Friday, September 07, 2007

நறுமுகையே நறுமுகையே - நளினா நீ கொஞ்சம் நில்லாய்!

மிக மிகப் பழங்காலத் தமிழ்; சங்க இலக்கியப் பாடல்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா? ஆடியன்ஸ் கல்லெறிவார்களே!
சரி, அதை சுரங்களோடு கர்நாடக மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!

டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி. காலேஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாரும் இந்த ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா.
சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு!
இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு அவிங்க ரொம்பவே மரியாதை காட்டுனானுங்கப்பா!

எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தானாம்!
அப்படி என்னடா மச்சி இந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
வரிகளா? இசையா? குரலா? எதுடா, எது? எது?
உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு தானே!
இருவர் படத்தில், ரஹ்மான் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

என்னாது ரகுமானா? பொதுவா இந்த மாதிரி கர்நாடிக் மெட்டு எல்லாம் நம்ம மொட்டை தானடா கலக்குவாரு!
நல்லாத் தெரியுமா? இசை ஞானி இளையராஜாவா இருக்கப் போவுது!
ச்சே ச்சே! நிச்சயமா ரகுமான் தாண்டா!
ராஜா இதுல பெரிய பிஸ்து தான். ஆனா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா ரகுமான் கொடுத்த கர்நாடிக் மாஸ்டர் பீசுல இதுவும் ஒன்னுடா!ஆமாண்டா மாப்ள, எழுதியவரு யாரு? - நம்ம கவியரசர் வைரமுத்து தானே!
அதுல என்னடா சந்தேகம்! அவரே தான்!
சும்மாவே அமீபா, நோக்கியான்னு இங்கலீஷ் வார்த்தைகளை நேச்சுரலா தமிழோட கலந்து அடிப்பாரு! அவருக்குத் தூய தமிழ்ல இப்படிப் பாட்டு போடக் கசக்குமா என்ன?
இதுல வர சில வரிகளைச் சங்கத் தமிழ் பாட்டுல இருந்து அப்படியே வரி மாத்தாம கொடுத்திருக்காருடா!

அதுவும் "யாயும் யாயும் யார் ஆகியரோ - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று வருது பாரு!
அது...குறுந்தொகை-ன்னு ஒரு பழம் பெரும் இலக்கியப் பாட்டுல இருந்து எடுத்துக்கிட்டாரு மனுசன்.
அதை எழுதனவரு பேரே செம்புலப்பெயனீரார்-னு சொல்லுவாங்களாம்!

ஹூம்...லேசா ஞாபகம் வருதுடா! இதே பாட்டைத் தான் நான் சாய்ஸ்-ல வுட்டேன் ப்ளஸ்டூ-ல!
ஹூம்...நேரம் பாத்தியா! அப்ப "சாய்ஸ்" ல வுட்ட!
இப்ப, பெப்சி உங்கள் "சாய்ஸ்"-ல அதையே கேட்டு கேட்டு வாங்கற!


பாடறவன் இருக்கானே, அவனும் ஒன்னும் சும்மா இல்லடா! உன்னி கிருஷ்ணன்! சொல்லவே வேணாம் - மெலடி மன்னன்.
அவன் கண்டி நம்ம காலேஜ்-ல இப்ப படிச்சான்னு வையி...ஒரு பிகரு நம்மள பாக்காதுங்க!
அது என்னமோ கரெக்டு தான்டா! குரலுக்குக் குரல், கொஞ்சும் குரல் வேற! சொல்லணுமா நம்ம பொண்ணுங்களுக்கு!
கூடப் பாடினது பாம்பே ஜெயஸ்ரீ. அந்த அம்மா கொஞ்சம் அடர்த்தியா பாடுவாய்ங்க! இதுல நல்லாத் தான் குழைஞ்சு பாடி இருக்காங்க!

சரி, அது என்னமோ ஒரு ராகம் சொன்னியே! இன்னாது - சூரிய காந்தியா?
டேய் டொக்கு! அது சூரிய காந்தியும் இல்ல, இந்திரா காந்தியும் இல்ல! அது பேரு நளின காந்தி டா! அந்த ராகத்துல தான் இந்தப் பாட்டைப் போட்டிருக்காங்க!

ஒங்க கொக்கா மக்க! ஒனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? பாட்டு க்ளாஸ் பத்மா டீச்சரைக் கணக்கு பண்றியே, அந்த எக்ஸ்பெரீயன்ஸா?
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
சரி வா, நாம பாட்டைப் பார்க்கலாம்! ராகம், போகத்துக்கெல்லாம் அப்பறம் வரலாம்!

பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்க, இங்கே!
பாடலைப் பொருளோடு அனுபவித்துக் கேட்கும் போது, ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது. அதான் சற்றே கடினமான சொற்களுக்கு மட்டும் விளக்கம். மத்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
(முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு;
என்ன அரும்பு? மல்லிகையோ, இருவாட்சியோ...காதலர்களுக்குத் தான் தெரியும்!
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள் என்பது கணக்கு.

செங்கனி ஊறிய வாயா? - அது எப்படி கனி ஊறியதுன்னு தெரியும்? என்ன கனி? முக்கனியா?
அடப் போங்க, நான் சொல்ல மாட்டேன். ஒரே வெட்கமா இருக்கு :-)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)
(அற்றைத் திங்கள் = அந்த மாதம்;
தரளம்=முத்து; நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய;
பொய்கை=குளம்; கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

(புரவி=குதிரை)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)


மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன!
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன!
(பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்; பார்த்தவுடனே சொல்லிடலாம் இது காதல் தான் என்று!
இப்பவெல்லாம் இந்தப் பசலை யாருக்காச்சும் வருதா தெரியலையே! நீங்க யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா? :-)
ஒரு வேளை இந்தக் காலத்தில் பொண்ணுங்களை விட்டுவிட்டு, பசங்களுக்கு மட்டும் தான் பசலை வருதா என்ன? :-)


நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை

(நறுமுகையே நறுமுகையே)

(மேகலை = ஒட்டியாணம் போன்ற ஆபரணம். பெண்கள் இடுப்பில் அணிவது; ஏழு அல்லது எட்டுக் கோர்வை இருக்கும். இழுத்துக் கட்டலாம் ஒரு பெல்ட் போல; இடையில் மேகலையை இறுக்கிக் கட்டக் கூட முடியாத அளவுக்கு அவள் மெலிந்து போய் விட்டாளோ!)

யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?

(யாய்=தாய்; எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் )

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன!

(செம்புலம்=செம்மண் பூமி; செம்மண்ணில் சேர்ந்த நீர் போல ஒன்னா மிக்ஸ் ஆனது நம்ம காதல்!)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயாபடம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து


இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறுந்தொகை, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதாண்டா பொருள்!

சூப்பர்டா மச்சி! பாட்டுக்குப் பொருளை, இந்த மாதிரியே எக்ஸாம்-ல எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :-)
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவுன்னு பாட்டு வருமே, அதுல கூட
"செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் கூட இதே பொருள்-ல பாடியிருக்காருடா!

டேய், போதும் போதும்! ஒத்துக்கறேன்!
ஒனக்குக் கூட கொஞ்சம் இசை ஞானம் இருக்குடா மச்சி!
இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?


நளின காந்தி என்பது அருமையான ராகம். பேருக்கு ஏற்றாற் போல் அப்படி ஒரு நளினம்!
அந்த ராகத்தில் சில பாடல்கள், இதோ உங்கள் செவிகளுக்கு!

எந்தன் நெஞ்சில் நீங்காத...தென்றல் நீ தானா?


மனம் விரும்புதே உன்னை - உன்னை


தியாகராஜரின் மனவயால கிஞ்சன என்ற நளினகாந்தி கீர்த்தனை - மாண்டலின்


லயதரங்கா என்னும் வாத்தியக் குழு (Band), நளினகாந்தியைப் போட்டி போட்டு வாசிக்கறாங்க! இங்கே கேளுங்க!

என்னாங்க, நளினாவை நளினமா ரசிச்சீங்களா?
அடுத்த பதிவில் இன்னொரு ஃபிகரை ரசிக்கும் வரை...
"வர்ட்டா" ஸ்டைலில் வரட்டா? :-)

46 comments:

சிவபாலன் said...

தலைவா KRS,

உங்க காலைக் காட்டுங்க..

நீங்க கடவுள்.. கல்க்குறீங்க..

( இனி நீங்களும் கடவுள்.. அன்பே சிவத்தில் சொன்ன மாதிரி)

பகிர்வுக்கு மிக்க நன்றி KRS!

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

நீங்க தமிழ் வாத்தியாரா வந்தா எல்லா பசங்களுக்கும் தமிழ் பிடிக்க ஆரம்பிச்சிடும் :-)

CVR said...

AWESOME post!!!
அண்ணாத்த!!!
கலக்கிட்டீங்க போங்க!!!
வீட்டுக்கு போய் பாடல் எல்லாம் கேட்கனும்!!!

எல்லாமே எனக்கு பிடிச்ச பாட்டுகள்!!

//
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
//

இது என்ன புது கலாட்டா?? எனக்கு என்னப்பா தெரியும் இசையை பத்தி??? அதுவும் ராகம் தாளம் எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே!! :-)

//இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?///
அடாடா!!!
ஏன் இந்த கொலைவெறி அண்ணாத்த??
இசை இன்பம் என்றாலே கே.ஆர்.எஸ் தான் என்று அழற குழந்தை கூட சொல்லுமே????

ஏதோ ஒன்னு!!
போஸ்ட் கலக்கல்!!
வாழ்த்துக்கள்!! :-)

Anandha Loganathan said...

kalakkal.


tamilla varthai varamattengudhu (unmaiya sollapona tamilla varthainga theriyale :( )

Awe-inspriting Post.

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு தல! ரொம்ப நளினமான பாடல்கள்தான்!! :)

Anonymous said...

இலங்கை வானொலியில் ராஜேஸ்வரி என்ற அறிவிப்பாளர் திரைப்பாடலையும்,சங்கப்பாடலையும்
ஒப்பீட்டு பொருளினை மனம் மயங்க இனிமையாக கூறுவார்...அந்த நாட்களின் நினைவுகள் இப்பதிவுகளில்..

நன்றி கண்ணா...

Mani - மணிமொழியன் said...

Fantastic, you made my day...

மெளலி (மதுரையம்பதி) said...

ஸகரிமபநி- ஸநிபகரி - காகலி நிஷாதம்ன்னு நினைக்கிறேன், டி.ஆர்.சி சார் வந்தா சரியா சொல்வாரு...

நல்ல ராகத்தினை எடுத்துக் கொடுத்தீர்கள்....மிக்க நன்றி.

நேயர் விருப்பமாக அடுத்து நாயகி ராகப் பாடல்களைத் தர முடியுமா ?

Unknown said...

nalina cant I ? Nalina Can I nnu coorect panna paakureengala.. uda matom illa..
ragam selection very commendable.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவபாலன் said...
தலைவா KRS,
உங்க காலைக் காட்டுங்க..
நீங்க கடவுள்.. கல்க்குறீங்க..//

சிபா...என்னை இப்படித் திடீர்னு பயமுறுத்தறீங்களே!
ஓ...ஒரு வேளை கடவுளின் காலடியில் தான் தேங்கா ஒடைப்பாங்க! அது மாதிரி ஏதாச்சும் திட்டமா? :-)))

//பகிர்வுக்கு மிக்க நன்றி KRS!//

இசையும் தமிழும் ஒன்னாச் சேர்ந்தா உங்களுக்குப் பிடிக்காமப் போகுமா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
கலக்கல்...
நீங்க தமிழ் வாத்தியாரா வந்தா எல்லா பசங்களுக்கும் தமிழ் பிடிக்க ஆரம்பிச்சிடும் :-) //

கிழிஞ்சுது போங்க!
கன்னா பின்னா லேங்க்வேஜ்-ல தமிழ்ப் பாடம் நடத்தறேன்னு ஹெட்மாஸ்டர் கிட்ட போட்டுக் கொடுத்து என் சீட் தான் கிழியும்! :-))

ஆனாலும் தமிழ்ப் பாடம் நடத்த எனக்கு ரொம்ப பிடிக்கும் பாலாஜி! அதுவும் வர்ட்டா ஸ்டைல்ல! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
AWESOME post!!!//

நன்றி CVR

//அண்ணாத்த!!!
கலக்கிட்டீங்க போங்க!!!//

ஐ ஆம் நாட் யுவர் அண்ணாத்த! :-(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anandha Loganathan said...
kalakkal.
tamilla varthai varamattengudhu (unmaiya sollapona tamilla varthainga theriyale :( )//

வாங்க அனந்த லோகநாதன்!
தமிழ்ச் சொற்களைக் கொட்டி விளையாடிச் சினிமாப் பாடல்கள் இன்னும் நிறைய வரணும்!

பண்டைத் தமிழ் இலக்கியச் சொற்கள் எல்லாம் மக்களை இன்னும் ஈசியாச் சென்றடையும் - நறுமுகை மாதிரி! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
நல்ல பதிவு தல! ரொம்ப நளினமான பாடல்கள்தான்!! :) //

நன்றி தல!
நளின காந்தியில் வேற ஏதாச்சும் ஃபேமஸ் மரபு வழிப் பாட்டு இருக்கா தல? - தியாகராஜரின் மனவயாலகிம் தவிர!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
இலங்கை வானொலியில் ராஜேஸ்வரி என்ற அறிவிப்பாளர் திரைப்பாடலையும்,சங்கப்பாடலையும்
ஒப்பீட்டு பொருளினை மனம் மயங்க இனிமையாக கூறுவார்...//

ஆகா...யோகன் அண்ணா, வெற்றி இல்லை கானா பிரபா போன்ற நண்பர்களைக் கேட்கணுமே இவிங்கள பத்தி!

நன்றி புஷ்பலதா...ராஜேஸ்வரி அவர்கள் ஒலிச்சுட்டி கிடைச்சா மறக்காமல் எங்களுக்கும் கொடுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
இலங்கை வானொலியில் ராஜேஸ்வரி என்ற அறிவிப்பாளர் திரைப்பாடலையும்,சங்கப்பாடலையும்
ஒப்பீட்டு பொருளினை மனம் மயங்க இனிமையாக கூறுவார்...//

ஆகா...யோகன் அண்ணா, வெற்றி இல்லை கானா பிரபா போன்ற நண்பர்களைக் கேட்கணுமே இவிங்கள பத்தி!

நன்றி புஷ்பலதா...ராஜேஸ்வரி அவர்கள் ஒலிச்சுட்டி கிடைச்சா மறக்காமல் எங்களுக்கும் கொடுங்க!

இலவசக்கொத்தனார் said...

//நளின காந்தியில் வேற ஏதாச்சும் ஃபேமஸ் மரபு வழிப் பாட்டு இருக்கா தல? //

முதலில் நீங்கள் தந்திருக்கும் கீர்த்தனை மனவியாளகின் எனத் தொடங்கும் என நினைக்கிறேன்.

இதைத்தவிர 'நளினகாந்திமதிம்' எனத் தொடங்கும் ஒரு ராகமாலிகையின் முதல் ராகம் நளினகாந்தி.

பின், நடஜனபாலினி என்ற பாடலும் நீ பாதமே கதி என்று மற்றுமொரு பாடலும் கூட உண்டு. தில்லானாக்களும் இந்த இராகத்தில் புனையப்பட்டுள்ளது. இவை தவிர வேற பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை. கேட்டு சொல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
முதலில் நீங்கள் தந்திருக்கும் கீர்த்தனை மனவியாளகின் எனத் தொடங்கும் என நினைக்கிறேன்//

ரெண்டு விதமா உச்சரிக்கறாங்க கொத்ஸ்!
மன வியால கிஞ்சன என்றும் மனவி நலகிஞ்சன என்றும் உச்சரிக்கறாங்க.

மன வியால கிஞ்சன ராததே
மர்மம் எல்ல தெலிபதனே மனசா

ராமன் மனத்தை அறிந்த நான் சொல்வதைக் கேட்க மாட்டாயா, மனசே//

//இதைத்தவிர 'நளினகாந்திமதிம்' எனத் தொடங்கும் ஒரு ராக மாலிகையின் முதல் ராகம் நளினகாந்தி.//

கேட்டா மாதிரி தான் இருக்கு! தேடிப் பாக்கிறேன்!

//தில்லானாக்களும் இந்த இராகத்தில் புனையப்பட்டுள்ளது. இவை தவிர வேற பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை. கேட்டு சொல்கிறேன்.//

ரொம்ப நன்றி தல, மேலதிக தகவல்ஸ்-க்கு!
ராகம் கொஞ்சம் வித்தியாசமான ராகமா? அதான் அவ்வளவு சட்டன்னு புரியலை! உடனே குருநாதர் ஒங்க ஞாபகம் வந்துடுச்சு! :-)

இலவசக்கொத்தனார் said...

கிம் இல்லை கின் எனச் சொல்லதான் முயன்றேன்.

//உடனே குருநாதர் ஒங்க ஞாபகம் வந்துடுச்சு!//

யப்பா உனக்கு சங்கீதம் பத்தித் தெரியணமுன்னா நல்லா தெரிஞ்சவங்க கிட்ட போ. இந்த மாதிரி எதையாவது நீ எழுதி அதை மத்தவங்க படிச்சாங்கன்னா நம்மளை (என்னை, என் பின்னால் வந்த ஒரே காரணத்துக்காக உம்மை) காறித் துப்பப் போறாங்க.

நான் சங்கீதத்தில் ஞானசூன்யம் ஐயா.

G.Ragavan said...

பாட்டுலயும் யாயும் ஞாயும் யாராகியறோதான். யாயும் யாயும்..மொழ்ழின்னு பாம்பே ஜெயஸ்ரீ கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்காங்க. நளினகாந்திய நெளினகாந்தியாக்கீட்டாங்க. :)))))))))

பழைய தமிழ்ப்பாடல்களை இரகுமானின் இசையில நெறைய கேக்கலாம். இந்திரையோ இவள் சுந்தரியோன்னு குத்தாலக் குறவஞ்சீல இருந்து....அதே மாதிரி கற்க கசடறன்னு பாய்ஸ்ல.....மாலே மணிவண்ணா...சிவாஜியில...

என்ன....திருப்புகழத்தான் நேரடியாப் பயன்படுத்தாம பாட்டா மாத்தீருவாரு. நாதவிந்து கலாதீ நமோன்னா...என் வீட்டுத் தோட்டத்தில்னு வரும். முத்தைத் திருபத்தித் திருநகைன்னா வெற்றிக்கொடி கட்டுன்னு வரும்.

அப்புறம் ஒரு திருத்தம்....என்உடல் இல்ல....என்னுடல். இகலைப்பைல அடிக்கும் போது தானே என்னுடலாயிருதே...அப்புறம் எப்படி அடிச்சீங்க?

அற்புதன் said...

ரசித்தேன்,
சுவைத்தேன்,
நகைத்தேன்.
நன்றிகள்.

jeevagv said...

கலக்கல் பதிவுக்கு Hats off KRS!

வ.வா.ச தாக்கத்தில நகைச்சுவையும் பஞ்ச் டயலாக்கும் கலந்து அசத்தி இருக்கீங்க!

கடைசியிலே அந்த பேண்ட் - எல்லாத்துக்கும் கீரிடம் வைத்தை மாதிரி - டாப் கிளாஸ்!

நளினகாந்தியில் ஒரு சில பாடல்கள்தான் சாஸ்திரிய சங்கீதத்தில் - GNB சார் இசை அமைத்த ஒரு கீர்த்தனையும் உண்டென நினைக்கிறேன்.

Anonymous said...

//ஆகா...யோகன் அண்ணா, வெற்றி இல்லை கானா பிரபா போன்ற நண்பர்களைக் கேட்கணுமே இவிங்கள பத்தி!

நன்றி புஷ்பலதா...ராஜேஸ்வரி அவர்கள் ஒலிச்சுட்டி கிடைச்சா மறக்காமல் எங்களுக்கும் கொடுங்க!//

ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் ஒலிச்சுட்டியினை கேட்க நானும் ஆவலோடுதான் இருக்கின்றேன்.இலங்கை நண்பர்கள் உதவி வேண்டும்.எனக்கு கிடைக்கவில்லை.அல்லது தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

மிக மிக அருமையான பாடல்கள் இரவிசங்கர். எல்லா பாடல்களும் நான் விரும்பிக் கேட்பவை. அவை எல்லாம் நளினகாந்தி இராகம் என்று அறிந்தேன். அவ்வளவு தான். அடுத்து இன்னொரு பாடலைக் கொடுத்து அது நளினகாந்தியா இல்லையா என்று கேட்டால் தெரியாது. :-)

மாண்டலின் இசையையும் இரசித்தேன் இரவிசங்கர். நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
இப்பாடல் (நறுமுகை) வெளிவந்து பெரிதாகப் புகழடையவில்லை.(கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா போல்) அந்த நேரம் ஒரு பேட்டியில் கவிஞரை ஏன் நீங்கள் இலக்கிய நயமான பாடல்கள் எழுதுவதில்லை எனக் கேட்ட போது, அவர் 'நான் எழுதிய இலக்கியமான 'நறுமுகையின்' நிலை என்ன??இதை விட என்ன? எழுத வேண்டுமென நினைக்கிறீர்கள்..எனத் திருப்பிக்கேட்டார்.
ஆனால் பாரம்பரிய இசைரசிகர்களை இந்த பாடல் கூட்டு வெகுவாகக் கவர்ந்தது. என் விருப்பப் பாடல் கூட
மேலும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் இப்போதும் 'பொதிகைத் தென்றல்' எனும் பழந்தமிழ் இலக்கியம்-திரையிசைப் பாடல் ஒப்பு நோக்கும் நிகழ்ச்சியைப் பிரதி ஞாயிறு செய்கிறார். சென்ற வாரமும் கேட்டேன். இந்த நிகழ்ச்சிக்குக் குறைந்தது 35 வயதாவது இருக்கும். முன்பு ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம் இதைத் தொகுத்து வழங்கியதாக ஞாபகம்.slbc.lk
இவ்விணைய முகவரியில் கேட்கலாம்.பாரிஸ் நேரம் மதியத்தின் பின்னே கேட்பதால் அங்கே மாலை3 மணிக்குப் பின் ஒலியேறும்.

இலவசக்கொத்தனார் said...

குமரன்,

சினிமா பாடல்களில் அவ்வளவு எளிதாகத் தெரியாது. சுத்தமாக ஒரு ராகத்தில் அப்பாடல்கள் இருப்பதில்லை. அதனால் நாம் ஒரு பாடலை அந்த ராகம் எனச் சொன்னோமானால் அது அந்த ராகத்தின் ஸ்வரங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். (Of course, there are exceptions.) அது மட்டுமின்றி, பாரம்பரிய இசையின் தனித்துவம் அதில் கமகங்கள் எனச் சொல்லப்படும் ஒரு விஷயம். அது பொதுவாக சினிமாப் பாடல்களில் இருப்பதில்லை. அதனால் அது ராகங்களின் கொஞ்சம் நீர்த்துப் போன வடிவம்தான்.

ஆனால் தொடர்ந்து பாரம்பரிய இசையைக் கேட்டு வந்தீர்களானால் ராகத்தை எளிதாகக் கண்டு கொள்ளலாம். அதற்கு அவ்விசையைக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Mani RKM said...
Fantastic, you made my day...//

நன்றி மணி!

//மதுரையம்பதி said...
ஸகரிமபநி- ஸநிபகரி - காகலி நிஷாதம்ன்னு நினைக்கிறேன், டி.ஆர்.சி சார் வந்தா சரியா சொல்வாரு...//

மெளலி சார், இருங்க அவரைக் கூட்டியாறேன்! :-)

ஆரோகண-அவரோகணம் எல்லாம் கலக்கறீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நேயர் விருப்பமாக அடுத்து நாயகி ராகப் பாடல்களைத் தர முடியுமா ?//

ஆகா இதுக்கு கொஞ்சம் மெனக் கெடணுமே...
சரி நேயர் விருப்பம்...கெட்டுட்டாப் போச்சு! :-)

நாயகி ராகப் பாடல்கள் - ஜீவா & சீவீஆர். நீங்களும் ஞாபகம் வச்சிக்கோங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Madhusoodhanan said...
nalina cant I ? Nalina Can I nnu coorect panna paakureengala.. uda matom illa..
ragam selection very commendable.//

வாங்க மது!
வார்த்தை விளையாட்டா நளினா கூட? :-))
நளினா Cant I = நளின காந்தி...
யம்மாடியோவ்! பெரிய ஆளு தாங்க நீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
(என்னை, என் பின்னால் வந்த ஒரே காரணத்துக்காக உம்மை) காறித் துப்பப் போறாங்க.

நான் சங்கீதத்தில் ஞானசூன்யம் ஐயா. //

Everything starts from Zero! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
பாட்டுலயும் யாயும் ஞாயும் யாராகியறோதான்//

திருத்தத்தக்கு நன்றி ஜிரா.

//யாயும் யாயும்..மொழ்ழின்னு பாம்பே ஜெயஸ்ரீ கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்காங்க. நளினகாந்திய நெளினகாந்தியாக்கீட்டாங்க. :)))))))))//

ஜெயஸ்ரீ கொஞ்சம் உச்சரிப்பு-ல மூச்சு விட்டுறுவாங்க! :-))

//இந்திரையோ இவள் சுந்தரியோன்னு குத்தாலக் குறவஞ்சீல இருந்து....அதே மாதிரி கற்க கசடறன்னு பாய்ஸ்ல.....மாலே மணிவண்ணா...சிவாஜியில...//

ஆமாம் ஜிரா
அங்கொன்னும் இங்கொன்னுமா ரகுமான் நல்ல பிட்ஸ் கொடுத்திருக்காரு...ராஜா அளவுக்கு இல்லீன்னாலும்...

//என்ன....திருப்புகழத்தான் நேரடியாப் பயன்படுத்தாம பாட்டா மாத்தீருவாரு. நாதவிந்து கலாதீ நமோன்னா...என் வீட்டுத் தோட்டத்தில்னு வரும்//

அது பாட்டா கொடுக்காம ராகத்த மட்டும் கொடுத்தாரு ஜிரா, ஜெண்டில் மேன் படத்தில்.
நாதநாமக்ரியை என்னும் ராகம்; அதான் என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்!

//என்உடல் இல்ல....என்னுடல். இகலைப்பைல அடிக்கும் போது தானே என்னுடலாயிருதே...அப்புறம் எப்படி அடிச்சீங்க?//

நான் தான் எப்பமே மக்களுக்கு ஈசியா இருக்கட்டும்-னு சேர்த்து எழுதிவரும் சொற்களைக் கொஞ்சம் பிரித்து எழுதுவேன்! தமிழ் நடை கொஞ்சம் எளிதாச்சுதுனா மக்கள் படிக்க ஏதுவாய் இருக்குமேன்னு தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// அற்புதன் said...
ரசித்தேன்,
சுவைத்தேன்,
நகைத்தேன்.
நன்றிகள்.//

தேன் தேன் என்று சொன்ன அற்புதன் தமிழ்த்தேனைப் படித்தேன், பிடித்தேன்! நன்றி அற்புதன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
வ.வா.ச தாக்கத்தில நகைச்சுவையும் பஞ்ச் டயலாக்கும் கலந்து அசத்தி இருக்கீங்க!//

அச்சோ...வவாச அட்லாஸ் மாசம் முடிஞ்சி போச்சுங்க! இப்போ ஒன்லி மாதவி தான்! :-))

//கடைசியிலே அந்த பேண்ட் - எல்லாத்துக்கும் கீரிடம் வைத்தை மாதிரி - டாப் கிளாஸ்!//

ஆமாங்க ஜீவா...நல்ல fusion பண்ணி இருக்காங்க! fluteravi.com பாருங்களேன். இசை இன்பத்தில் நாம் கூட ஒரு பதிவு போடலாம் அதைப் பற்றி!

//GNB சார் இசை அமைத்த ஒரு கீர்த்தனையும் உண்டென நினைக்கிறேன்//

நளினகாந்தி ஒரு அபூர்வ ராகம் தான்! GNB கீர்த்தனை பேர் தெரியுமா? நானும் தேடிப் பார்க்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அவை எல்லாம் நளினகாந்தி இராகம் என்று அறிந்தேன். அவ்வளவு தான். அடுத்து இன்னொரு பாடலைக் கொடுத்து அது நளினகாந்தியா இல்லையா என்று கேட்டால் தெரியாது. :-)//

கொத்ஸ் சொன்ன டெக்னிக் தான் குமரன். நானும் உங்க கட்சி தான்! இதைக் கண்டு பிடிக்கும் டெக்னிக் எல்லாம் தெரியாது. சும்மா ஹம்மிங் தான். அதே மெட்டில் இது என்று தான் கண்டுபிடிப்பேன்! சில சமயம் தப்பாகி நண்பர்கள் கலாட்டா பண்ணுவாங்க.

//மாண்டலின் இசையையும் இரசித்தேன் இரவிசங்கர். நன்றி.//

அது சூப்பர் கீர்த்தனை குமரன். நீங்க கூடல்-ல ஒரு பதிவு போடலாம்! அவ்வளவு தத்துவத்தை நாலே வரியில் போட்டு ஒடைப்பாரு தியாகராஜர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி சங்கர்!
இப்பாடல் (நறுமுகை) வெளிவந்து பெரிதாகப் புகழடையவில்லை.(கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா போல்)//

ஹிஹி...
சூடான இடுகைகள்ல இந்தப் பாட்டு வரலைன்னு சொல்லுங்க!

//ஆனால் பாரம்பரிய இசைரசிகர்களை இந்த பாடல் கூட்டு வெகுவாகக் கவர்ந்தது. என் விருப்பப் பாடல் கூட//

ஆமாங்க யோகன் அண்ணா!
இன்னிக்கும் ஹம் பண்ணலாம் இந்தப் பாட்டை!
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பாட்டு -ஒடியே போச்சு! ஒவ்வொன்றுக்கும் ஜீவனும் ஆயுளும் இருக்கே!

/மேலும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் இப்போதும் 'பொதிகைத் தென்றல்' எனும் பழந்தமிழ் இலக்கியம்-திரையிசைப் பாடல் ஒப்பு நோக்கும் நிகழ்ச்சியைப் பிரதி ஞாயிறு செய்கிறார்.
slbc.lk
இவ்விணைய முகவரியில் கேட்கலாம்.//

சூப்பர்... இன்று (ஞாயிறு) கேட்டு விடுகிறேன்!
இதுக்குத் தான் யோகன் அண்ணாவைக் கேட்கணும்னு சொன்னேன்! நீங்களே கரெக்டாச் சொல்லிட்டீங்க! நன்றி அண்ணா!

Anonymous said...

மிக்க நன்றி கண்ணபிரான்,யோகன் பாரீஸ்.
இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டதில்
திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் இந்நிகழ்ச்சியும் ஒன்று.இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டு,சங்கத்தை படிக்கத் தூண்டியவரும் அவரும் ஒருவர்..அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்தக் கொண்டிருந்த காலம்.இலங்கை வானொலி மட்டுமே ஊடகத் தளம் எமக்கு...

(உனக்கு எப்பொழுதாவது நேரம் கிடைத்தால்
http://virudhaimalar.blogspot.com/
இங்கு சென்று பார்க்கலாம்.(பெரியதாக 1மிராது.))

G.Ragavan said...

// //என்ன....திருப்புகழத்தான் நேரடியாப் பயன்படுத்தாம பாட்டா மாத்தீருவாரு. நாதவிந்து கலாதீ நமோன்னா...என் வீட்டுத் தோட்டத்தில்னு வரும்//

அது பாட்டா கொடுக்காம ராகத்த மட்டும் கொடுத்தாரு ஜிரா, ஜெண்டில் மேன் படத்தில்.
நாதநாமக்ரியை என்னும் ராகம்; அதான் என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்! //

அது செஞ்சுருட்டி ராகங்க. நீங்க இப்பிடிச் சுருட்டி வீசீட்டீங்களே!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
அது செஞ்சுருட்டி ராகங்க. நீங்க இப்பிடிச் சுருட்டி வீசீட்டீங்களே!!!!//

ராகதேவன் ராகவன் சொன்னாச் சரியா இல்லாம இருக்குங்களா? பேருலயே ராகமும் ராமமும் இருக்கே! :-)

செஞ்சுருட்டி தான் ஜிரா; தவறுக்கு மன்னிக்கவும்!
சிந்து, சுருட்டி, செஞ்சுருட்டியில் காவடிப் பாடல்கள் நிறைய வரும்!

டி.என்.சேஷகோபாலன் நாத விந்து கலாதீ-யை நாதநாமக்ரியையில் பாடுற டேப்பைக் கேட்டு, அப்படிச் சொல்லிட்டேன்!

சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என என்ற திருப்புகழ் கூட நாதநாமக்ரியையில் பாடக் கேட்டிருக்கேன்! நீங்க கேட்டிருக்கீங்களா ஜிரா?

ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மெட்டாத் தான் வருது! இதக் கண்டுபுடிக்கும் டெக்னிக்கைக் கத்துக்கனும்! :-)

VSK said...

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாட்டு இது, ரவி!

ந்நளினகாந்தியை இவ்வளவு அற்புதமாக இவர் கையாண்டாரே என மகிழ்ந்திருந்த வேளையில், இசைஞானி அதை நாசூக்காக எந்தன் நெஞ்சில் எனப்பாட, எனது காப்பித்தென்றல் தேவா மிஹ அருமையாக அப்படியே அந்த ராகத்தின் மணம் மாறாமல் மனம் விரும்புதே எனப் பாட,

ஒரே அட்டகாசம் தான்!
அப்படியே சேமித்துவிட்டேன்!

கொஞ்சம் இயற்கையாகவே பேசியிருக்கலாமோ!

மலைநாடான் said...

ரவிசங்கர்!

மிக நல்ல பதிவு. ரசித்தேன். நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
ரவிசங்கர்!
மிக நல்ல பதிவு. ரசித்தேன்//

நன்றி மலைநாடான் ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// VSK said...
இவ்வளவு அற்புதமாக இவர் கையாண்டாரே என மகிழ்ந்திருந்த வேளையில், இசைஞானி அதை நாசூக்காக எந்தன் நெஞ்சில் எனப்பாட, எனது காப்பித்தென்றல் தேவா மிஹ அருமையாக அப்படியே அந்த ராகத்தின் மணம் மாறாமல் மனம் விரும்புதே எனப் பாட,//

ஆகா...எனக்குத் தோன்றவில்லை பாருங்க! ராஜா, ரகுமான், தேவா என்று எல்லாரும் நளினகாந்தியைப் பாதி இருக்காங்க! சூப்பர்! நன்றி SK!

//கொஞ்சம் இயற்கையாகவே பேசியிருக்கலாமோ!//

ஹிஹி
அண்மையில் ரட்கர்ஸ் கல்லூரி மாணவர்கள் இருவர் வேறு ஒரு சினிமாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாங்க. அதைக் கேட்டு எழுதத் தோன்றியது தான் இந்தப் பதிவு SK! :-))

Dr.N.Kannan said...

இந்தப்பதிவு எங்கோ நினைவுகளை இட்டுச் செல்கிறது. இந்தப் படம் வந்த புதுசு. அப்போ நான் ஜெர்மனியில் இருந்தேன். எல்.லே. ராம் இந்தப்பாடலை (நறுமுகையே)எடுத்து உங்களைப் போல அக்கு வேறு, ஆணிவேராப் புடுங்கிட்டு இருந்தாரு. எதிலே? தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ் இணையத்தில் (தமிழ்.நெட் க்கு அதுதான் பெயர். பின்னால இந்த வார்த்தை கடத்தப்பட்டு இண்டர்நெட் என்பதற்கு வந்துவிட்டது!). இப்போ போல அப்போ படமெல்லாம் தரவிறக்கம் செய்ய முடியாது! ஒரு பத்துப்பனிரெண்டு வருடம் கழித்து நீங்க அதையே எழுதறீங்க. இதைத்தான் 'சரித்திரம் திரும்புதல்' என்பார்கள் போலும்!

Simulation said...

ஜி.என்.பி அவர்களின் "நீ பாதமே கதி" என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள் பாடியுள்ளார்.

எஸ்.பி.ராம்ஹ் அவர்கள் "நிவே கதியனி" என்ற லால்குடி ஜெயராமன் அவர்களின் வர்ணம் பாடியுள்ளார்.

நடஜனபாலினி நளின காந்தி என்று துவங்கும் தஞ்சாவூர் சங்கரய்யர் இயற்றியுள்ளார்.


வயலின் மேதை சௌடய்யா அவர்களும் இந்த இராகத்தில் தில்லானா ஒன்று இயற்றியுள்ளாரோவென எண்ணுகின்றேன்.

மேலும் மைசூர் வாசுதேவாச்சாரும் இந்த இராகத்தில் வர்ணம் போட்டுள்ளதாகக் கேள்வி,

- சிமுலேஷன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// நா.கண்ணன் said...
எல்.லே. ராம் இந்தப்பாடலை (நறுமுகையே)எடுத்து உங்களைப் போல அக்கு வேறு, ஆணிவேராப் புடுங்கிட்டு இருந்தாரு. எதிலே? தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ் இணையத்தில் (தமிழ்.நெட் க்கு அதுதான் பெயர்//

வாங்க கண்ணன் சார்.
பாருங்க சில பாடல்கள் மட்டும் பழசு புதுசுன்னு இல்லாம, எப்பமே எல்லாத் தலைமுறைகளும் கேட்குதுங்க! தலை முறை இடை வெளி எல்லாம் இணைக்கும் வெளி, இது போன்ற பாடல்கள் தான் சார்!

//ஒரு பத்துப் பனிரெண்டு வருடம் கழித்து நீங்க அதையே எழுதறீங்க. இதைத்தான் 'சரித்திரம் திரும்புதல்' என்பார்கள் போலும்!//

ஓ...அவ்வளவு வருசம் ஆச்சா!
நளினகாந்தி தான் என்னை இழுத்து விட்டாள்! அடுத்த ராக மங்கை யாரோ? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Simulation said...
ஜி.என்.பி அவர்களின் "நீ பாதமே கதி" என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள் பாடியுள்ளார்.//

ஆகா...
பாருங்க! இதுக்குத் தான் சிமுலேஷன் வேணுங்கறது! சூப்பர்! மிக்க நன்றி சிமுலேஷன்! லேட்டா வந்து லேட்டஸ்டா எடுத்துக் கொடுத்திருக்கீங்க!

நீ பாதமே கதி, நளின காந்தி மதி!
சுதா பாடுவது!
http://www.musicindiaonline.com/p/x/7qf2j1llrt.As1NMvHdW/

//நடஜனபாலினி நளின காந்தி என்று துவங்கும் தஞ்சாவூர் சங்கரய்யர் இயற்றியுள்ளார்//

சிக்கில் சகோதரிகள் - புல்லாங்குழல்
http://www.musicindiaonline.com/p/x/sUK0hfxfPS.As1NMvHdW/

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP