Sunday, May 20, 2007

கணேச கானங்கள்



சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.

ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்ப்டித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன்.


ஆதாலால், வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன்.

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.

பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா.

வாதாபி கணபதிம் - நித்யஸ்ரீ மஹாதேவன்

இந்த பாடலில், தீக்ஷிதர், 'ஹம்சத்வனி ஹே பூஷித ரம்பம்...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!

தமிழில் பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் கணபதி துதிப் பாடலாகும்.

சுதா ரகுநாதன் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:

Get this widget | Share | Track details


ஹம்சத்வனி ராகம் கல்யாணி ராகத்தைப்போல் மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!

கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.

Get this widget | Share | Track details

'காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ' பாடலில் ஒரு வரி வரும்... 'இசையின் பயனே இறைவன் தானே' என்று. இசையின் பயன் மட்டுமல்ல.. இசையே அவன் அருளால்தான்!

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாவ்,
ஜீவா...ஆரம்பமே கலக்கல்!

//உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால்//

அப்படியே அள்ளிக் கொள்வோமே!
அதன் கையில் உள்ள பெயிண்ட் நம்ம மூஞ்சியிலும் ஒட்டிக் கொள்ள,
வர்ணச் சிதறலும் ஒரு இன்பம் தானே!
பஜனைப் பாடல்களும் வர்ணச் சிதறல்கள் தான்! மனம் சிதறாது காப்பவை!

வாதாபி கணபதிம் அருமை!
ஹம்ச த்வனி = பொருள் சொல்லுங்களேன்! அப்படியே அன்ன நடையா?

CVR said...

முழு முதற் கடவுளின் துணையுடன் முதல் பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்!!
வாழ்த்துக்கள்!!

சுதா ரகுனாதனின் இசையில் திளைத்துக்கொண்டு இருக்கின்றேன்.
தங்கள் வரவு நல்வரவாகுக!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கருணை செய்வாய் கஜராஜ முக - பாபநாசம் சிவனின் கீர்த்தனை அப்படியே விநாயகர்
ராஜ நடை போட்டு வருவதை,
ராக நடையில் போட்டுக் காண்பிக்கிறார்!

சீர்காழியாரின் "ஒரு மணிக்கு ஒரு மணி" - கச்சேரி நடையில், கலக்கல் போங்க!

பெரும்பாலும் பல இசை நிகழ்ச்சிகளும் ஹம்சத்வனி/நாட்டையில் தான் துவங்குகின்றன!

அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டு
அழகான கணேச கானம் தந்த ஜீவா - உங்களுக்கு என் நன்றி...வாழ்த்துக்கள்!

jeevagv said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.

அன்ன நடை சின்ன இடை பார்த்து ஹம்சத்வனி பொருள் அறியாமல் போனேனே, அடடா ;-)

CVR: வாழ்த்துக்களுக்கு நன்றி!
முழு முதற் கடவுள்
இல்லாமல் செல்லாது அல்லவா!

Anonymous said...

Question: The song Vatapi Ganapathim - is this on the Vatapi - the Chalukya capital?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Suji said...
Question: The song Vatapi Ganapathim - is this on the Vatapi - the Chalukya capital?//

ஆமாங்க சுஜி.
முத்துசாமி தீட்சிதர், நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டன்குடி என்னும் பாடல் பெற்ற தலத்துக்கு வந்து தரிசனம் செய்தார்.
அங்குள்ள விநாயகர் பெயரே வாதாபி கணபதி!

சாளுக்கிய தலைநகர் வாதாபி-இல் (Badami என்றும் மருவியது) இருந்த விநாயகர் சிலை அது; போரில் பல்லவர்கள் வெற்றி பெற்று, சிறுத்தொண்டர் நாயனாரால் கொண்டு வந்து பிரதிட்டை செய்யப்பட்ட சிலை அது.

அதனால் வாதாபி கணபதிம் பஜே என்று தீட்சிதர் பாடினார்.

jeevagv said...

ரவி,
திருவாரூர் கணபதிக்கும் வாதாபி கணபதி என்ற்றொரு பெயருண்டாம். அவரைத் தான் தீக்ஷிதர் இந்த பாடலில் பாடுகிறார் என்றொரு கருத்தும் உண்டு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

இந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP