Monday, May 19, 2008

தக தீம் த தீம் தில்லானா!

நமது இந்திய இசையில் பல்வேறு பரிணாமங்களைப் பார்க்கலாம். நடனஇசை, அந்த பல்வேறு பரிணாமங்களுள் ஒன்றாகும். ஒன்றுதானே என்று ஓரமிடாமல், ஓங்கி வளர்ந்த நடனஇசை. நமது பாரம்பரிய மணம் கமழும் அற்புதக் கலையான பரத நாட்டியத்தின் பக்கபலமான இசையும் அதன் மாண்புகளும் தான் என்னே! பல்வேறு "அடவு"களை கைகளில் காட்டி, இசையின் வளைவுகளுக்கு ஏற்ப உடலை வளைத்து, அனைத்து ரசங்களையும் முகத்தில், குறிப்பாக கண்களில் காட்டி, அபிநயம் செய்யும் பரதக் கலைஞரின் பெருமைகள்தான் என்னே!

பத்மினி / சிவ பக்தா / 1954


பாடல்களுக்கு ராகமும் தாளமும் இரு பரிணாமம் என்றால், இன்னொன்றும் இருக்கிறது. அதுவே பாவம் (Bhavam). நமது பாடல்களை பாவபூர்வமாக பார்ப்பதும் சிறப்பானதாகும். மதுரை T.N சேஷகோபாலன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் பாவபூர்வமாக பாடிக்கேட்டுத் திளைத்ததுண்டு. தில்லானா பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை. விறுவிறுப்பும், உணர்ச்சி மயமும் நிறைந்த தில்லானா பாடல்களின் என்ன விசேஷம் என்றால், பாடலில் பாடல் வரிகள் குறைவாக இருக்கும். ஆனால், ஜதி எனப்படும் சொற்கட்டுக்கள் நிறைந்து இருக்கும். அவற்றில் சில : திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம் போன்றவை. பாடல் வரிகளுடன் சேர்ந்த தில்லானாக்களை, கச்சேரிகளிலும் தனியான பாடல் உருப்படியாகவே பாடும் வழக்கமும் உள்ளது. அப்படிப்பட்டவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிடும் இந்த தில்லானாவில் பாடல் வரிகள் இவ்வளவுதான்:

நின்னையே எண்ணி நிதம் ஏங்கிடும்

என்னை ஆளவந்த மன்னா, மணிவண்ணா

மனம் கொள்ளை கொண்ட கண்ணா - இனியுன்னை

கனவிலும் நனவிலும் நான் பிரியேனே!
என்ன ராகம்? மதுவந்தி
யார் இசையமைத்தது? வேற யாரு, தில்லானா என்றவுடன் நினைவுக்கு வரும் நம்ம லால்குடி சார் தான்.
தமிழகம் தந்த தன்னிகரில்லாத இசை மேதை அல்லவா பத்மஸ்ரீ திரு.லால்குடி ஜெயராமன்!
நிறைய தில்லானாக்களை அவர் இசையமைத்திருக்கிறார். பட்டியலுக்கு விக்கிபீடியாவில் இங்கு பார்க்கலாம்.

இதே தில்லானாவை சிதாரில் வாசித்துக் கேட்கலாமா? இங்கே.

இங்கே கேளுங்கள் லால்குடி சாரின் இன்னொரு தில்லானா - ரேவதி ராகத்தில்:
திருமதி.விசாகா ஹரி பாடிட:

கோலமுருகனை காண எண்ணி

காலமெல்லாம் காத்திருந்தேன்

வேலனோ என்னை ஏனோ மறந்தான்

ஜாலமோ, என் காலமோ அறியேன்!

லால்குடி சார், தில்லானாக்களைக் கொண்ட இசைத்தொகுப்புகளையும் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று "The Dance of Sound" (1980 இல்) என்கிற தலைப்பில். அந்த தொகுப்பில் தேஷ், த்வஜாவந்தி, ஹமீர் கல்யாணி, கானடா, காபி, கதன குதூகலம், மோகனகல்யாணி, பகடி ஆகிய ராகங்களில் அமைந்த தில்லானாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான சுட்டிகள்:

1. மோகனகல்யாணி (ஆரோகணத்தில் மோகனமும், அவரோகணத்தில் கல்யாணியும் அமையப்பெற்ற ராகம்!)
2. த்வஜாவந்தி
3. ஹமீர் கல்யாணி
4. தேஷ்
5. கதனகுதூகலம்
6. கானடா
7. காபி
8. பகடி

24 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தில்லானா பதிவு அருமை ஜீவா!
Short Treatise-ஆ?

இசை இன்பத்தில் நடனம் வந்திருச்சே!
அது ஆபீசு! வீட்டில் இருந்திருந்தா நடனப் பின்னூட்டம் இட்டிருப்பேன்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தில்லானா பாடல்களின் என்ன விசேஷம் என்றால், பாடலில் பாடல் வரிகள் குறைவாக இருக்கும். ஆனால், ஜதி எனப்படும் சொற்கட்டுக்கள் நிறைந்து இருக்கும்//

ஓ...
அதான் சந்தக் கவிகளை (திருப்புகழ் மற்றும் சில பாசுரங்களை) எல்லாம் தில்லானா-ன்னு வகை செய்யறாங்களா?

//திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம் போன்றவை//

தளாங்கு, தகதிமி என்பது எல்லாம் கூட இவ்வகை தானா?

//பல்வேறு "அடவு"களை கைகளில் காட்டி//

அடவு-ன்னா என்ன ஜீவா?

கவிநயா said...

அடவுன்னா step. பரதத்துல (கலாட்சேத்திரா ஸ்டைல்ல) 64 அடவுகள் இருக்கு. அவைதான் அடிப்படை. அதை முதல்ல கத்துக்கிட்டப்புறம்தான் அலாரிப்புல தொடங்கி நடனங்கள் கத்துக்குவோம்.

உங்க பதிவை முழுமையா படிச்சுட்டு, மறுபடி வரேன், ஜீவா :)

கவிநயா said...

வந்துட்டேன் :) பரதத்தின் அருமைகளை நீங்க சொல்லும்போது சந்தோஷமா இருக்கு, பரதக் கலைஞர்ங்கிற முறையில. உங்களுக்கு மிக்க நன்றி!

இளமையான பத்மினி வெகு அழகு. அவங்க கண்கள்ல இருக்க ஜொலிப்பு மிக அரிது; அழகு.

தில்லானா பார்ப்பதற்கும் விறுவிறுப்பு, ஆடுவதற்கும் நிறைய stamina வேணும். நீங்க குறிப்பிட்ட லால்குடி அவர்களின் தில்லானாக்கள் அருமை. அவற்றில் மோகனகல்யாணிக்கு விதவிதமா நடனம் அமைச்சு நிறைய தரம் ஆடியிருக்கோம் :) கானடாவும் ஆடுவதற்கு அருமையாய் இருக்கும். எடுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றிகள், ஜீவா!

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆமாங்க இரவி,
ஜதி சொற்கட்டுக்கள், இதுபோல இன்னும் பலவும் கொண்டன. மிருதங்கம் போன்ற தாளக் கருவிகள் வாசிப்பதற்கும் இந்த சொற்கட்டுக்கள்தான் அடிப்படை. இவற்றுக்கும் 'மாத்திரை' எனப்படும் அளவு உண்டு. அதற்கேற்ப நிறைய கலவைகளும் உண்டு!

கவிநயா மேடமே சொல்லிட்டாங்க அடவு பற்றி.
மேலும் விவரிக்கணும்னா - பரதத்தில் வரும் ஒவ்வொரு அசைவுக்கும் (கால், கை முத்திரை, கண் அசைவு, கழுத்தசைவு) ஒரு அடவு என்கிற கணக்கினை சொல்கிறது நாட்டிய சாஸ்திரம். இவை பாணிக்கு பாணி சற்றே மாறுபடும் என்றாலும், அடிப்படையில் ஒத்து இருக்குமாம். ஒரு சில அடவுகளின் கோர்வை ஜதி என வழங்கப்படுமாம். சிதம்பரம் கோவிலில் 108 அடவுகள் செதுக்கப்பட்டுள்ளதாக முன்பொருமுறை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள் சொல்லிக் கேள்வி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

///சந்தோஷமா இருக்கு, பரதக் கலைஞர்ங்கிற முறையில.//
ஆகா, பரதக் கலைஞரே வந்து பதில் சொல்லிடீங்க, நன்றி கவிநயா.
//தில்லானா பார்ப்பதற்கும் விறுவிறுப்பு, ஆடுவதற்கும் நிறைய stamina வேணும்.//
நல்லா சொன்னீங்க, பரதமே ஒரு யோகம் அல்லவா.

sury said...

தில்லானாவைக்கேட்டாலோ அல்லது பாடினாலோ 'தில்' ஆஹா ஆஹா என குதூகலமாகிவிடுகிறது.
எந்த ஒரு மன நிலையிலிருந்தும் ஒரு பரவச ஆனந்த நிலைக்குக் கொண்டுவரும் ஸ்வபாவம் தில்லானாவுக்கு இருக்கிறது.சொற்கட்டுகளிலே ஸ்வரங்களை ஒரு கற்பனை வளத்துடன் இணைககும் திறன் அலாதிதான். லால்குடி, பால முரளி ஆகிய வித்வான்கள் பல்வேறு ராகங்களில் தில்லானா அமைத்துள்ளனர். மஹாராஜபுரம்
அமைத்துள்ள இந்த தில்லானாவையும் கேட்டுப்பாருங்கள்.

http://www.imeem.com/people/4ZEdp8r//music/6NJpck8R/maharajapuram_santhanam_thillana_bhaagyashri/

sudha Reghunathan sings a Thillana in Desh
http://www.youtube.com/watch?v=gGcXPHi2JsA

தில்லானாவை, இசையின் அங்கமாகவோ அல்லது பரதத்தின் அங்கமாகவோ
எண்ணுவதைவிட, அதன் தனித்துவத்தை ஆராயும்போது, அந்தச் சொற்கட்டுகளிலே உள்ள‌
rhythmic movements ல் மனதைச் செலுத்தினால், ஏற்படும் அனுபவம் அற்புதம்.
ஆனந்தம்.
தில்லானா..தில்லானா... தித்திக்கின்ற தேனா என்ற பாட்டு சொல்வது போல
ஒரு நல்ல கச்சேரி ( இசையோ அல்லது நாட்டியமோ ) முடிவில் ஒரு தில்லானாவை
கேட்பது என்பது ஒரு தஞ்சாவூர் சாப்பாட்டின் முடிவில் இனிய பலாச்சுளைதனை
தேனில் தோய்த்து சுவைப்பது போல. ருசியோ ருசி. சுகமோ சுகம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

sury said...

ivide athe sollum


http://menakasury.blogspot.com/2007/08/bharata-natyamindian-

classical-dance.html

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க சூரி ஐயா, தாங்கள் குறிப்பிட்டுள்ள தேஷ் தில்லானா சிறப்பாக இருந்தது. தில்லை நடனமும் சேர்ந்து இருப்பது விசேஷம்!
தில்லானா இல்லாத கச்சேரியா என்று சொல்லும் அலவிற்கு தில்லானாவின் முக்கியத்திவம் உயர்ந்திருக்கிறது!

கவிநயா said...

//முடிவில் ஒரு தில்லானாவை
கேட்பது என்பது ஒரு தஞ்சாவூர் சாப்பாட்டின் முடிவில் இனிய பலாச்சுளைதனை
தேனில் தோய்த்து சுவைப்பது போல.//

:)) தேஷ் தில்லானா அருமையாய் இருந்தது! பரதம் பற்றிய செய்திகள் உங்கள் வலைப்பூவில் சிறப்பாக இருந்தன. நன்றிகள்!

ஜீவா (Jeeva Venkataraman) said...

பிற்சேர்க்கை:
மோகனகல்யாணி தில்லானாவின் நோட்ஸ் இங்கே கிடைக்கிறது.

கவிநயா said...

சுட்டி உடைஞ்சிருக்குங்க ஜீவா! :)

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆ, மறுபடியும் உடைந்து விட்டதா!, சுட்டியதற்கு நன்றி!
மீண்டும் முயற்சிக்கிறேன். இப்போ இங்கே பார்க்கலாம்.

ஜீவி said...

இந்த வலைப்பூவை ஆக்கியோர்களை ஆனந்தவிகடனும் கவர்ந்திழுத்திருக்கிறது!..இந்த வார ஆனந்தவிகடனில் (28-5-2008) இந்த வலைப்பூ பற்றி ஒரு பொதுவான குறிப்பு கொடுத்திருக்கிறார்கள். இப்படி:

"இசைப் பிரியர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது இந்த வலைப்பூ.
இசை ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த வலைப்பூ, கர்னாடக சங்கீத ராகங்கள் குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. கூடவே,நாம் கேட்டு ரசித்த சினிமா பாடல்களில் உள்ள ராகம் பற்றிய சுவாரஸ்யமான குறிப்போடு, அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கவும் முடிகிறது!"

உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்,
பிடியுங்கள்!

VSK said...

எந்த ஒரு கச்சேரியும் முழுமை பெறுவதே தில்லாவினால்தான்!

இதைப் பாடகர்களும் உணர்ந்தே இதை[யாவது!!] சிறப்பாகப் பாட முயற்சிக்கிறார்கள்!

ஜெயஸ்ரீயின் தில்லானா மிக மிக அற்புதம்!

பின்னால் தம்பூரா வாசிப்பவர்களின் முகபாவத்திலிருந்தே இதை உணரலாம்!

மற்ற சுட்டிகள் முழுதும் இன்னமும் கேட்கவில்லை.
சேமித்துக் கேட்டுவிட்டு, மீண்டும் வருவேன்!

மிக்க நன்றி ஐயா!

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆகா ஜீவி ஐயா,
இனிப்பான செய்தியைச் சொன்ன தங்கள் செவிகளில் இனிப்பான இசையை இடவேண்டும்!
ஆனந்த விகடனுக்கு நன்றி.

இசை ரசிகர்கள் KRS, திராச, சுதா பிரசன்னா, CVR ஆகியோருக்கும் இந்த சமயத்தில் நன்றிகள் என் சார்பில். சில காலம் விட்டுப் போயிருந்தாலும், மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க VSK ஐயா,
//
ஜெயஸ்ரீயின் தில்லானா மிக மிக அற்புதம்!//
நான் முதன் முதலில் கேட்ட தில்லானாவும், ஜெயஸ்ரீ அவர்கள் பாடித்தான்.
"சீரோங்கும் தென்பழனி மலைமேவும் கோவலா..." என்கிற அந்த தில்லானா வரிகள் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
நிதானமாக மற்ற சுட்டிகளையும் கேட்கவும். குறிப்பாக மோகனகல்யாணி தில்லானா. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்!

கவிநயா said...

//இந்த வலைப்பூவை ஆக்கியோர்களை ஆனந்தவிகடனும் கவர்ந்திழுத்திருக்கிறது!//

அரிய பணி தொடர, குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

இளவயசு பத்மினி ஹைய்யோ....சூப்பர்.

கூடவே எனக்கு ஒரு போனஸ் கொடுத்துட்டீங்க.

அதான் கண்ணாம்பா தம்புரா மீட்டுவது.

எங்க அம்மா அப்படியே கண்ணாம்பாதான்.

அம்மாவின் ஃபோட்டோ கூட நம்மகிட்டே இல்லைங்க. அதான் பழைய படங்கள் குறிப்பாக் கண்ணாம்பா நடித்தப் படங்களைத் தேடித்தேடிப் பார்ப்பேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க துளசி மேடம்!
நாட்டியப் பேரொளியும் தங்கள் அம்மாவும் இந்தப் பதிவை நன்றாக அலங்கரித்துள்ளார்கள், அவர்களுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

Excellent post. I love your blog. Thank you for posting.Always look forward to reading your blog. Keep posting.

Ramya

karthi said...

Instead of Dwijavanthi Thillana of Lalgudi, the song Akhilandeswari is played.In the commentary about "Theeratha Villaiyattu Pillai","Vanna Puthuchchelai" should have Moonu Suzhi nna instead of rendu suzhi na as appearing.
karthi

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க ரம்யா, எப்போதும் வருக!

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க கார்த்தி,
த்வஜவந்தி தில்லானா பற்றி சுட்டிக்கு பதிலாக அகிலாண்டேஸ்வரி பாடல் தவறாக இடம்பெற்று விட்டதுதான். சுட்டியமைக்கு நன்றிகள்.
த்வஜவந்தி தில்லானாவின் சுட்டி கிடைக்கிறதா பார்க்கிறேன்.
தீராத விளையாட்டுப்பிள்ளை பாடலிலோ - பாரதி 'வன்னப் புதுச்சேலை' என்றுதான் எழுதி இருக்கிறார்.
வன்னம் - என்றாலும் 'நிறம்' தானுங்க!
பாரதி இன்னொரு இடத்திலும் வன்னம் என்கிறான்:
"வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா."

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP