Sunday, June 01, 2008

ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவு!

ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவினை அறிமுகப்படுத்தியதோடு, முத்தாய்ப்பாய் இரண்டொரு வரிகளிலும் சொல்லி இருக்கிறார்கள், விகடனுக்கு நன்றி!:

"இசைப் பிரியர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது இந்த வலைப்பூ. இசை ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த வலைப்பூ, கர்னாடக சங்கீத ராகங்கள் குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. கூடவே,நாம் கேட்டு ரசித்த சினிமா பாடல்களில் உள்ள ராகம் பற்றிய சுவாரஸ்யமான குறிப்போடு, அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கவும் முடிகிறது!"

இந்தச் செய்தினை முதன்முதலில் இவ்வலைப்பூவிற்கு பின்னூட்டமாக தந்த திரு.ஜீவி அவர்களுக்கு நன்றி. அடுத்து விகடன் தளத்தில் இருந்த இந்தச் செய்தி வந்த பக்கத்தினை படமாகத் தருவித்திருந்தார் கே.ஆர்.எஸ். இதோ அந்தப் படம் உங்களுக்காக:(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இசை இன்பம் - இந்த வலைப்பதிவினை தொடங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கும், உறுதுணையாய் பல இசை இடுகைகளைத் தந்துள்ள இதர வலைப்பதிவர்களான - தி.ரா.ச, சி.வி.ஆர், சுதா பிரசன்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது பல இடுகைகளில் தங்கள் கருத்துக்களையும், திருத்தங்களையும், மேலதிக செய்திகளையும் மறுமொழிகளாகத் தந்து வழிநடத்திய திரு.சிமுலேஷன், திரு.டுபுக்கு, திரு.சுப்புரத்தினம், திரு.ஓகை மற்றும் ஏனைய பலருக்கும் நன்றிகள். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து இந்த வலைப்பதிவிற்கு வந்து படித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

இசை என்பது ஒரு பெருங்கடல். அதைப்பற்றி என்றென்றைக்கும் எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எத்தனையோ தலைப்புகள் உள்ளன. எனக்குத் தோன்றியவற்றில் சில:
* தமிழிசை : வரலாறு, பண்கள் மற்றும் அவற்றிற்கும் ராகத்திற்கும் உள்ள தொடர்பு, பண்டைய தமிழிலக்கியங்களில் இசைக் குறிப்புகள்
* தமிழிசை வல்லுனர்கள் : சமயக் குரவர் நால்வர், தமிழ் மூவர், ஆழ்வார்கள், ஏன் இன்றைய திரை இசை அமைப்பாளர்கள் வரையிலும்.
* மரபிசை : பலநூறு இராகம், பல்வேறு தாளம், பலரச பாவம்.
தியாகராஜரின் மின்னும் ராக ரத்தினங்கள் பலப்பல கொட்டிக்கிடக்கு. இன்னும் எத்தனை எத்தனை கவிகள், எத்தனை எத்தனை உன்னத படைப்புகள்!
* இசைக்கருவிகள்
* இசை நாடகம், இசை நாட்டியம், வில்லுப்பாட்டு, ஹரிகதை காலட்சேபம் இன்னும் பல.
* பல வகைப் பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள்
* மேலை நாட்டிசைத் தாக்கங்கள், தொகுப்பிசை
* சுவையான இசை நிகழ்வுகள்

வாசகர் உங்களுக்குத் தோன்றுபவற்றையும் சீட்டில் எழுதிச் சேர்த்து விடுங்கள்!

வாசகராக மட்டுமே நீங்கள் இருக்க வேண்டியதும் இல்லை.
நீங்களும் இசை இன்பத்திலோ உங்கள் பதிவிலோ எழுதலாம். இதற்கு ஏதோ பெரிய இசை அறிவெல்லாம் தேவையே இல்லை. சாதாரண இசை ரசனை போதும். எனக்குப் பிடித்த இசை, ஏன் பிடிக்குது என எழுதிப்போட எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ன, இசைக்க இறங்கிட்டீங்களா?

14 comments:

மதுரையம்பதி said...

ஜீவா, கே.ஆர்.எஸ், சீவீயார், திரச, DD உங்கள் எல்லோருக்க்கும் வாழ்த்துக்கள்...

இந்த வலைப்பூவால் நல்ல பல பாடல்களை கேட்கப் பெற்றவன் என்ற முறையில் எனது நன்றிகளும் கூட :)

ஆ.கோகுலன் said...

ஜீவா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
நாட்டார் பாடல்களும் ஒரு வகை இசைவடிவம்தானே.
சிறப்பான ஆர்வமான முயற்சி. தொடருங்கள்.. மீண்டும் வாழ்த்துக்கள்.

கவிநயா said...

இசை இன்பம் குழுவினருக்கு வாழ்த்துகள்!

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க திரு.மௌலி, தங்கள் தொடர் ஊக்கத்திற்கும் நன்றிகள்!

vasans valaipookkal said...

naanum vikatananil paarthu than
therithu konden. Isaipiriyaraana yen appavum rasithar
siva

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க கோகுலன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//நாட்டார் பாடல்களும் ஒரு வகை இசைவடிவம்தானே. //
நிச்சயாமாக. நாட்டுப்புறப் பாடல்கள் நமது தமிழ்மண்ணின் மணத்தை பறை சாற்றும் இசை வடிவங்கள். அவை பற்றியும் நிறைய எழுத வேண்டும்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க கவிநயா, வாழ்த்துக்களுக்கு நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க வாசனின் வலைப்பூக்கள்,
தங்கள் புதிய வலைப்பதிவுக்கும் வாழ்த்துக்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி!

இசை மேன்மேலும் இன்பம் தர வாழ்த்துக்கள்!

ஜீவாவுக்கு அடியேன் தனிப்பட்ட நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திரை இசையில் நாட்டுப்புறப் பாடல்கள் என்பது பற்றி தனியான ஒரு தொடர் தொடங்கும் என்று மகிழ்ச்சியான இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)

Kameswaran said...

Through the introduction from
Ananda Vikadan, I visited this spot and enjoyed. Useful to all music lovers like me. Best wishes to all
V. Kameswaran, Trichy

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் டீம் ;-)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் டீம் ;-)

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க காமேஸ்வரன், தொடர்ந்து வருக, இசை இன்பம் தனை நுகர்க!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP