Sunday, September 09, 2007

பீமா படப்பாடல்கள் விமர்சனம்

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு என்றுமே ஒரு தனி தரம் உண்டு. தொடர்ந்து வெற்றிகரமான இசை வழங்குவதில் ஹாரிஸின் திறமை அலாதியானது. அவரின் இசையில் சமீபத்தில் வெளியான "பீமா" திரைப்படப்பாடல்கள் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா??

எனதுயிரே:
சாதனா சர்க்கமின் இனிமையான குரலில் அழகாக தவழும் பாடல். சமீபத்தில் வெளியான "கிரீடம்" படத்தில் வரும் 'அக்கம் பக்கம்" பாட்டை போல அருமையான மெலடி பாடல். பாடலில் வரும் நிகில் மாத்யூவின் ஆண் குரலும் பாடலுக்கு நயம் சேர்த்து நம்மை குழைய வைத்துவிடும்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)முதல் மழை:
வழமையான ஹாரிஸ் பாடல் என்று கேட்க ஆரம்பித்தவுடன் தெரிந்து விடுகிறது. ஆரம்ப ஹம்மிங் மற்றும் தாளம் எல்லாம் கேட்கும் போதே காலம் காலமாக நாம் கேட்டு வந்த ஹாரிசின் பல பாடல்கள் மனத்திரையில் ஆரசல் புரசலாக தோன்றி மறைகிறது. சிறிது நேரத்தில் மனதை அமைதி படுத்திவிட்டு நாம் இசையை இரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். கேட்க கேட்க இனிமை கூடும் பாடல்களின் இரகத்தில் இந்த பாடலை கட்டாயமாக சேர்க்க்கலாம்.ஹரிஹரனின் மயக்கும் குரலுடன் சேர்ந்து மற்ற பாடகர்களும் இசைக்கு அழகு சேர்ப்பது இப்பாடலுக்கு சாதகம்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ஒரு முகமோ:
பாடலை கேட்க ஆராம்பித்த உடன் என்னையும் அறியாமல் ஒரு ஆங்கில பாடல் தான் ஞாபகம் வந்தது.க்வீன்் எனப்படும் ஆங்கில பாடற்குழுவின் "We will rock you " பாடல் தான் அது.
பாடலை நிங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்.ஆனால் என் நண்பர் வேறொரு பாடல் ஒன்றை அளித்து இதையும் கேட்டுப்பார் என்று சொன்னார்.

முதல் பாடலை விட இந்த பாடல் சற்று அதிகமாகவே ஒத்துப்போனது

முதல் பாட்டு கேட்டால் காபி என்று சொல்ல முடியாது ஆனால் கண்டிப்பாக இன்ஸ்பயர் பண்ணப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது,ஆனால் இரண்டாவது பாட்டை கேட்டவுடன்......
நீங்களே யோசித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்!! :-)
நரேஷ் ஐயர் தனக்கே உரித்தான உணர்ச்சிப்பூர்வமான குரலில் உருகி உருகி பாடியிருக்கிறார்.குரல்களின் விளையாட்டுடன் பலதரப்பட்ட கோரஸ்களோடு சேர்ந்து பாட்டு அமர்களமாக முடிகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரகசிய கனவுகள்:
கேட்ட வுடன் திரும்பவும் இந்த பாட்டினால் இன்ஸ்பயர் ஆகி இருக்கலாம் என்று தோன்றியது.இந்த பாட்டின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினால் ரஹமானின் ஹிந்திப்பாட்டினை போலவே இருந்தது!! பாடல் சுமார் ரகம். கேட்க கேட்க பிடித்துப்போகும் ரகம். நடுவில் மிக அழகான வயலின் மற்றும் சாரங்கி இசை பயன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மதுஸ்ரீயின் சற்றே கொச்சை தமிழின் எதிரில் ஹரிஹரனின் கம்பீரமான குரலும் ஸ்பஷ்டமான உச்சரிப்பும் தனியாக நிற்கிறது.பாடலின் கடைசியில் மிக அழகான நாதஸ்வர பயன்பாடு.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


சிறு பார்வையாலே:
பாட்டு கேட்க ஆரம்பித்தவுடனே சிவாஜி படத்தின் "பூம்பாவாய்" பாடல் பளிச்சென ஞாபகம் வந்தது!! பாடலின் தாளம்,மெட்டு இரண்டுமே அந்த பாட்டை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது். சிறிது நேரம் கழித்து தான் "செல்லமே" படத்தின் இந்த பாட்டு எனக்கு தோன்றியது. இரண்டு பாடலிலும் வரும் ஆண் குரலும் ஆலாபனைகளும் இந்த இரண்டு பாடல்கலின் ஒற்றுமையை உயர்த்திக்காட்டுகிறதா என்று தெரியவில்லை.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரங்கு ரங்கைய்யா:
"ரோஜா கூட்டம்" படத்தில் வரும் "சுப்பம்மா சுப்பம்மா" பாடலால் ஆரம்பம் இன்ஸ்பயர் ஆகியிருக்கிறது என்று கேட்டவுடன் தெரிந்தது. மற்றும் பல குத்துப்பாட்டு அம்சங்களும் சேர்த்து ஒரு ஐடம் பாடலை தேர்த்த முயன்றிருக்கிறார் இசை அமைப்பாளர். பாடல் அவ்வளவாக என் மனதில் ஒட்டவில்லை. படத்தில் சிகரெட் பற்ற வைக்க எல்லோரும் எழுந்து போகும் பாடலாக இது அமையும் என்று பட்சி சொல்லுகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)ஒரு படத்துக்கு இசை அமைப்பது என்பது கடினமான செயல். அதுவும் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் முன் கேட்ட பாடல்களின் சாயல் ஏதாவது புதிதாக போடப்படும் பாடல்களில் தெரிவது வியப்பல்ல. ஆனால் அது போல இல்லாமல் தனித்துவத்துடன் விளங்கும் பாடல்கள் தான் காலத்தை கடந்து என்றும் பசுமையாக நினைவில் நிற்கும் என்பதை நாம்் பார்த்திருக்கிறோம்.
பீமாவின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் ,ஒண்றிரண்டு பாடல்கள்் இனிமையாகவே இருந்தாலும் கூட தனித்துவமாக இல்லாததால் அடுத்த வருடமே மனதிலிருந்து் மறைந்துவிடும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்து என்ன??? ;)11 comments:

தங்ஸ் said...

சர்ச்-ல பாடற பாட்டையெல்லாம் காப்பி அடிக்கிறார்-னு என்னோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவார்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//படத்தில் சிகரெட் பற்ற வைக்க எல்லோரும் எழுந்து போகும் பாடலாக இது அமையும் என்று பட்சி சொல்லுகிறது//

அவ்வளவு அனுபவமா உங்களுக்கு? :-)))

ரங்கு ரங்கையா தான் சற்று மோசம்.
மற்றபடி Inspired இல்லையோ, பாடல்கள் ஓகே தான்! ரகசியக் கனவுகள் வாத்திய இசைக்காகவே கேட்கலாம்!

நீங்கள் சொல்லும் நிலைத்து நிற்பது என்பது ஆயிரத்தில் ஒரு பாட்டு தான்! அதற்கு வரி, இசை, குரல், மனதைத் தொடல் என்று சகலமும் ஒத்து வர வேண்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீத்துக் கொட்டாய் பட விமர்சனம் போல, இனி வரும் திரையிசைப் பாடல்களுக்கு பாடல் விமர்சனமும் தாருங்களேன், தம்பி!

அப்படியே மார்க்கும் போடுங்கள்! இல்லையென்றால் ஒவ்வொரு பாட்டுக்கும் வாசகர் ஓட்டெடுப்பும் (Rating) அருகிலேயே வைக்க முடியுமா? ஏதோ தோணிற்று! சொன்னேன்!

நீளமான ஆயினும் நிறைவான விமர்சனம்!

CVR said...

@thangs
ஆமாம் தங்க்ஸ்!!
நானும் இதை பல பேரிடம் கேள்வி பட்டிருக்கிறேன்.

@கே.ஆர்.எஸ்
வாத்துக்களுக்கு நன்றி.

//அப்படியே மார்க்கும் போடுங்கள்! இல்லையென்றால் ஒவ்வொரு பாட்டுக்கும் வாசகர் ஓட்டெடுப்பும் (Rating) அருகிலேயே வைக்க முடியுமா? ஏதோ தோணிற்று! சொன்னேன்!//
நல்ல யோசனை!!
Rating போடுவது எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தை பற்றி ஒரு வாக்குப்பெட்டியை வைத்துவிட்டேன்!! :-)

G.Ragavan said...

பீமா காமா சோமான்னு இருக்குன்னு சொல்றீங்க. சரி. படம் வரட்டும் அப்புறமாக் கேட்டுக்கலாம்.

இந்த விமர்சனம் குடுக்குறது நல்லாருக்கு. தொடருங்க.

ஹாரிஸ் ஜெயராஜ்...ம்ம்ம்ம்..ஒன்னும் சொல்லத் தோணலை. ஒரு பத்துப் பதினைஞ்சு மெட்டுகள வெச்சுக்கிட்டே...அங்கயிங்க இருந்து உருவிப் பாட்டுப் போடுறாங்க. இவருக்கு முன்னாடி இருந்த பல பெரியவங்க அறுநூறு எழுநூறுன்னு இசையமைச்சிருக்காங்க. அதுல பெரும்பாலும் நல்ல பாட்டுகள். அதெப்படி!!!! இல்ல...நெறையப் படத்துக்கு இசையமைக்கிறது கஷ்டம்னு சொன்னீங்களே...அதுனால கேக்குறேன்.

கப்பி | Kappi said...

எத்தன நாளுக்குத்தான் ரைமிங்லயே பாட்டு போடுவாருன்னு தெரியல!! ஆனா பாட்டெல்லாம் எப்படியோ ஹிட் ஆயிடுது :))

நாகை சிவா said...

வோட்டு போட்டாச்சு...

3 ஆம் எண்ணுக்கு

jeevagv said...

பாடல்களுக்கு சுட்டி கொடுக்கலாமே?கேட்டுவிட்டு சொல்கிறேன்...!

Boston Bala said...

அந்த ராக்ஸெட் பாட்டை ஹிந்தியிசைத் தென்றல் ஏற்கனவே வழங்கியிருக்கார்: itwofs.com

Dil mein kuch [Film: Army]

sravan said...

al songs sound familiar man! HJ is one guy capable of stealin his own tunes ;). tho they r al gud ..

வவ்வால் said...

//சர்ச்-ல பாடற பாட்டையெல்லாம் காப்பி அடிக்கிறார்-னு என்னோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவார்..//

ஆமாம் ஜெபத்தோட்ட ஜெப கீதங்கள் னு ஒரு பிரார்த்தனை பாடல் கேசட்டில் இருந்தெல்லாம் சுட்டுப்போட்டு இருக்கார், அது தான் பார்த்த முதல் நாளே பாடல்! அந்த ஆடியோ கேசட் , சி.டி, பல கிருத்துவர்கள் வீட்டிலும் இருக்கு, நானும் கேட்டேன் அப்படியே இருக்கு! :-))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP