ஆபோகியில் அகமுருகி
ஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.
தமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:
தங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்
thangarathamvantha... |
காலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா
இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.
சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.
திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.
முதலில்:
சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்
Sabapathikku.mp3 |
மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:
கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!
தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!
கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.
தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.
கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.
என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்?
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?
அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்
அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
அதுவும் "ராமா நீ சமானம் எவரு?" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே!
பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்!
அடுத்ததாக:
நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்
03 Nekkuruhi-Main.... |
இந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ!
இந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக -
ரீ ரி க ம க ரி ஸா - ரி க மா மா
த ஸ் த த மா - க ம த ஸ்ா
ரி ஸ்ா ம க ரி ...
நீங்களே கேட்டுக் களியுங்கள்:
Nekkuruhi-Swarams.... |
15 comments:
நல்ல ராகத்தை முழுதாக தந்துள்ளீர்கள் நன்றி.
ஸ்வரமெல்லாம் கொடுத்துப் பின்னிட்டீங்க ஜீவா.
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே - அப்படியே ஆபோகியில் திளைக்க வைக்கிறது.
//திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்//
இது கசப்பான உண்மை இல்லை!
இனிப்பான உண்மை!! :-)
தியாகராஜரும் - கோபால கிருஷ்ண பாரதியும் உரையாடுவது போல் அழகாகத் தந்துள்ளீர்கள்! அருமை! அருமை!
ஒரு விண்ணப்பம். வாரம்/மாதம் ஒரு முறை, ஒரு பிரபலமான தமிழ்க் கீர்த்தனையை இசை இன்பத்தில், Music Appreciation (இசை நயம் பாராட்டல்) செய்யலாமா?
கோபால கிருஷ்ண பாரதி, முத்து தாண்டவர், அண்ணாமலை ரெட்டியார், பாபநாசம் சிவன் என்று இசைப் புதையல் குவிந்து கிடக்கிறது!
நல்ல ராகம். அருமையான பாடல்கள். தொடர்ந்து தர வேண்டுகிறேன். நன்றி.
வாங்க மதுரையம்பதி!
//நல்ல ராகத்தை முழுதாக தந்துள்ளீர்கள் நன்றி.//
நன்றி!
ரவி,
//ஒரு விண்ணப்பம். வாரம்/மாதம் ஒரு முறை, ஒரு பிரபலமான தமிழ்க் கீர்த்தனையை இசை இன்பத்தில், Music Appreciation (இசை நயம் பாராட்டல்) செய்யலாமா?//
நிச்சயமாக, நிறைய தமிழ் கீர்த்தனைகள் உள்ளன!
//கோபால கிருஷ்ண பாரதி, முத்து தாண்டவர், அண்ணாமலை ரெட்டியார், பாபநாசம் சிவன் என்று இசைப் புதையல் குவிந்து கிடக்கிறது!//
சரியே.
அருணாசலக் கவியாரும் கூட. அவருடைய ராம நாடகம் இன்னமும் பலராலும் அறியப்படாத ஒன்றாக இருக்கிறது.
கொத்ஸ்:
//தொடர்ந்து தர வேண்டுகிறேன். நன்றி.//
முயல்வோம்! தொடர்ந்து வர வேண்டும் - அனைவரும்!
ஜீவா நல்லதொரு படைப்பு. எல்லாக்கோணங்களிலும் அலசி சாறாக பிழிந்து அளித்ததற்கு நன்றி.
தமிழ் பாடல் வரிசையில் இப்போது உள்ளவர்களையும் சேர்க்கலாம்(மங்களம் கணபதி, தரா நடரஜன்)
ரமா நீ சமானமெவரு மட்டும் தியகராஜர் பாடவில்லை. சிவ சிவ என ராதா,சம்போ மஹாதேவ போன்ற பாடலகளையும் பாடியுள்ளார். அவருக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே
Thanks a lot for your comments for the latest posting on http://movieraghas.blogspot.com
It is always a pleasure to visit a blogger with a common wavelength. I am quite happy that the present generation (I am 66 now) taking a lot of interest in classical music. Elsewhere in my blog I have discussed Raag Abhogi which belongs to 22nd Mela Kartha. As one commentator Kannabiran rightly says, the manifestation of this raag can be well tasted when you hear classical songs. For Tamil Film Music Composers Raag Abhogi is always a favourite one.
Anticipating your permission, I am giving a link to your blog from my blog http://movieraghas.blogspot.com
Thanks a lot.
I forgot to add that the song in Chandramuki has a wonderful hit song konja neram konja neram...in Abhogi.
You may click and enjoy.
http://www.youtube.com/watch?v=4ufOYC2Qby8
sury
http://movieraghas.blogspot.com
For variety, http://menakasury.blogspot.com
வாங்க தி.ரா.ச சார்!
//ரமா நீ சமானமெவரு மட்டும் தியகராஜர் பாடவில்லை. சிவ சிவ என ராதா,சம்போ மஹாதேவ போன்ற பாடலகளையும் பாடியுள்ளார். அவருக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே//
நிச்சயமாக.
ராமா நீ சமானமெவரு என்று பாடியவரிடம், சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்று பாடினல் எப்படி இருக்கும் என்று சுவாரஸ்யத்தை உருவாக்குவதற்கே அப்படி எழுதினேன்!
Dear Suri Sir,
Glad to know that you find this blog interesting!
I am sure KRS would be happy to let you add a link to this blog!
It is amazing to know how you have posted so much of information on various raagas which will be very useful to all, especially youngsters.
http://movieraghas.blogspot.com/ is really Moving the listener!
Finally, we can do nothing without the blessings of elders like you.
Thanks for dropping in your comments!
==விக்கிபீடியாவைப் பயன்படுத்துங்கள்==
அன்பரே, இவ்வளவு நீளமான கட்டுரை எழுதும் நீங்கள் விக்கிபீடியாவில் இந்தக் கட்டுரைக்குத் தொடுப்புக் கொடுங்கள்.
==வெளி இணைப்பு==
* [http://isaiinbam.blogspot.com/2007/10/blog-post.html ஆபோகியில் அகமுருகி - வலைப்பதிவுக் கட்டுரை]
இப்பிடி இறுதியில் பகுப்புக்கு மேலாகச் சேர்த்து விடுங்கள். இவ்வாறு செய்வது விக்கிபீடியாவை நேர்டியாக அடையும் ஒருவருக்கு பயனுள்ளதாயிருக்கும். உங்கள் முயற்சியும் நீண்டகாலம் அனைவருக்கும் பயன்படும். நன்றி
//விக்கிபீடியாவை...//
கோபி, தமிழ் விக்கிபீடியாவிற்கு நிறைய ஆக்கங்களைத் தங்களுக்கு முதலில் நன்றிகள் பல!
//வெளி இணைப்பு//
செய்வதாகத்தான் இருந்தேன், அதற்குள் சொல்லிவிட்டீர்கள், இதோ இப்போதே இணைப்பும் கொடுத்தாயிற்று!
அனைவரும் இயன்றவரை தங்கள் ஆக்கங்களை தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்தால் பயன் பெருகும்.
யாரும் குறிப்பிட மறந்த ஒரு அருமையான பாடல் - நானன்றி யார் வருவார் - படம் மாலையிட்ட மங்கை - பாடியவர் -டி.ஆர்.மகாலிங்கம் - கண்ணதாசனின் சொந்த படம். இந்த பாடல் பற்றியும் கண்ணதாசனின் இந்த படம் பற்றியும் நான் ஒரு போஸ்ட் எழுத விரும்புகிறேன். இதை இசை இன்பம் பகுதியில் எப்படி சேர்ப்பது? யாராவது சொல்லுங்கள்
மேலும் 2 பாடல்கள் ஆபோகி ராகத்தில்
1. வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே - அவன் ஒரு சரித்திரம்
2. மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி - படம் ????????
Post a Comment