாள கண்டா ஆடலுக்கு தகப்பா கடைசிபாட்டு ...

பாலராஜன்கீதா said...

2. உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ ?
3. போலீஸ்காரன் மகள் - தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR
பதிவிற்கு நன்றி!
நல்ல கலெக்சன்! செம விளையாட்டு!

நான் 2,3,5 கண்டு புடிச்சிட்டேன்! தனி மடலில் சொல்கிறேன்!
இங்கன போட்டா, என் பின்னூட்டம் மாடரேஷன் இல்லாம பப்ளிஷ் ஆயிடும்! அதான்! :-)

CVR said...

@முத்துலெட்சுமி!
கடைசி பாட்டு படம் சரி ஆனா பாட்டு தப்பு!!
:-)

@பாலராஜன் கீதா
நீங்களும் பழைய பாடல்களை கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டீங்க!! :-)

மற்றவைகள்??? :-)

Blogeswari said...

1. Ennai pandada - 12B
2,3,4,5. SORRY TERIYALA

G3 said...

இந்த விளையாட்டு நல்லா இருக்கு.. மொதல் பாட்ட கேட்டதும் நிஜமாவே ஈ.சி தான்னு நினைச்சேன்.. 2-வது பாட்டு கடைசி பார்ட்ல தான் கொஞ்சம் க்ளூ வந்துது.. 3-வது 4-வது ஆப்பு.. 5-ஆவது ஓ.கே..

1. இனியவளே.. - உள்ளம் கேட்குமே
2. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைச்சுடர்..

5. முதன் முறை உன்னை பார்த்தேன் - சங்கமம்

k4karthik said...

சூப்பர் விளையாட்டு CVR..

k4karthik said...

என் பங்குக்கு நானும் முயற்சி பண்றேன்...

1. என்னை பந்தாட - உள்ளம் கேக்குமே..

2,3,4,- ச்சுத்தமா தெரியலே..

5- கேட்ருகேன்..ARR மியூசிக் தானே..

CVR said...

@Blogeswari
முதல் பாட்டுக்கு உங்க விடை சரி!

மத்தது எல்லாம் வேறு சிலர் சரியா கண்டு பிடிச்சிட்டாங்களே!!
நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க!! :-)

@G3
சூப்பரு யக்கோவ்!!
இத வரை வந்ததுலையே அதிகமான சரியான விடைகளை நீங்க தான் கொடுத்திருக்கீங்க!! :-)
1,2,5 மூன்றுமே சரியான விடைகள்!!அடுத்த இரண்டையும் சீக்கிரம் கண்டு பிடிங்க!! :-)

@ஜீவா
உங்க மின் அஞ்சல் கிடைத்தது .
முதல் கேள்விக்கான பதில் சரி!!

மற்ற இரண்டு யூகங்களும் தவறு!! :-)

CVR said...

@k4k
வாங்க அண்ணாத்த!!
முதல் கேள்விக்கான விடை சரி!

ஐந்தாவது கேள்விக்கான இசை அமைப்பாளரை சரியா கண்டு பிடிச்சுட்டீங்க!

பாட்டையும் சீக்கிரம் கண்டு பிடிங்க!! :-)

cdk said...

முதல் பாட்டு என்னைப் பந்தாடப் பிறந்தவளே!! - உள்ளம் கேட்குமே!


ரெண்டாவது பாட்டு பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரி இருக்குது??

MyFriend said...

1- ennai panthaada piranthavale

5- muthan murai ennai paarthen

maththathu ellaam pazhaiya paaddu poddu kavuththuddeengga.. but 2nd i think it's pachaikili muthucharam (old song).. etho athu remixle ellaam vanthathunale kandupudikka mudinjirukku.:-D

CVR said...

@CDK
உங்க பதில் சரி
முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கு!! :-)

@மை ஃபிரண்ட்
உங்க பதில்களும் சரிதான்!!
பழைய பாட்டை ரீமிக்ஸ் வெச்சு கண்டு பிடிக்கிறீங்களா???
என்ன கொடுமை சார் இது!!! :-(

@கே.ஆர்.எஸ்
உங்க மின் அஞ்சல் பதில்களும் சரி!
நான்காவது கேள்வியை தவிர எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க!! :-)

நாலாவது கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!! :-)

@பாலராஜன் கீதா
முன்னமே குறிப்பிட மறந்து விட்டேன்.
3-ஆவது கேள்விக்கு நீங்கல் சொன்ன பாடல் சரிதான் ஆனால் படம் பெயர் தவறு!! :-)

Anonymous said...

சரியா விடை தந்தால் எனக்கு என்ன பரிசு??பரிசை சொல்லுங்க விடையை நான் சொல்லுறேன்.பிட் அடிக்க முடியுமா?சிவிஆர் அண்ணா எனக்காக விடை எல்லாம் ரகசியமாக மெயில் அனுப்பிடுங்க.இது நம் இருவரின் ரகசியம் சரியா

Anonymous said...

i guessed 3 songs right.innum 2!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்கா|thurgah said...
சரியா விடை தந்தால் எனக்கு என்ன பரிசு??//

அல்வா அல்லது ஃப்ரோசன் இட்லி! :-))

//i guessed 3 songs right.innum 2!!!//

சிஸ்டர். I guessed 4 songs right and emailed him. But this CVR said I am ineligible to participate. இந்த நியாயத்தை நீங்களே கேளுங்க!

கதிர் said...

1.என்னை பந்தாட பிறந்தவனே
5.முதல் முறை... சங்கமம்

CVR said...

@துர்கா!!
என்ன அக்கா!!
உங்க பதிகளை அனுப்பவே இல்லையா??

@கே.ஆர்.எஸ்
ஏன் இந்த கொலை வெறி??

@தம்பி!
உங்க இரண்டு பதில்களும் சரி தம்பியண்ணே!! :-)
மத்தது?? :-)

G.Ragavan said...

2. பொன்பட்டாடை மூடிச் செல்லும் தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளை தோறும் போதை என்ன சொல்ல............

அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
காணாததும் கேளாததும் காதலில் விளைந்திடுமோ? ;)

3. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

4. இது இளையராஜா ஸ்டைல். அவருதான் இசையமைப்பாளர். ஆனா கேட்ட மாதிரியே இருக்குது. அதுல அந்த மெலடி வர்ர கட்டம்....தூங்காத கண்ணின்று ஒன்று பாட்டோட மெட்டு மாதிரியே இருக்குது.

CVR said...

@ஜிரா
2,3 பாடல் சரி!!

4-ஆவது நீங்க சொன்ன இசையமைப்பாளர் தான்!!

ஆனா பாடல்??? :-)

Anonymous said...

4. நீல குயிலே ஜொடி குயிலே
சூரசம்ஹாரம்
கமல், லிப்ஸ் நிரோஷா

jeevagv said...

கேள்விகளின் விடைகளைப் பார்த்து, ஆ. இந்த பாடல்தானே என்று நினைத்தேன்!

இது போல இசை வைத்து பாடல்களை கேட்கும் பதிவொன்று இட வெகுநாளாக நானும் நினைத்துக் கொண்டு இருந்தேன், நீங்கள் செய்து விட்டீர், வாழ்த்துக்கள்!

Anonymous said...

நாந்தான் எல்லாத்தையும் ஜி talkஇல் சொன்னேனே!
1,2,5 my answer were right,3 n 4 i couldnt guess.hehe

@krs

//அல்வா அல்லது ஃப்ரோசன் இட்லி! :-))
//

இதைதான் சிவிஆர் அன்றாடம் கொடுக்கிறாரே.. :(((


//சிஸ்டர். I guessed 4 songs right and emailed him. But this CVR said I am ineligible to participate. இந்த நியாயத்தை நீங்களே கேளுங்க!//

சிவிஆர் why man whyyyy???கேட்டுட்டேன் அண்ணா

TBCD said...

சிவிஆர்...

எல்லா பாட்டையும் சரியாச் சொல்லி நான் போட்ட பின்னுட்டம் எங்கே..

இது போங்கு....

ஒத்துக்க முடியாது...

Avial said...

Ellathukkum naan orey answer daan ..Pass..Ellam keata madhiri irundhadhu ana answer theriledhu :(

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP