Sunday, February 10, 2008

Dating மோகனா/மோகினி/மோகனம்! - வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!

வாங்க, இன்னிக்கி இசை இன்பத்தில், மோகனாவை டேட் பண்ணலாம்! மோகனாவை ஷார்ட் ஃபார்ம்ல எப்படிங்க கூப்பிடலாம்? மோகினி? மோகி? மோகு? மோக்ஸ்? மோனா? மோமோ?
அட என்ன-ன்னு பாக்குறீங்களா? தமிழ் சினிமாவுல எங்க பார்த்தாலும் இந்த மோகனா தாங்க சூப்பர் ஸ்டார்! இவங்க இல்லாத ஹிட் படமே இல்லைங்கறேன்!

அட, யாருப்பா இந்த மோகனா?
இப்ப எல்லாம் ஸ்ரேயா, அமோகா, சுஜா தானே! இலியானா கூட இல்லீயே! ஒரு வேளை மேகா நாயரைத் தான் மோகா, மோகி-ன்னு சொல்லுறாரோ?

அட, இது அச்சு அசல் அக்மார்க் மோகனா-ங்க!
காதல் கோட்டை படம் பாத்திருப்பீங்களே! அதுல "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, என்னைப் பாக்காமப் போறாளே சந்திரிகா"-ன்னு ஒரு பாட்டு கேட்டீங்களா? பிடிச்சிருந்துச்சா?
இந்தா, இன்னொரு தபா கேளுங்க! அதுல மோகனாவையும் க்ரீட்டாக் கண்டுபுடிங்க பார்ப்போம்!


தெலுங்குல ப்ரேமலேகா-ன்னு அதே படம் வந்துச்சி...ஜிராகாரு, வெட்டிகாரு அதில் இருந்தும் கண்டுபுடிக்கலாம்!
என்ன கண்டுபுடிச்சாச்சா? ஹிஹி!
மோகனம் என்னும் ராகம் இல்லாத ஹிட் படங்களே தமிழ் சினிமாவில் இல்லைன்னு சொல்லி விடலாம்! அந்த அளவுக்கு மோகனத்தில், தமிழ்த் திரை இசை ஊறிப் போயிருக்கு!

மோகனம்-ங்கிற சொல்லுக்கே பொருள் என்னன்னா அழகு, மோகித்துப் போதல், சொக்கிப் போதல்!
வாங்க இன்னிக்கி மோகனத்தை டேட் பண்ணலாம், இசை இன்பத்தில்!
டேட்டிங்-னு சொன்னவுடனேயே, எனக்கு டேட்டிங் பாட்டு தான் ஞாபகம் வருது! பாய்ஸ் படத்தில் ஒரு அருமையான மோகனம்!

D-A-T-ING...You and me are meant to be!
Yeah..I can clearly see! Dating is a fantasy!!
என்று ஆங்கிலச் சொற்கள் நிறைய வந்தாலும்...
பாய்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டாதே! என்று செந்தமிழ்ச் சொற்களும் பாட்டில் விளையாடும்! :-))
I dont want to love! I dont want to love!
Love is not a game!! Love is not a game!!-
ன்னு மோகனம் அப்படியே குழையும்! கேளுங்க!
மோகனம்-ன்னாலே கொள்ளை அழகு-ன்னு பார்த்தோம்! அதான் கரெக்டா இந்த ராகத்துக்கும் மோகனம்-ன்னே பேரு வச்சிருக்காய்ங்க! மோகனத்துல எந்த ரசம் வேணும்னாலும் கொடுக்கலாம்!
அட மிளகு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம் எல்லாம் இல்லீங்க! நான் சொல்லும் ரசம் - காதல் ரசம், சிருங்கார ரசம், ஏக்க ரசம், வீர ரசம், பக்தி ரசம், காருண்ய ரசம்!

ஆனாப் பொதுவா மோகனம்-னா அது காதலுக்கு உரிய ராகம்-னு ஆகிப் போச்சுது! அதுவும் மயக்கும் மாலை/இனிக்கும் இரவு நேர ராகம்-னா அது மோகனம் தான்!

மோகனம் தான் இசையிலேயே மிகப் பழமையான ராகம் என்பது அறிஞர் பலரின் கருத்து!
சிலப்பதிகாரத்தில் வரும் பண்கள் பலவற்றுள் மோகனம் மிக முக்கியமான ஒன்று! முல்லைப் பண் - மோகன ராகம் அப்படியே அச்சு அசலாக ஒத்துப் போகிறது! அதன் நோட்ஸ், cycle of fifths வரிசையில் இருப்பதை இசை அறிஞர் டாக்டர். S. இராமநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்!

தேவாரத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் பலவற்றை மோகனத்தில் தான் இன்றும் பாடுகிறார்கள்! "நாயகனாய் நின்று" என்ற திருப்பாவைப் பாடலும் மோகனம் தான்! சீன, ஜப்பானிய, ஸ்வீடிஷ் மற்றும் ஜிப்சி இசையில் கூட மோகனம் தொனிக்கிறது! இந்துஸ்தானியில் இதுக்குப் பேரு "பூப்"/"பூபாளி" (பூபாளம் அல்ல!)

இப்பேர்பட்ட மோகனத்தை, இசைஞானி இளையராஜா சும்மா விடுவாரா?நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்! -அக்னி நட்சத்திரம் படத்துல, யாரையோ மயக்க ஆடுவாங்க! யாரை மயக்க-ன்னு சரியா நினைவில்ல! ஆனா ஆடுறது அமலா! அது மட்டும் நினைவிருக்கு! :-)

(சரி...அமலா இப்போ எங்க இருக்காங்க சாமீ? அம்மா, அக்கா ரோல்-ல கூட வரதில்லையா என்ன? அமலா காலத்துல நான் பச்சைப் புள்ளையா தான் இருந்தேன்! ஆனாலும் அவிங்க நடிச்ச வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், வேலைக்காரன் படமெல்லாம் இப்ப பார்க்கும் போது கூட, அக்கால ஜோதிகாவோ-ன்னு எண்ணத் தோனுது...)

சரி, நாம மோகனம் மேட்டருக்கு வருவோம்!
அக்னி நட்சத்திரம் படத்துல, இளையராஜா இதைப் போட்ட விதமே சூப்பர்! நின்னுக் கோரி-ன்னு கர்நாடக இசை வர்ணத்தின் சொற்களைப் பாட்டில் அப்படியே எடுத்தாண்டு இருக்கிறார்! அந்தப் பாடல் முழுதுமே மோகனம் தான்! கேளுங்க!கொஞ்சமா மோகனத்தைப் பத்திச் சொல்லிக்கிறேன். அப்பாலிக்கா இளையராஜா முதற்கொண்டு ஒவ்வொரு இசையமைப்பாளரும் மோகனத்தை எப்படிக் கையாண்டாங்கன்னு பார்த்துவிடலாம்!

மோகன ராகத்தில் உள்ள எல்லா ஸ்வரங்களையும் "கமகம்" என்று சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தொனியில் தர முடியும்! அதுனால இதுக்கு சர்வ ஸ்வர கமக ராகம்-ன்னே பேரு! திருமணங்களில் மோகனம் வாசிப்பது மங்களகரமானது! எல்லாக் காலங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், காதல் ராகம் அல்லவா? மாலை/இரவு வேளைகளில் இன்னும் நல்லா இருக்கும்!

கர்நாடக இசையில் மோகனத்தைக் கட்டியாண்டது மகராஜபுரம் வழி வந்த பாடகர்கள்! முத்துசாமி தீட்சிதரின் "கோபிகா மனோகரம் பஜேகம்" என்பது மகராஜபுரம் சந்தானத்தின் ஃபேவரிட் பாடல்!

மோகனத்தின் பேரையே வைத்து, மோகன ராமா என்று தியாகராஜர் பாடியிருக்கும் பாட்டு, மற்றும் அவரின் நன்னு பாலிம்ப - இவை இரண்டும் மதுரை மணியின் ஃபேவரிட்!

தமிழிசைப் பாடல்களில்
அருணாச்சலக் கவிராயரின் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, மற்றும் பாபநாசம் சிவனின் நாராயண திவ்ய நாமம் - இவையும் மோகனம் தான்! ஸ்வாகதம் கிருஷ்ணா என்னும் ஊத்துக்காடு வேங்கட கவியின் மோகனப் பாடல் மிகவும் பிரபலம்!

மயில் வாகனா, வள்ளி மண மோகனா என்னும் பாட்டும் முருகப் பெருமான் மேல் அமைந்த மோகனம்! இம்புட்டுச் சொல்லிட்டு, நம்ம கேபி சுந்தராம்பாள் பாடுற மோகனத்தைச் சொல்லாம விட முடியுமா? - ஆனந்த தாண்டவம் என்னும் பாட்டு!

உஷ்...அப்பா, மூச்சு வாங்குதே!...சினிமாவுக்குப் போகலாம்-பா!


பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் - காதல் ஓவியம் - SPB - இளையராஜா


கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - SPB - MSV (ஜிரா-வுக்காக பதிவிட்ட பின்னர் சேர்த்தது :-)


கீதம் சங்கீதம் - நீ தானே என் காதல் வேதம் - கொக்கரக்கோ - SPB/Shylaja - இளையராஜா


கண்மணியே காதல் என்பது - ஆறில் இருந்து அறுபது வரை - இளையராஜா


வான் போல வண்ணம் கொண்டு வந்து - சலங்கை ஒலி - SPB/Shylaja - இளையராஜா


மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்! - கரும்பு வில் - யேசுதாஸ் - இளையராஜா

கங்கை-யமுனை-இங்கு தான் சங்கமம்! - இமயம் - யேசுதாஸ்/வாணி ஜெயராம் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

இன்னும் ரஹ்மான், ஹாரிஸ், தேவான்னு வரிசையா மோகனத்தை எல்லாம் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா!

அது இல்லாம மோகனமும் கல்யாணியும் கலந்தடிச்சி மோகனகல்யாணி ன்னு வேற இருக்காமே! மோகனகுறிஞ்சி, மோகனசந்திரிகா, மோகனவராளி, மோகனாங்கி...ன்னு இன்னும் எத்தனையோ மோகனாஸ்!
சரி அடுத்த யாரை டேட் பண்ணலாம்? யோசிச்சிச் சொல்லுறேன்! வர்ட்டா? :-)

References (உசாத்துணை):
http://www.carnatica.net/special/raganubhava-mohanam-ppn.htm

நண்பர் சிமுலேஷனின் மோகனம் பற்றிய பதிவு இங்கே!

54 comments:

Unknown said...

நமக்கு மோகனா (பர்சனலா) பரிச்சயமில்லைன்னாலும்... குறிப்பிட்ட பல பாடல்கள் அருமையானவை :)

வடுவூர் குமார் said...

இப்படி எல்லா பாட்டையும் யூ டியூபிலா போடுவதா?
வீட்டுக்கு போய் பார்த்துக்கிறேன்.
அந்த கொக்ரக்கோ பாட்டு சூப்பராக இருக்கும்.
இளையராஜா,இந்த புல்லாங்குழலை தேவையான இடத்தில் மெலிதாக வைத்து ஆளை அசரவைத்துவிடுகிறார்.
நமக்கு இந்த நோட்டு/பென்சில் எல்லாம் தெரியாது. :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்படி எல்லா பாட்டையும் யூ டியூபிலா போடுவதா?//

குமார் அண்ணா
அந்தந்தப் பாட்டின் மேல் உள்ள பாட்டு-சினிமா-பாடகர்-இசையமைப்பாளர் சுட்டியைத் தட்டுங்க! ஒலிச்சுட்டிகள் மட்டும் ஓப்பன் ஆகும்! :-)

Mohandoss said...

தமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு அண்ணன் மோகன்தாஸ் அவர்களே வருக வருக என்று அப்பாகிட்ட சொல்லி திருச்சியில் போஸ்டர் அடிக்கச் சொல்ல வேண்டியதுதான் அப்ப.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மோகன்தாஸ் said...
தமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு அண்ணன் மோகன்தாஸ் அவர்களே வருக வருக என்று அப்பாகிட்ட சொல்லி திருச்சியில் போஸ்டர் அடிக்கச் சொல்ல வேண்டியதுதான் அப்ப//

மோகன்தாஸ் அண்ணாச்சி...நீங்க இம்புட்டு நல்லவரா? :-)

நல்ல காலம் மோகன்-மோகனா பெயர் பொருத்தம் சூப்பரு-ன்னு மோகனா-வைக் கேட்காம, போஸ்டரை மட்டும் கேட்டீரே! வாழ்க! வளர்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தஞ்சாவூரான் said...
நமக்கு மோகனா (பர்சனலா) பரிச்சயமில்லைன்னாலும்...//

தப்பிச்சீங்க தஞ்சாவூரான் அண்ணா!
மோகனா பரிச்சயம்-னு சொல்லி இருந்தீங்க, ஒங்களுக்குப் பூரிக் கட்டை தான்! :-)

//குறிப்பிட்ட பல பாடல்கள் அருமையானவை :)//

நன்றிங்கண்ணோவ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
அந்த கொக்ரக்கோ பாட்டு சூப்பராக இருக்கும்//

ஆமாங்கண்ணா!
கீ.....தம்.....சங்.....கீதம்-ன்னு குழைய விடுறாரே!

//இளையராஜா,இந்த புல்லாங்குழலை தேவையான இடத்தில் மெலிதாக வைத்து ஆளை அசரவைத்து விடுகிறார்//

புல்லாங்குழல் இசை பற்றி இதே இசை இன்பம் வலைப்பூவில் சீவிஆர் போட்ட பழைய பதிவை எட்டிப் பாருங்க!

//நமக்கு இந்த நோட்டு/பென்சில் எல்லாம் தெரியாது. :-))//

நமக்கும் தான்! நோட்டை எல்லாம் நோட் பண்ணியதே இல்ல! :-)

ஷைலஜா said...

மோகனமான பதிவு அரங்கனின் மோகன அலங்காரம் மாதிரி!

இந்தக்காற்று வெளியிடைக்கண்ணம்மா பாடலும்
ஒரு தங்கரதத்தில் --தர்மயுத்தம் பாட்டும் அமக்களம் இல்லையா?
மோகனப்பட்டியல் மேகமாய் நீளும்! செல்லமா மோக்ஸ் தான் நல்லாருக்கு!

jeevagv said...

மோகனப் பாடல்களை முழுதும் பட்டியலிட்டு மாளாது, அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது!
ஸ்வரஸ்தானங்களில் ம, நி ஆகிய ஸ்வரங்கள் கிடையாது. அதனால் தொன்று தொட்டே இந்த ராகம் வழக்கத்தில் இருக்கிறது!
கச்சேரியின் தொடக்கத்தில் வர்ணம், முடிவில் மங்களம் - இவற்றில் மட்டுமல்லமால், மோகனம் எந்தப் பகுதியிலும் இடம்பெறும்! வரவீணா... என்கிற எளிய கீதமும் உண்டென்பது சிறார்களுக்கும் தெரியும்.
மோகனத்தில் ஒரு ரா ரா பாட்டும் உண்டாம்!
மயில் வாகனா, வள்ளி மன மோகனா... பாடல்

என் ஃபேவரைட் பாடல்!
திரைஇசையிலோ, MSV இன், 'கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - ராகம் தாளம் மோகனம் மங்களம்!
மீரா படத்தில் எம்.எஸ் அம்மாவின் 'கிரிதர கோபாலா...' மிகவும் புகழ் பெற்றது.
ஏன் பள்ளி கொண்டீரய்யா பாடலில் - ஒவ்வொரு வரியிலும் ஒரு கதை இருக்கும்... அந்த ஒரு பாடலைக் கொண்டே ஒரு பதிவு, ஏன் தொடர் பதிவே போடலாம்!

Radha Sriram said...

மோஹனம் அருமையான ராகம். சுலபமாக கண்டுபிடிச்சுடலாம். நீங்க போட்ருக்கர மொஹன ராக சினிமா பாட்டுக்கள் அருமை. "ஏன் பள்ளி கொண்டீரய்யா"..எவ்வளவு அழகான பாட்டு? N.C.வசந்தகோகிலம் ப்ரபல படுத்திய பாடல். அருமையான குரல் வளம் படைத்தவர்.

இலவசக்கொத்தனார் said...

மோகனா நம்ம சைல்ஹுட் ப்ரெண்ட். இருக்கட்டும்.

அமலா வந்து, நம்ம நாகார்ஜுனாகாருவை கல்யாணம் கட்டிக்கிட்டு, தெருநாயைக் கொல்லாதேன்னு பிராணிகள் மேல பரிதாபப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ நடிக்காதது நம்ம மேல இருக்கும் கருணையாலையான்னு எல்லாம் கேட்கக்கூடாது! அவங்க நடிச்ச காலத்தில் நமக்கு அவங்களைப் பிடிக்கும். ஓக்கேவா? :))

G.Ragavan said...

எல்லாமே அருமையான பாட்டுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டுங்க.

அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா?

G.Ragavan said...

எல்லாமே அருமையான பாட்டுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டுங்க.

அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா?

G.Ragavan said...

அப்புறம் இன்னொரு விஷயம்...I hate Nagarjuna.. I hate Nagarjuna...I hate Nagarjuna....

குமரன் (Kumaran) said...

மோகனத்துல நிறைய பாடல் கேட்ட மாதிரி இருக்கு. பாய்ஸ் பாட்டைப் பாத்துட்டு இப்ப நாராயண நாமத்தைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். இன்னும் நிறைய பாட்டு கேக்கணும். தொகுப்புக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அப்புறம் இன்னொரு விஷயம்...I hate Nagarjuna.. I hate Nagarjuna...I hate Nagarjuna.... //

மோஹனத்தை திருடியதாலா ஜிரா:))

எனக்குக் கரணம் கேட்டு ஆடிதான் ரொம்பப் பிடிக்கும்...
நன்றி ரவி . யப்பா.. எவ்வளோ பாட்டுமா!!!


4

வல்லிசிம்ஹன் said...

எனக்குக் கரணம் கேட்டு ஆடிதான்:)))


kARANAM KETTU VAADINU
EZHUTHI IRUKKAnUM

rv said...

மோகனாவை இம்புட்டு புடிக்குமா?

நமக்கும்தான். நின்னுக்கோரி வர்ணம் கத்துகிட்ட புதுசுல வாசிக்க ரொம்ப புடிக்கும். ஏன்னா, (நாம வாசிக்கறதுல) அபஸ்வரம் அதுலதான் அவ்வளவா தட்டாது.. இது இல்லேன்னா சங்கராபரண சாமி நின்னே...

சன்..னு..தா..ங்க..ஸ்ரீ..நீ..வாஸா.னு சரணத்துல ஸ்டாப் போட்டு வாசிச்சு கொஞ்சம் ஸ்வரமும் வாசிச்சுட்டா 'பரவால்லியே..பையன் நல்லா வாசிக்கிறான்'னு சங்கீதம் தெரிஞ்ச சிடுசிடு மாமிகிட்ட கூட பேரு வாங்கிடலாம்..

அந்த வர்ணம் யாரு பாடினாலும்/வாசிச்சாலும் கேக்க நல்லாருக்கும்கறது வேற கதை..

Simulation said...

இதையும் பாருங்கள்.

http://simulationpadaippugal.blogspot.com/2006/09/04.html

- சிமுலேஷன்

ஓகை said...

'ஏன் பள்ளிக் கொண்டீரைய்யா...' பாபனாசம் சிவனுடையதா? அது அருனாசல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை என்றுதான் படித்த நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்.

திமிங்கிலத்துக்கு நீந்தத் தெரியாது என்று சொல்வது ஜீராவுக்குக் கை வந்த கலை போலிருக்கிறது. MSVக்கு மோகனம் தெரியாவிட்டால் வேறு யாருக்கு மோகனம் தெரியும்?

நமது தமிழ்த்தாய் வாழ்த்து 'நீராரும்...' மோகனராகம்தான். அதற்கு இசையமைத்தது MSV என்று படித்திருக்கிறேன். இன்னும் பலநூறு ஆண்டுகள் கழித்தும் தமிழர் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் கலங்கரை விளக்கம் படப்பாடல் "சங்கே முழங்கு.." மோகன இராகம்தான். வேறு பல பாடல்களுக்கு சிமுலேஷன் சுட்டியைப் பார்க்கவும்.

இந்த இராகத்தப் பற்றி நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

ஓகை said...

சுசீலா அவர்கள் பாடிய "மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி...' என்ற தனிப்பாடலை தேடிப் பிடித்துத் தருவீர்களாக!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அப்புறம் இன்னொரு விஷயம்...I hate Nagarjuna.. I hate Nagarjuna...I hate Nagarjuna....//

ஹிஹி!
Me too! Me too! Me too!

வள்ளலார் பாட்டுல ஒரு வரி:
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்-னு வரும்! பக்கத்து வூட்ல அந்த அங்க்கிள் பாடுவாரு! நாங்க எல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிச்சிப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
மோகனமான பதிவு அரங்கனின் மோகன அலங்காரம் மாதிரி!//

இதுக்குத் தான் திருவரங்கப்ரிய வேணுங்கிறது! எப்படி அரங்கனின் மோகினி அலங்காரத்த உள்ளாரக் கொண்டாந்திட்டீங்க பாருங்க! :-)

//வெளியிடைக்கண்ணம்மா பாடலும்
ஒரு தங்கரதத்தில் --தர்மயுத்தம் பாட்டும் அமக்களம் இல்லையா?//

ஆமா! ஆமா!

//செல்லமா மோக்ஸ் தான் நல்லாருக்கு!//

I like Mogi! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு//

//ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா?//


என்ன ஜிரா இப்பிடிச் சொல்லிட்டீங்க! ஓ...நான் எல்லாம் இளையராஜா-எடுத்துக்காட்டே கொடுத்துட்டேன்னு கோபமா?

எம்.எஸ்.வியும் எக்கச்சக்கமா மோகனம் போட்டிருப்பாரு!
ஆனா எனக்குத் தெரிஞ்சது ரெண்டோ, மூனோ தான்!
கங்கை-யமுனை
இங்கு தான் சங்கமம்...அதுல சூப்பர் மோகனம்!

அதான் உங்க எல்லார் கிட்டயும் பின்னூட்டமாப் போடச் சொன்னேன்!
நான் கொஞ்சம் நம்ம "மொட்டை" விசிறி...
அவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...

இப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்!
அவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்!
எல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்!

ஜிரா காலத்துக்கு எம்.எஸ்.வி
நமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
மோகனப் பாடல்களை முழுதும் பட்டியலிட்டு மாளாது, அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது!//

உண்மை! உண்மை!!

//ஸ்வரஸ்தானங்களில் ம, நி ஆகிய ஸ்வரங்கள் கிடையாது. அதனால் தொன்று தொட்டே இந்த ராகம் வழக்கத்தில் இருக்கிறது!//

ஓ....இது தான் தொன்மைக்குக் காரணமா?

//மயில் வாகனா, வள்ளி மன மோகனா... பாடல்
என் ஃபேவரைட் பாடல்!//

பாருங்க! உங்க ஃபேவரிட்டை நானும் பதிவில் போட்டு விட்டேன்!

//ஏன் பள்ளி கொண்டீரய்யா பாடலில் - ஒவ்வொரு வரியிலும் ஒரு கதை இருக்கும்... அந்த ஒரு பாடலைக் கொண்டே ஒரு பதிவு, ஏன் தொடர் பதிவே போடலாம்!//

ஜீவா போடலம்-னு சொன்னா போட்டுருவாருன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
மோஹனம் அருமையான ராகம். சுலபமாக கண்டுபிடிச்சுடலாம். நீங்க போட்ருக்கர மொஹன ராக சினிமா பாட்டுக்கள் அருமை. //

ஆமாங்க ராதா....
மோகனம் ஒரு ஈசி ராகம்! அதே சமயம் மிக இனிமையும் கூட!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
மோகனா நம்ம சைல்ஹுட் ப்ரெண்ட். இருக்கட்டும்.//

அந்த மோகனா எங்கு இருக்கட்டும் கொத்ஸ்? :-)

//அமலா வந்து,....அவங்க நடிச்ச காலத்தில் நமக்கு அவங்களைப் பிடிக்கும். ஓக்கேவா? :))//

எனக்கும் ஜிராவுக்கும் இப்ப நீங்களும் போட்டியா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மோகனத்துல நிறைய பாடல் கேட்ட மாதிரி இருக்கு//

ஏன்னா மோகனம் எல்லாத்துலயும் ஈசியா வந்துரும் குமரன்!

//பாய்ஸ் பாட்டைப் பாத்துட்டு இப்ப நாராயண நாமத்தைக் கேட்டுக்கிட்டு இருக்கேன்//

சூப்பரு!
பாய்ஸ் படம் பாத்ததுக்கு பரிகாரமா நாராயண திவ்ய நாமம் பாட்டு கேக்கலையே? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மோஹனத்தை திருடியதாலா ஜிரா:))//

அதுல என்ன சந்தேகம் வல்லியம்மா?
ஹூம்...ஜிரா அப்பவே இயக்குனரா ஆயிருந்தா இந்நேரம்!

//நன்றி ரவி . யப்பா.. எவ்வளோ பாட்டுமா!!!//

எனக்கே மூச்சு வாங்குது வல்லியம்மா!
ஜோடா ப்ளீஸ்!
நீஙக வேற "காரணம் கேட்டு வாடி" பாட்டைக் கொடுத்திருக்கீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஓகை said...
'ஏன் பள்ளிக் கொண்டீரைய்யா...' பாபனாசம் சிவனுடையதா? அது அருனாசல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை என்றுதான் படித்த நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்//

ஓகை ஐயா! தவறுக்கு வருந்துகிறேன்!
அது அருணாசலக் கவி தான்! பதிவில் திருத்தி விடுகிறேன்!

//திமிங்கிலத்துக்கு நீந்தத் தெரியாது என்று சொல்வது ஜீராவுக்குக் கை வந்த கலை போலிருக்கிறது. MSVக்கு மோகனம் தெரியாவிட்டால் வேறு யாருக்கு மோகனம் தெரியும்?//

ஓகை ஐயா!
நம்ம ஜிரா MSV யோட பெரிய ஃபேன்! அவரு நான் எம்.எஸ்.வி பாட்டெதுவும் பதிவுல கொடுக்காத கோபத்துல வஞ்சப் புகழ்ச்சி பண்ணிட்டுப் போயிட்டாரு! :-)

//இந்த இராகத்தப் பற்றி நானும் ஒரு பதிவு போடுகிறேன்.//

போடுங்க! போடுங்க!!

G.Ragavan said...

// நான் கொஞ்சம் நம்ம "மொட்டை" விசிறி...
அவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...

இப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்!
அவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்!
எல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்!

ஜிரா காலத்துக்கு எம்.எஸ்.வி
நமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-) //

அது சரி... சிலப்பதிகாரத்துல முல்லைப்பண்ணு தேங்கா பன்னுன்னு சொன்னீங்களே.... சிலப்பதிகாரத்த வைரமுத்து எழுதுனாரா?

தேவாரத் திருமுறைகள் ஆழ்வார்கள் அருளியதெல்லாம் இன்றைக்கும் மோகனத்துல பாடுறாங்களே... அதுக்கெல்லாம் ரகுமானும் ஜெர்ரி ஜெடியுந்தான் மெட்டுப் போட்டாங்களா?

என்னங்கய்யா கலர் கலரா இடியாப்பம் பிழியுறீங்க? ;)

மெல்லிசை மன்னர் போட்ட பாட்டுகள மட்டும் நான் வந்து எடுத்துக் கொடுக்கனுமாக்கும். அப்ப ரகுமான் பாட்ட ரகுமான் விசிறிகள் சொல்லட்டும்னு விட்டுருக்கலாமே. விடலையே. ஏன்னா நீங்க ரகுமான் விசிறி. ராஜா பாட்டுகளை அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கலாம்னு விட்டிருக்கலாமே? இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே? :) உண்மைய மறைக்காம சொல்லீருங்க.

G.Ragavan said...

// நான் கொஞ்சம் நம்ம "மொட்டை" விசிறி...
அவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...

இப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்!
அவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்!
எல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்!

ஜிரா காலத்துக்கு எம்.எஸ்.வி
நமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-) //

அது சரி... சிலப்பதிகாரத்துல முல்லைப்பண்ணு தேங்கா பன்னுன்னு சொன்னீங்களே.... சிலப்பதிகாரத்த வைரமுத்து எழுதுனாரா?

தேவாரத் திருமுறைகள் ஆழ்வார்கள் அருளியதெல்லாம் இன்றைக்கும் மோகனத்துல பாடுறாங்களே... அதுக்கெல்லாம் ரகுமானும் ஜெர்ரி ஜெடியுந்தான் மெட்டுப் போட்டாங்களா?

என்னங்கய்யா கலர் கலரா இடியாப்பம் பிழியுறீங்க? ;)

மெல்லிசை மன்னர் போட்ட பாட்டுகள மட்டும் நான் வந்து எடுத்துக் கொடுக்கனுமாக்கும். அப்ப ரகுமான் பாட்ட ரகுமான் விசிறிகள் சொல்லட்டும்னு விட்டுருக்கலாமே. விடலையே. ஏன்னா நீங்க ரகுமான் விசிறி. ராஜா பாட்டுகளை அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கலாம்னு விட்டிருக்கலாமே? இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே? :) உண்மைய மறைக்காம சொல்லீருங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
இவையெல்லாம் மோகனமானவையா??
எனக்குத் தியாகையரின் 'நன்னு பாலிம்ப' அப்பாடல் பாடிய சந்தர்ப்பச் செய்திகளால் நன்கு பிடிக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராமநாதன் said...
மோகனாவை இம்புட்டு புடிக்குமா?
நமக்கும்தான்//

அதானே பார்த்தேன்! :-)

//நின்னுக்கோரி வர்ணம் கத்துகிட்ட புதுசுல வாசிக்க ரொம்ப புடிக்கும். ஏன்னா, (நாம வாசிக்கறதுல) அபஸ்வரம் அதுலதான் அவ்வளவா தட்டாது..//

ஹிஹி...நீங்களுமா?
அது சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி! பதிவுக்குப் பதிவு உள்குத்து! :-))

//சன்..னு..தா..ங்க..ஸ்ரீ..நீ..வாஸா.னு சரணத்துல ஸ்டாப் போட்டு//

ஹிஹி...Every city has the same rules! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Simulation said...
இதையும் பாருங்கள்.
http://simulationpadaippugal.blogspot.com/2006/09/04.html//

நன்றி சிமுலேஷன்!
அந்தப் பதிவுக்கு என் பின்னூட்டத்துக்கு உங்க பதில்! :-))
//ரவி ஷங்கர்,
"ஏன் பள்ளி கொணடீர் அய்யா" மோகனதிற்கு நல்ல எடுத்துக்காட்டுதான். ஆமாம், ப்ரொபைல் படத்தில் நீங்கள் "ஏன் பள்ளி கொண்டீர் அய்யா"?//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஓகை said...
சுசீலா அவர்கள் பாடிய "மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி...' என்ற தனிப்பாடலை தேடிப் பிடித்துத் தருவீர்களாக!
//

தங்கள் உத்தரவு ஓகை ஐயா! :-)

sury siva said...

இந்திர லோகத்தில் ஒரு காட்சி:
இந்திரன்:
ஆஹா ! ஆஹா !! ஆஹா !!!
ஆஹா !!!! ஆஹா !!! ஆஹா !!!!!

நாரதா ! நாத உலகிலே மும்மாரி பொழிகிறார்போல் இருக்கிறதே ? எங்கிருந்து வருகிறது ?

நாரதர்: ஆம் பிரபோ ! அது கர்னாடக சங்கீத உலகின் பரம ரசிகன் குழலூதும் கண்ணனின் கசின் கண்ணபிரான்
அவர்களின் வலைப்பதிவிலிருந்து தான் வருகிறது?

இந்திரன்: நாம் உடனே அங்கு செல்லவேண்டும். தற்போதைக்கு இங்கு இன் சார்ஜ் ஆக நா.அழகப்பன்
இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்ளட்டும்.

நாரதர்: தங்கள் சித்தம் பிரபோ..ஆனால்....
இந்திரன்: என்ன ஆனால் ?
நாரதர்: இந்த மோகனத்திற்கு அடிமை ஆகிப்போய் நீங்கள் அங்கேயே தங்கிவிடக்கூடாது. பூலோகத்திற்கு
தாங்கள் சென்றபோதெல்லாம் உங்கள் past performance
அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இந்திரன்: சரி..சரி.. எதற்கும் மோஹனத்தைப் பற்றி ஒரு data base
தயார் செய்து வைய்யுங்கள்.
நாரதர்: ப்ரபோ ! அது ஏற்கனவே ஒரு பொழுது போகாத கிழவனார்
தஞ்சையில் சுப்பு ரத்தினம் அவர் பெயர்
தனது வலையில் சகட்டு மேனிக்கு எழுதியிருக்கிறார். அதன் விலாசம்:

http://movieraghas.blogspot.com/2007/12/blog-post_26.html


இந்திரன்: ஓகே..ஓகே...பூலோகத்திற்குப் போக ஒரு நாலு மணி நேரம் ஆகுமே !
நாரதர்: ஆம் பிரபோ.! அந்த நேரத்தில் கூட மோஹனத்தை தாங்கள் கேட்டுக்கொண்டே போக
இளைய ராஜா மோஹனத்தில் இசை அமைத்த எல்லா பாட்டினையும் ஒரு எம்.பி.3 ஃபைலில்
போட்டு வைத்திருக்கிறேன்.
இந்திரன்: நடுவில் ஏதேனும் file corrupt ஆகி விடப்போகிறது. எதற்கும் ஒரு மான்யுவல்
லிஸ்ட்டும் கொடுத்து வைய்யுங்கள்.
நாரதரே ! இன்னொரு ரிக்வெஸ்ட்!
என்ன மஹா பிரபோ
மோஹனத்தின் ஸ்வரங்களைச் சொல்லுங்கள்.! அங்கே போய் ஏதாவது உளறி விடப்போகிறேன்.


Mohanam | S R2 G3 P D2 S | S D2 P G3 R2 S

(a raga designed for both love & devotion !)

Mohanam Aalolam Kili Thopilae Siraichaalai (uses M2, Ni3 of kalyani)
Mohanam Aandaalalo Namo Jagadeka Veerudu Athiloka Sundari (Telugu)
Mohanam Aasai Nenjin Kanavugal Valarpirai Mugathil Mugam Paarkalam
Mohanam Aathoram Kaathaada Engeyo Kaeta Kural
Mohanam Aatirampile Kumbile Kaalapaani (Malayalam) (uses M2, Ni3 of kalyani)
Mohanam Abc Nee Vaasi Oru Kaidiyin Dairy (watch the rhythm patterns)
Mohanam Achachacho Penmai Poovache Udhayam
Mohanam Adi Elachi Elachi Kozhaichi Kozhaichi Maharasan
Mohanam Azhagaana Nam Paandi Naatinilae Pudhupatti Ponnuthaayi
Mohanam Athe Neevu Abhinandana (Telugu)
Mohanam Cheri Yashodakku Swarna Kamalam (Telugu)
Mohanam Enakkoru Magan Pirappan Annanukku Je
Mohanam Enga Maharanikku Thalaimurai
Mohanam Geetham Sangeetham Kokkarako
Mohanam Goro Gorokana Boomi Geetha (Kannada)
Mohanam Gundumalli Gundumalli Solla Marandha Kadhai
Mohanam Idhayam Oru Kovil Idhayakovil
Mohanam Indha Ammanukku Deiva Vaaku (appadi podu !!!)
Mohanam Indha Poovukoru Arasan Poovarasan
Mohanam Iru Paravaigal Malai Muzhuvadhum Niram Maradha Pookal
Mohanam Janapadha Ammodu Usire (Kannada)
Mohanam Kanmaniye Kaadal Aarilirindu Arubathu Varai
Mohanam Kannan Oru Kai Kuzhandhai Badrakaali (uses Ni3 in avarohanam)
Mohanam Kasthoori Manae Pudhumai Penn (Diluted With Kalyani)
Mohanam Kathirundhen Thaniye Rasamagan
Mohanam Kekaliyo Kekaliyo Kasthuri Maan
Mohanam Ketkudhadi Koo Koo Kattumarakaaran
Mohanam Kukku Koo Koovum Valli
Mohanam Kurinji Malarin Azhaghe Unnai Aaradhikiren
Mohanam Malligai Malai Katti Pudhiya Ragam (Mohanam for a Sad Mood!)
Mohanam Meenkodi Theril Karumbuvil
Mohanam Naal Thorum Endhan Kannil Dhevadhai
Mohanam Naan Oru Ponnoviyam Kannil Theriyum Kadhaigal
Mohanam Naan Thanga Roja Time
Mohanam Naan Undhan Thaayaga Vendum Ullasa Paravaigal
Mohanam Nilavu Thoongum Naeram Kunkumachimizh (Diluted With Kalyani)
Mohanam Ninnukkori Gharshana (Telugu)
Mohanam Ninnukkori Varnam Agni Nakshatiram
Mohanam Oilaaley Hoiyaarae Hoiyee, Yamuna Theerey Yaathra (Malayalam)
Mohanam Om Kaarade Kande Nammura Mandaara Hoove (Kannada)
Mohanam Oru Kanam Oru Yugamaaga Nadodi Thendral
Mohanam Oru Ragam Padalodu Anandha Ragam
Mohanam Oru Thanga Rathathil Dharma Yudham
Mohanam Oru Vaarthai Pesu Unknown (if someone knows the film name, tip me)
Mohanam Poovil Vandu Kadhal Oviyam
Mohanam Pottu Vacha Kiliye Poovarasan
Mohanam Raadhe En Raadhe Japaanil Kalyaanaraaman
Mohanam Rela Rela Rela Anumaanaspadam (Telugu) (a celebration of music)
Mohanam Saada Maada Pechukellam Karagaatakari
Mohanam Thamtha Theemtha Pagalil Oru Nilavu
Mohanam Thirutheril Varum Silayo Naan Vaazha Vaippen (Uses Ni3)
Mohanam Vaan Pole Vannam Salangai Oli
Mohanam Vandhadhe Kizhakku Vaasal
Mohanam Varuga Varuga Ezhilae Pondaatti Thevai
Mohanam Vayasu Pulla Vayasu Pulla Annan
Mohanam Ve Vela Gopemella Saagar Sangamam (Telugu)
Mohanam Ve Velaa Varnalaa Sankeerthana (Telugu)
Mohanam Veene Veene Veenakkunje Aalolam (Malayalam)
Mohanam Vel Muruganukku Mottai Onnu Puyal Paadum Pattu

Mohana Kalyani | S R2 G3 P D2 S | S N3 D2 P M2 G3 R2 S
(Simple…Mohanam plus Kalyani !)
Mohana Kalyani Enadhu Udalum Uyirum Porulum Raajavin Ramanamaalai
Mohana Kalyani Geetha Sangeetha Anbae Sangeetha
Mohana Kalyani Kaalai Thendral Paadi Varum Uyarndha Ullam (uses D1 in charanam !!)
Mohana Kalyani Kelada Manidava Bharathi
Mohana Kalyani Krishna Nuvvu Shivshankar (Telugu)
Mohana Kalyani Mudhal Mutham Mogam Pudhir
Mohana Kalyani Naan Sirithaal Deepavali Nayagan
Mohana Kalyani Oh Party Nalla Party Dhaan Idhayam
Mohana Kalyani Paattu Thalaivan Padinal Idhaya Kovil (watch out for the hamsadhwani phrase!!)
Mohana Kalyani Paarijaadha Poove Ellame En Raasathan
Mohana Kalyani Thenmalli Poove Thyagam (trace of maand in charanams)

subburathinam
thanjai.

கோபிநாத் said...

தல

எவ்வளவு விஷயம் தெரிஞ்சிவச்சிருக்கிங்க...(அமலாவையும் சேர்த்து) யப்பா..பெரிய ஆளு தல நீங்க ;))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குழலூதும் கண்ணனின் கசின் கண்ணபிரான்
அவர்களின் வலைப்பதிவிலிருந்து தான் வருகிறது?//

அச்சோ! நான் இல்ல! நான் இல்ல!
என்னை வுட்டுடுங்க சாமீ! :-)))
இந்த Blog-இன் மும்மூர்த்திகள் ஜீவா, திராச, சிவீஆர்!!!

சூரி சார்!
உங்க பின்னூட்டம் கண்டு பிரமித்துப் போனேன்! கொஞ்ச நேரம் பேச்சே இல்லை! :-)
சிமுலேஷன் வலைப்பூவும் பாருங்க!

முக்கியமா, இசை இன்பத்தின் இடப் பக்கச் சுட்டியில் MOVIE RAGAS வலைப்பூவைச் சேர்த்து விட்டேன்! அன்பர்கள் எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்!

sury siva said...

இசைஇன்ப வாசலிலே
இந்திரன் வந்த நேரம். காவல்காரர் டீ சாப்பிட போயிருக்கிறார்.
வாயிற்கதவு பூட்டியிருக்கிறது.
இந்திரன்: யாரங்கே ! இதுதான் இசை இன்ப வாசலோ ?
இங்கு தான் கண்ணனின் வாசமோ
அந்த கண்ணபிரானைக்கூப்பிட்டு வாசலைத்திறக்கசொல்லுங்கள்.

கண்ணபிரான் ஓடோடி வருகிறார்.
"இந்திர தேவா ! க்ஷமிக்கவேண்டும்..இதோ கதவைத் திறந்தேன்."
இந்திரன்: அந்த மோஹனம் பாடிய குயில் நீ தானே?
கண்ணபிரான்: ( நடுக்கத்துடன்)
(மெல்லிய குரலில்) ஏதோ error message
சத்தமாக: தேவா !
//
ச்சோ! நான் இல்ல! நான் இல்ல!
என்னை வுட்டுடுங்க சாமீ! :-)))
இந்த Blog-இன் மும்மூர்த்திகள் ஜீவா, திராச, சிவீஆர்!!!//

இந்திரன்: அப்பொழுதே நினைத்தேன். நான் படைத்த
மும்மூர்த்திகள் அல்லவா அவர்கள் ! கர்னாடக சங்கீதத்தில் கரை கடந்த விற்பன்னர்கள்
ஆவார்கள் என இவர்களைப் பிறக்கவைக்கும்போதே நினைத்தேன்.

(இதற்குள், ஜீவா, திராச, சிவீஆர் ஓடோடி வருகிறார்கள்)
மூவரும்: நமஸ்காரம். இந்திர தேவா ! மோஹனம் கேட்டு ஓடோடி
வந்த தங்களை பணிவொடு வந்திக்கிறோம். எம். எஸ்.இன் தும் ரே மோஹனத்தில்
கேட்கிறீகளா?

இந்திரன்: தீர்க்காயுஷ்மான் பவ !! எம்.எஸ். எங்களிடத்திலே தான் இருக்கிறார்.
சாவகாசமாக கேட்பேன். இப்பொழுது இளையராஜாவின் மற்ற மோஹன கீதங்களில்
மனதை ச் செலுத்துவோம்.

ஜீவா, திராச, சிவீஆர்: அப்ப ஆபீஸ் இன்னைக்கு அம்பேல் தான்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

jeevagv said...

//அப்ப ஆபீஸ் இன்னைக்கு அம்பேல் தான்.//
இப்போ ஆபீஸ் போகறத்துக்கு முன்னாலே மறுமொழிகளை பார்க்கிறேன்...இப்போ எல்லாவற்றையும் படித்தால் ஆபீஸ் அம்பேல்தான். சகவாசமா படிக்கிறேன், அதற்குள் இன்னும் பல வந்திவிடும் போலும்!

ஓகை said...

//அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா? //

ஐயோ, இது வஞ்சப் புகழ்ச்சியா? ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க!

G.Ragavan said...

// ஓகை said...
//அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா? //

ஐயோ, இது வஞ்சப் புகழ்ச்சியா? ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க! //

:) நீங்க கோவப்பட்டதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிங்க. மெல்லிசை மன்னருக்காக நீங்க கோவப்பட்டது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. :) இந்தப் பதிவுல நீங்களும் எனக்குத் தொணையா இருக்கீங்கன்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.

jeevagv said...

// ஜீவா போடலம்-னு சொன்னா போட்டுருவாருன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? :-))//
ஆஹா, இப்படியே இழுத்து விட்டு இசை இன்பத்தில நிறைய பதிவுகளை எழுத வைச்சிட்டீங்க.
ஆனா இந்த முறை அது பலிக்காது. ஏன்னா
குருவி வாயை இரண்டாக்கிப் பிளந்த கதையெல்லாம் எனக்குத் தெரியாது.
அதானால, வாசகர் விருப்பமா எடுத்துக்கிட்டு சீக்கிரமா அந்தப் பதிவை தாங்க, ஓகே?

jeevagv said...

//எம்.எஸ். எங்களிடத்திலே தான் இருக்கிறார்.
சாவகாசமாக கேட்பேன். இப்பொழுது இளையராஜாவின் மற்ற மோஹன கீதங்களில்//
கலக்கிட்டீங்க போங்க சூரி சார்!
முதல் மறுமொழிதான் கலக்கல் என்றால், அடுத்தது அதற்கு மேல்!

மற்றபடி, இசை இன்பத்தின் மூர்த்திகளுக்கல்லாம் மூல முழு முதல் மூர்த்தி கண்ணபிரனே!. அடுத்து என்ன ராகம், அடுத்து என்ன ராகம் - இப்படிக்கேட்டே பதிவுகள் எழுத வைச்சிட்டார்! மற்றபடி ராகங்களை கண்டுபிடிக்க தெரியமலே ராகங்களைப் பற்றி எழுதுவது நானாகத்தான் இருக்கும், என்ன செய்வது, குறைகுடம் தானே கூத்தாடும்!

sury siva said...

//மற்றபடி ராகங்களை கண்டுபிடிக்க தெரியமலே ராகங்களைப் பற்றி எழுதுவது நானாகத்தான் இருக்கும், என்ன செய்வது, குறைகுடம் தானே கூத்தாடும்!//
ஜீவா அவர்கள் தன்னை ஒரு தன் அடக்கத்துடன் (in all humility )
குறை குடம் தானே கூத்தாடும் எனச் சொல்லி
" நிறை குடம் நீர் தளும்பல் இல் " எனும் பழமொழியை நினைகூர்ந்திருக்கிறார்.

இதற்கு ஒரு புதிய வ்யாக்யானம் எனக்கு ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது.
ஒருவனுக்கு தனக்கு எல்லாமே தெரியும் எனத் தெரியும்பொழுது, அவன் இந்தப்பக்கம்,
அந்தப்பக்கம் திரும்பாது ஒரு விதமான அகம்பாவத்துடன் ( possibly with some sort of
stiffness if not egoistic )
நடக்கிறானாம். நிறை குடம் என்ன நினைக்கிறதாம் ! குடத்தில் இருக்கும் நீர் குறைந்து விடுமோ என்ற அச்சமோ அல்லது
அடுத்தவர் தான் வந்து மண்டியிட்டு கேட்கட்டுமே என்ற மன நிலையோ ? ஒருவிதமான மேல் நோக்கோடு
நின்றுவிடுகிறதாம்.
ஆனால்,
குறை குடத்தில் உள்ள நீரோ நினைக்கிறதாம். நான் இருப்பதே மற்றவருக்குத்
தெரியவில்லையே ? எப்படித்தான் நான் மக்களுக்கு உதவுவேன் ? சற்றுக் குறைவு தான்
என்றாலும் அதை மற்றவருக்கு ஈயா வாழ்வு என்ன வாழ்வு என நினைத்து,
"நான் இருக்கிறேன், எனை எடுத்து தாகம் தணியுங்கள்" எனக் குதித்துக்குதித்து கூத்தாடிச் சொல்லுமாம்.

( I know that this is possibly lateral thinking or thinking in divergence.)

அதனால் தான் என் மாணவர்களுக்கு எப்போதும் சொல்வேன்:
த‌ன்னிடம் இருப்பது குறைவு தான் என்ற நினைப்பே இல்லாது
அள்ளி வீசுங்கள்.. தனவான் ஆனபின்புதான் தானம் செய்வேன்.
அறிஞர் ஆனபின் தான் பேசுவேன் எழுதுவேன் என்று இருந்தால்
ஒருவேளை நீங்கள் அல்லது நான் தருமம் செய்யாதே, பேசாதே சென்றடைந்தாலும் ஆச்சரியமில்லை.
ஆகவே,
அறிவோ பொருளோ அன்பு கலந்த வார்த்தைகளோ ? எடுத்து வாரி வழங்குங்கள்.
குறைவும் நிறைவும் மனதில் உள்ளது. மண்பாண்டத்தில் இல்லை.
இறைக்கும் கிணற்றில் அல்லவோ நீர் பெருகும் !!

சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://meenasury.googlepages.com/http%3Ameenasury.googlepages.commyhappinessisinmywill

jeevagv said...

//த‌ன்னிடம் இருப்பது குறைவு தான் என்ற நினைப்பே இல்லாது
அள்ளி வீசுங்கள்..//
அது ஏற்றுக்கொள்ள வேண்டியதே, ஐயா!

தி. ரா. ச.(T.R.C.) said...

@k r s மோஹனமான பதிவு.ஆசியா முழுவதும் இணைக்கின்ற ராகம் மோஹனம். தாய்லாந்து நாட்டின் மன்னர் பட்டம் சூட்டும் விழாவில் நாதஸ்வரத்தில் மோஹனம் வாசிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது
மற்றும் சியாம்,கம்போடியா போன்ற நாடுகளிலும் மோஹன ராகம் அவர்களது இசையில் உள்ளது

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Câmera Digital, I hope you enjoy. The address is http://camera-fotografica-digital.blogspot.com. A hug.

கவிநயா said...

எனக்கு ராகம் பத்தில்லாம் ஒண்ணும் தெரியாது.. அருமையான பதிவுன்னு மட்டும் நல்லாத் தெரியுது; கலக்கலான பின்னூட்டங்கள் :)

'மயில்வாகனா வள்ளி மனமோகனா' பாட்டுக்கு பரதம் ஆடியிருக்கேன்; எனக்கு ரொம்பப் பிடிச்சது! 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' இப்பதான் கத்துக்கறேன்; அதனால அவற்றைப் பற்றிப் படிச்சதும் சந்தோஷம் :)

Shrikaanth said...

"கங்கை யமுனை"- பாட்டு மோகனம் கிடையாது. மத்யமாவதிலெ கொஞ்சம் காந்தாரம் கலந்து வந்திருகிறது அழகா தெரியுதே.

சா ரீ. ம ம பா. ரிகரிஸா. ஸனிஸபா
கங்கை யமுனை இங்குதான் சங்----க--மம்

இப்ப்டி இல்லெ ஓடுது.

--ஸ்ரீகாந்த் கி. மூர்த்தி

jeevagv said...

ஆமாங்க ஸ்ரீகாந்த் கி. மூர்த்தி,
மத்தியமதியும் இருக்கு, மோகனமும் இருக்கு - அப்படிச் சொல்லலாமல்லவா!

Shrikaanth said...

ஜீவா
மோஹன ராகம் எங்கேயுமே எனக்கு தென்படலெயே. முழுசா மத்யமாவதி சாயல் தான் இருக்கு.

Dr.V.K.Kanniappan said...

Hallo,I came to know 'Isaiinbam blogspot'through Ananda vikatan.PadiththEn,rasiththEn.
Mohana raaga paadalkal Maharajapuram Ramachandran,MLV.MS.KBS avarkal PaadalkaLuum, Boys cinema Paadal matrum Vellarikkaayum kEttEn,rasiththEn.
All songs are enjoyable.
V.K.Kanniappan

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP