Tuesday, February 05, 2008

ஐ.நா.சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி! பாடிக் கேட்டிருக்கீங்க! பேசிக் கேட்டிருக்கீங்களா?

"இங்கு எத்தனை பதிவர்கள் நல்லாப் பாடுவீங்க? கை தூக்குங்க!"

"இல்ல......என் குரல் நலமா, வளமாத் தான் இருக்கும்! பேசும் போது கூட, பல பேர் சொக்கிப் போயிடுவாங்க! ஆனா கொஞ்சம் லைட்டாப் பாடினாத் தான் மக்கள் வீறு கொண்டு எழுந்து, பின்னூட்டத்தில் கல்லெறிவாய்ங்க!"

"ஹா ஹா ஹா! பேசும் போது நல்லா இருக்கும்! ஆனாப் பாடும் போது தான் அவ்வளவா நல்லா இருக்காது! அதானே சொல்ல வரீங்க?"

"ஆமாங்க! சரி நமக்குத் தான் இப்படி! பிரபலமான பாடகர்கள் எல்லாம் எப்படிங்க? பாடும் போது நல்லாப் பாடுவாங்க! ஆனாப் பேசும் போது அவிங்க குரல் எப்படி இருக்குமோ?"

"இம்புட்டுச் சந்தேகம் எதுக்கு? இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிக் கேட்காதவங்க இருக்கவே முடியாது! - அவங்க பாடிக் கேட்டிருக்கீங்க! ஆனால் பேசிக் கேட்டிருக்கீங்களா?"

"ஆகா...அவங்க பேசின டேப்பு ஏதாச்சும் வச்சிருக்கீங்களா என்ன?"

"டேப்பும் இல்ல, சோப்பும் இல்ல! அசைபடமே இருக்கு! பாருங்க! பாடும் போது இருக்கும் குரலுக்கும், பேசும் போது இருக்கும் குரலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுது-ன்னு பார்த்துச் சொல்லுங்க பார்ப்போம்!"



நியூயார்க் ஐ.நா. சபையில் நடந்த தனது இசை நிகழ்ச்சி பற்றியும்,
அதற்கு ஒரு நாள் முன்பு, தன் தொண்டை கட்டிக் கொண்டதைப் பற்றியும்,
எம்.எஸ்.அம்மா ஒரு பேட்டியில் சொல்லறாங்க! பேச்சைக் கேளுங்க! இதோ அசைபடம்.






இசை வாணியின் பேசும் குரல் கேட்டீங்களா மக்களே?
அவர்களின் பாடும் குரலும் கேட்டு விடலாமா? சரி, அவங்க பேட்டியில் சொல்லும் அந்த ஐ.நா.சபை நிகழ்ச்சி! இதோ அந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி!

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன முன்னுரை.
Oct 23 1966.
ஐ.நா. தினத்தை முன்னிட்டு, பொதுச் செயலாளர் யூ தாண்ட் (U Thant) அவர்களூடைய சிறப்பு அழைப்பின் பேரில், எம்.எஸ் நியூயார்க் சென்றார்.

அமெரிக்காவில் வாய்ப்பாட்டை விட, இசைக்கருவிக்கு மவுசு அதிகம். பாடறவங்க கூட, கருவிகளை நல்லா பலமா ஒலிக்க விட்டுப் பாடுவாங்க! இங்கே இது மாதிரி மெல்லிய இசை எல்லாம் எடுபடுமா என்று கேள்வி வந்ததாம் ஐ.நா. சபையில்!

நியூயார்க் டைம்ஸ் வேறு, பிச்சி உதறி எடுக்கும் பத்திரிகை! நிகழ்ச்சிக்கு முதல் நாள் மாலையில் அவ்வளவா வரவேற்போ, கவரேஜோ எதுவுமே இல்லை பத்திரிகைகளில்!
ஆனால் ஐ.நா. ஜெனரல் அசெம்ப்ளி ஹாலில் (United Nations-General Assembly Hall), இசை நிகழ்ச்சியைக் கேட்ட பின்னர்.......அடுத்த நாள் காலைச் செய்திகளில் எங்கும் இதைப் பற்றியே பேச்சு! பின்னர் இன்னொரு நாள் நியூயார்க் Carnegie Hall-இல் எம்.எஸ். பாடிய போது, கூட்டம் நிரம்பி வழிந்ததாம்!

The New York Times said: "Subbulakshmi's vocal communication trancends words. The cliche of 'the voice used as an instrument` never seemed more appropriate. It could fly flutteringly or carry on a lively dialogue with the accompanists. Subbulakshmi and her ensemble are a revelation to Western ears. Their return can be awaited with only eagerness."

Dr. W. Adriaansz, Professor of Music, University of Washington, wrote: "For many, the concert by Mrs. Subbulakshmi meant their first encounter with the music of South India and it was extremely gratifying that in her the necessary factors for the basis of a successful contact between her music and a new audience - highly developed artistry as well as stage presence - were so convincingly present...without any doubt (she) belongs to the best representants of this music."



ஐ.நா. செயலர் யூ தாண்ட்-உடன், குழுவினர் (pic courtesy: The Hindu)

இதில் நாம் பார்க்கப் போகும் வீடியோ, ஜகதோத்தாரணா என்னும் கன்னடப் பாட்டு! புரந்தரதாசர் காபி ராகத்தில் எழுதியது! இன்னும் வேறு சில இந்திய மொழிப் பாடல்களும் அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். பாடியிருக்காங்க! ஆனா எல்லாத்துக்கும் சுட்டியோ, அசைபடமோ கிடைக்கல!
தமிழ்நாட்டுப் பாடகி, ஐ.நா.வரைக்கும் போய், தமிழ்ப் பாட்டெல்லாம் பாட மாட்டாங்களோ? -அப்படின்னு யாரும் கேட்கலையா என்ன? :-)

முக்கியமாக சிலப்பதிகாரத்தில் இருந்து "வடவரையை மத்தாக்கி" என்னும் ஆய்ச்சியர் குரவைப் பாட்டு! முல்லை நிலத் தமிழ்க் கடவுள் கண்ணபிரான் மேல் இளங்கோவடிகள் புனைந்த பாட்டு!
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே! திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!
இதை மிகவும் அழகிய ராக மாலிகையாக எம்.எஸ், அந்த நிகழ்ச்சியில் பாடி இருக்காங்க! (இந்தச் சுட்டியில் கேட்பது, அப்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டது அல்ல); இந்தப் பாட்டின் வரிகளுக்கும், பொருளுக்கும் இங்கே செல்லவும்!

காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான ஹரி தும் ஹரோ என்னும் மீரா பஜன், மற்றும் மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய மைத்ரீம் பஜத என்னும் உலக அமைதிப் பாடல் - இவையும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன! மைத்ரீம் பஜத பாடல் வரி/பொருள் இங்கே!

குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
உடன்: ராதா விஸ்வநாதன்
தம்பூரா: விஜயா இராஜேந்திரன்
வயலின்: V.V.சுப்ரமணியன்
மிருதங்கம்: T.K.மூர்த்தி
கடம்: T.H.விநாயக்ராம்


ஜகதோத்தாரணா, ஆடிசிடலு யசோதே!
உலகைப் புரப்பவா - உடன் ஆடினளே யசோதை!

ஜகதோத்தாரணா, மகனென்டு தில்லியுதா
மகுகல மாணிக்யான, ஆடிசிடலு யசோதே!
உலகைப் புரப்பவா - மகனென்று தெரியாதா?
சிறுவருடன் முத்தாடி - உடன் ஆடினளே யசோதை!







என்னாங்க, முடிவுக்கு வந்தாச்சா?
பாடும் குரலா? பேசும் குரலா? - எம்.எஸ் பேசும் குரலே இனிப்பாகத் தான் உள்ளது! பேசும் குரல் கட்சிக்காரங்க எல்லாம், காலரைத் தூக்கி விட்டுக்குங்க! நீங்களும் நல்லாவே பேசறவங்களாச்சே! :-)

References (உசாத்துணை):
Ramon Magsaysay Award for Public Service - Article -http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographySubbulakshmiMon.htm
Dhool.com Article - http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3323
Medieval.org song list at the UN - http://www.medieval.org/music/world/cds/rpg5306.html

28 comments:

jeevagv said...

அருமையான பதிவு. நமது இசையின் உன்னதத்தினை நமக்கே அறிமுகப்படுத்தும் பதிவு!

உத்பாவா.காம் என்றொரு தளத்தில் இந்தக் கச்சேரியின் அனைத்து பாடல்களும் இருந்தது, இப்போது அந்தத் தளம் வேலை செய்யவில்லை :-(

//The cliche of 'the voice used as an instrument` never seemed more appropriate.//
Pranams to that golden voice!

வடுவூர் குமார் said...

எல்லாவற்றுக்கும் மருந்து "ஓம்" யில் இருக்கும் போது எம். எஸ் தொண்டைக்கு அதில் மருந்து இருக்காதா என்ன?
எங்கிருந்தோ எப்போதோ இறக்கிக்போட்ட ஐ நா பாட்டை திரும்ப கேட்கணும்.
வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்.அந்த கால நீண்ட விரல்கள் பிற்காலத்தில் மிகவும் சின்னதாகிப் போனதாக தோனுகிறது.

இலவசக்கொத்தனார் said...

ஜகதோதாரணா பாடலில் கடைசி வரி என்னமோ மாறி இருக்கே... மத்தபடி காண அரிதான புகைப்படங்களும் நகர்படங்களும் தந்ததிற்கு நன்றி!

Radha Sriram said...

அருமை போங்க......பக்தி பாவம்னா(Bhavam)அவங்கள தவிர வேற யார சொல்ல முடியும்.....?!! ரொம்ப நன்றி இத போட்டதுக்கு......

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
ஜகதோதாரணா பாடலில் கடைசி வரி என்னமோ மாறி இருக்கே...//

தல
எம்.எஸ் சில வரிகள் ஸ்கிப் பண்ணிப் பாடுறாங்க சரணத்தில்!
அதான் நான் போட்ட வரிக்கும், அவங்க பாடும் வரிக்கும் difference-uu! :-)

//மத்தபடி காண அரிதான புகைப்படங்களும் நகர்படங்களும் தந்ததிற்கு நன்றி!//

அரிது! அரிது!
அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்! :-))

சகாதேவன் said...

"ராம நன்னு ப்ரோவரா" என்று எம் எஸ் அவர்கள் துவங்கிய ஐநா சபை கச்சேரி ரிகார்ட் எல்பி செட் வைத்திருந்தேன். அருமையான கீர்த்தனைகள். அதை நினைவு படுத்தியதற்கு நன்றி.

சகாதேவன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அருமையான பதிவு. நமது இசையின் உன்னதத்தினை நமக்கே அறிமுகப்படுத்தும் பதிவு!//

நன்றி ஜீவா!

//உத்பாவா.காம் என்றொரு தளத்தில் இந்தக் கச்சேரியின் அனைத்து பாடல்களும் இருந்தது, இப்போது அந்தத் தளம் வேலை செய்யவில்லை :-(//

ஆமாங்க! நானும் பார்த்தேன்! இன்னும் கொஞ்ச நாளில் சரி செய்வதாகப் போட்டிருந்தாங்க!

//The cliche of 'the voice used as an instrument` never seemed more appropriate.//
:-)
Very True!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
எல்லாவற்றுக்கும் மருந்து "ஓம்" யில் இருக்கும் போது எம். எஸ் தொண்டைக்கு அதில் மருந்து இருக்காதா என்ன?//

நச்-னு புடிச்சீங்க குமாரண்ணா!
அதைச் சொல்லும் போது எம்.எஸ்.க்குத் நாத் தழுதழுக்குது பார்த்தீங்களா?

//அந்த கால நீண்ட விரல்கள் பிற்காலத்தில் மிகவும் சின்னதாகிப் போனதாக தோனுகிறது//

ஹூம்!
ஆனா என்னைப் பொருத்தவரை, சின்ன வயசு எம்.எஸ்-ஐ விட, வயதான எம்.எஸ் தான் இன்னும் அழகா ஜொலிக்கறாங்க!

சரியா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
அருமை போங்க......பக்தி பாவம்னா(Bhavam)அவங்கள தவிர வேற யார சொல்ல முடியும்.....?!! ரொம்ப நன்றி இத போட்டதுக்கு......//

ஆமாங்க ராதா, இயைந்து பாடுதல்-னா அது எம்.எஸ் தான்!
அரிதான புகைப்படங்கள் தேடிப் போட்டதில் எனக்கும் மன மகிழ்ச்சியே! :-)

குமரன் (Kumaran) said...

அம்மா பேசுனதைக் கேக்குறப்ப ரொம்ப கவனிச்சுக் கேக்க வேண்டியிருந்தது. ஒலிப்பதிவு சரியா அமையலை போலிருக்கு. அம்மா ஐ.நா. சபையில பாடுன எல்லா பாட்டும் இப்ப என்னோட எம்.பி.3 பிளேயரில் இருக்கு. சின்ன வயசுல இருந்து தொடர்ந்து கேட்டுக்கிட்டு வர்ற பாடல்கள் தான். இப்போது எம்பி3 பிளேயர்ல கேட்டுக்கிட்டு இருக்கேன்.

வடவரையை மத்தாக்கி பாடலுக்கும், மைத்ரீம் பஜத பாடலுக்கும் கூடல்ல பொருள் எழுதியிருக்கேனே. முடிஞ்சா சுட்டியைக் குடுங்க இரவிசங்கர்.

rv said...

ஆஹா...மிக்க நன்றி கே.ஆர்.எஸ்..


வினயம், பக்திபாவம்னெல்லாம் தேடினா இவங்கதான் அகராதி எண்ட்ரியா இருப்பாங்க.

கச்சேரில மங்களம் பாடறதுக்கு முன்னாடியே சன்மானம் அத்தனையும் distribute பண்ணிடுவாங்கனு கூட கேள்விப்பட்டிருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சகாதேவன் said...
"ராம நன்னு ப்ரோவரா" என்று எம் எஸ் அவர்கள் துவங்கிய ஐநா சபை கச்சேரி ரிகார்ட் எல்பி செட் வைத்திருந்தேன். அருமையான கீர்த்தனைகள். அதை நினைவு படுத்தியதற்கு நன்றி.//

வாங்க சகாதேவன்!
எல்.பி செட் வைத்திருந்தீங்களா? சூப்பர். மொத்தம் பத்து கீர்த்தனைகள்-ன்னு நினைக்கிறேன். அதுல ஒன்னு ஆங்கிலப் பாடல்! May the Lord Forgiveன்னு வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அம்மா பேசுனதைக் கேக்குறப்ப ரொம்ப கவனிச்சுக் கேக்க வேண்டியிருந்தது. ஒலிப்பதிவு சரியா அமையலை போலிருக்கு//

ஆமாம் குமரன்!
முதலில் சில சொற்கள் புரியல! ஆனாக் கடைசிலே அவங்க "ஓம்"-ன்னு சொல்லுற அந்த கட்டம்...

//அம்மா ஐ.நா. சபையில பாடுன எல்லா பாட்டும் இப்ப என்னோட எம்.பி.3 பிளேயரில் இருக்கு.//

கூகுள் டாக்கில் வாங்க!
தரவிறக்கிக்கிறேன். :-)

//வடவரையை மத்தாக்கி பாடலுக்கும், மைத்ரீம் பஜத பாடலுக்கும் கூடல்ல பொருள் எழுதியிருக்கேனே. முடிஞ்சா சுட்டியைக் குடுங்க இரவிசங்கர்//

சுட்டிக் காட்டுங்கள்!
சுட்டிக் காட்டி விடுகிறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராமநாதன் said...
வினயம், பக்தி, பாவம்னெல்லாம் தேடினா இவங்கதான் அகராதி எண்ட்ரியா இருப்பாங்க//

ஆமாங்க தல!
எம்.எஸ் பெரிய இலக்கண வழிப் பாடகர் எல்லாம் இல்லை! எம்.எல்.வி எல்லாம் இருக்காங்க!

ஆனா எம்.எஸ் கிட்ட பிடிச்சதே அவங்க பாவமும், மக்கள் ரசனையொடு ஒட்டிய பக்திப் பாடல்கள் வழங்கியதும் தான்!
ரொம்ப காம்ப்ளிகேட்டத் கீர்த்தனை எல்லாம் அவங்க பாட மாட்டாங்க போல!

//கச்சேரில மங்களம் பாடறதுக்கு முன்னாடியே சன்மானம் அத்தனையும் distribute பண்ணிடுவாங்கனு கூட கேள்விப்பட்டிருக்கிறேன்//

ஆமா! உண்மை தான்!
கோட்டூரில் அவங்க வீடும் ரொம்ப எளிமையானது! பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க! :-)

sury siva said...

இசையே மனித உருவாய்ப் பிறந்து,
இனிமையே சொல்லாய்
கனிவே தன் குரலாய் கானமாய்
பணிவே
பிறவி எடுத்ததன் காரணமாகவும் கொண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த‌
அந்த குயில் இப்புவிக்கு
என்று திரும்பி வருமோ ?

சுப்பு ரத்தினம்
தஞ்சை.
பி.கு: அமுதமான வர்ணம் விரிபோனி பைரவி ராகத்தில்
இங்கே கேளுங்கள்.
http://www.musicalnirvana.com/carnatic/ms_subbalakshmi.html

வல்லிசிம்ஹன் said...

ரவி என்ன சொல்வது!!
எத்தனை பெரிய மனுஷி அவங்க.
அந்த ஓம்னு சொல்லும்போது பரமாச்சார்யாரே வந்து குரல் கொடுத்துவிட்டாரோ....
அந்தக் குரலில் இருக்கும் பக்தித்
தழுதழுப்பை, அவங்க
அனுபவித்த துன்பமெல்லாம் ம்அறைந்த வேகம்,
என்ன என்று சொல்லறது.
இது மானுடமே இல்லை.

தெய்வ பாஷை.தெஇய்வ இசை.

மனமெல்லாம் உங்களுக்கு நன்றி சொல்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//sury said...
அந்த குயில் இப்புவிக்கு
என்று திரும்பி வருமோ?//

இசைக் குயில் வரட்டும்!
இசை மழை தரட்டும்!

//பி.கு: அமுதமான வர்ணம் விரிபோனி பைரவி ராகத்தில்
இங்கே கேளுங்கள்.
http://www.musicalnirvana//

நன்றி சூரி சார்! நிஜமாலுமே அமுதம்!
நேரிடையான சுட்டி இதோ!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அந்த ஓம்னு சொல்லும்போது பரமாச்சார்யாரே வந்து குரல் கொடுத்துவிட்டாரோ....//

:-)

//அந்தக் குரலில் இருக்கும் பக்தித்
தழுதழுப்பை,//

சுருதியும் லயமும் இசையில் மட்டுமல்ல! அந்த லயம் அவங்க உள்ளத்திலும் இருந்தது, வல்லியம்மா!

sury siva said...

ஸ்ரீமதி துளசி டீச்சர் பிறந்த நாள் விழாவினை ஒட்டி
ஒரு தனி ஆவர்த்தன கச்சேரி
http://movieraghas.blogspot.com
லே நடந்து கொண்டிருக்கிறது.
கடம் சுரேஷ், தபலா ஜாகிர் ஹுசேன், மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர்,
கஞ்சிரா கணேஷ் போடு போடுன்னு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கண்ணபிரானுக்காக
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜீவாவையும் அழைத்துச் செல்லுங்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூரி சார்!
டீச்சர் பிறந்த நாள் கச்சேரிக்கு வந்தாச்சே! அதான் எம்.எல்.வி-யை வேறு பாட விட்டிருக்கீங்களே! :-)

sury siva said...

கவலைப்படாதீங்க..உங்க பிறந்த நாளைக்கு ஒரு ஜுகல் பந்திக்கு
ஏற்பாடு பண்ணிடலாம்.
புதியதாக எழுதும்போது தகவல் அனுப்பவும்.
நம்ம என்ன செய்யறோமோ அதில நம்மைக் கவனிக்கிறவங்க‌
நெகிழ்ச்சி அடையறாங்கன்னு சொன்னா அதை விட சந்தோஷம் வேறென்ன இருக்கும்?
நம்ம மகிழ்ச்சி நம்ம கையில தாங்க இருக்கு.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: வரவும்
http://meenasury.googlepages.com/myhappinessisinmyhands

கானா பிரபா said...

நல்ல தொகுப்பு, இன்று தான் முழுதும் வாசிக்க/பார்க்கக் கிடைத்தது.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையான பதிவு. நன்றி கேயாரெஸ் அண்ணா.


//ஆமாங்க தல!
எம்.எஸ் பெரிய இலக்கண வழிப் பாடகர் எல்லாம் இல்லை! எம்.எல்.வி எல்லாம் இருக்காங்க!//

என்ன சொல்லவறீங்க, பிரியல்ல..

//ரொம்ப காம்ப்ளிகேட்டத் கீர்த்தனை எல்லாம் அவங்க பாட மாட்டாங்க போல!//

அம்மாவோட பல ஆரம்ப கால பாடல் ரெக்கார்டிங்க் கேளுங்க..ஸ்வர பிரஸ்தாரங்களை, ஆலாபனைகளையும்...கவனிங்கண்ணே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
மிக அருமையான பதிவு. நன்றி கேயாரெஸ் அண்ணா.//

அண்ணாவா? இது என்னா காமெடி!

பாருங்க...மெளலி அண்ணா போட்ட இந்த "அண்ணா" அதிர்ச்சிப் பின்னூட்டம் தூங்கிக் கிடந்த அருமைத் தம்பி கே.ஆர்.எஸ்ஸை காலையில் அஞ்சு மணிக்கு எழுப்பிரிச்சி! :-)

////ஆமாங்க தல!
எம்.எஸ் பெரிய இலக்கண வழிப் பாடகர் எல்லாம் இல்லை! எம்.எல்.வி எல்லாம் இருக்காங்க!//

என்ன சொல்லவறீங்க, பிரியல்ல..//

அது ஒன்னுமில்லீங்கண்ணா!
எம்.எல்.வி போன்ற பெரும் கலைஞர்களின் பாடல்களில் இலக்கண விகிதங்கள் அதிகமா இருக்கும்!

எம்.எஸ் அம்மா பாவத்தை முன்னிறுத்தி, இலக்கணத்தைக் கொஞ்சமா பின்னிறுத்துவாங்க! அதைச் சொன்னேன்!

////ரொம்ப காம்ப்ளிகேட்டத் கீர்த்தனை எல்லாம் அவங்க பாட மாட்டாங்க போல!//

அம்மாவோட பல ஆரம்ப கால பாடல் ரெக்கார்டிங்க் கேளுங்க..//

ஆமாங்கண்ணே!
ஆனா அவங்க ஆரம்ப காலப் பாட்டை எல்லாம் தேடித் தான் கேட்கணும்! நமக்கு அவ்ளோ வயசு பத்தாதுங்கண்ணே! :-)

ஆரம்ப கால பாண்டித்யத்தில் இருந்து, படிப்படியா எம்.எஸ். எளிய பக்தி பாவத்துக்கு மாறீட்டாங்க போல!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கானா பிரபா said...
நல்ல தொகுப்பு, இன்று தான் முழுதும் வாசிக்க/பார்க்கக் கிடைத்தது.//

நன்றி கா.பி.அண்ணாச்சி! :-)
தொகுப்புக்கு ரொம்ப டைம் ஆச்சுங்க அண்ணாச்சி! படம் சட்டுன்னு கிடைக்கல!

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனா அவங்க ஆரம்ப காலப் பாட்டை எல்லாம் தேடித் தான் கேட்கணும்! நமக்கு அவ்ளோ வயசு பத்தாதுங்கண்ணே! :-)

ஆரம்ப கால பாண்டித்யத்தில் இருந்து, படிப்படியா எம்.எஸ். எளிய பக்தி பாவத்துக்கு மாறீட்டாங்க போல//

ஆமாம், மேல இருக்குற கமெண்ட் ஏதோ உ.கு மாதிரியிருக்கே....:-)

என்னது அரசியல்ல சகஜமா?..சரி, சரி....:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆமாம், மேல இருக்குற கமெண்ட் ஏதோ உ.கு மாதிரியிருக்கே....:-)//

யண்ணோவ்!
எதுங்கன்னா உ.குத்து?
சரீஈஈஈஈஈஈ...
உ.குத்து-ன்னா இந்த உளுத்தம் பருப்பு குத்து தானே?
உ.பருப்பு, க.பருப்பு-னு எல்லாம் மளிகை லிஸ்டு போடுவாய்ங்களே! :-)

Anonymous said...

கண்ணபிரான்
நீங்க ஜகதோத்தாரன பாட்டை கொஞ்சம் தப்பா எழுதி இருக்கீங்க. அதோட மொழிபெயர்ப்பிலும் கூத சில தவருகள் இருக்கு. அதை இப்படி போட்டா சரியாயிருக்கும்.

ஆடிஸிதளெஷோதெ ஜகதோத்தாரன |
ஆட்டிணளசோதை அகிலமளிப்பனை

ஜகதோத்தாரன மகனெந்து திளியுத |
மகுகள மாணிக்யன ஆடிஸிதளேஷோதெ ||

அகிலமளிப்பனை மகனென்று எண்ணியே
மகவுகள் மாணிக்கத்தை ஆட்டினளசோதை
----

நல்ல சங்கீத சேவை செய்யரீங்க. Keep it up.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP