Tuesday, May 08, 2007

சினிமா காரம் "காப்பி" - பாகம் 2

அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே (டேய்!!! அடங்குடா!! )
சரி சரி!!!

அன்பார்ந்த வலையுலக நண்பர்களே (ஹ்ம்ம் !! அது!!)
போன பகுதியை பார்த்து,படித்து,பின்னூட்டங்கள் இட்ட அனைத்து அன்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
போன பகுதிக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த பின்பு உங்களிடம் இந்த தலைப்பின் மேல் உள்ள ஆர்வமும்,அறிவும் கண்டுகொண்டேன். பல பேர் தனக்கு தெரிந்த இதர காபிகளையும், இன்ஸ்பிரேஷன் மற்றும் காபியில் உள்ள வேறுபாடு பற்றி தனக்கு தெரிந்த தெளிவான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பெயர் என்னமோ காப்பின்னு வெச்சாலும் கூட போன தடவை பார்த்த உதாரணங்கள் எல்லாம் இன்ஸ்பிரேஷன் வகையை சார்ந்ததே தவிர,அவற்றை முழுமையான காபி என்று சொல்ல முடியாது. ஆனால் அது போன்ற ஈயடிச்சான் காபி வகையை சேர்ந்த சில பாடல்களை இந்த பகுதியில் காணலாம்.

S.A.ராஜ்குமார் :
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தமிழ் திரையுலகில் அமைதியாய் நுழைந்தவர் S.A.ராஜ்குமார். எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கிறது,படத்தில் ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என விமர்சனங்கள் இருந்தாலும் அமைதியான,ஆரவாரம் இல்லாத மெல்லிய பாடல்களை சத்தமில்லாமல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.(இந்த பதிவில் அவரின் ஒரு பாடலின் சுட்டியை தருவதற்கு பதிலாக,அதே படத்தின் இன்னொரு பாடலின் சுட்டியை முதலில் போட்டுவிட்டேன்!! அந்த அளவுக்கு அவரின் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கும்!! :-))

காபி அடிப்பதில் ஜாம்பவான்கள் சிலரின் (ஒருவரின்?!) மேலேயே மக்களின் கவனம் இருந்ததால்,இவரின் இசையில் காபிகள் உள்ளனவா என்பதை பற்றி எல்லாம் மக்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை. ஆனால் இவரின் மேல் உள்ள என் மதிப்பை புரட்டி போட்ட படம் "வானத்தை போலே". இந்த படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றன ஆனால் என் கவனத்தை பெற்ற ஒரு பாடல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" எனும் பாடல்.

ஏன் என்று கேட்கிறீர்களா ?? ஏன் என்றால்,இது "Daag - the fire" எனப்படும் இந்தி திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் அச்சு அசல் காபி. இதை கேட்ட பின் அட பாவிகளா தேவா மட்டும் தான் இப்படி என்றால் அவருக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டாரே என்று நினைத்துக்கொண்டேன்.
இது கூட பரவாயில்லை ஆனால் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு.
என்னது??? பாகிஸ்தானா??? ஏன் காபி அடிக்க வேறு பாடலா கிடைக்கவில்லையா?? என்று தோன்றுகிறதா?

பாகிஸ்தானில் "ஜுனூன்" என்று ஒரு இசைக்குழு உண்டு. இவங்களுக்கும் நம்ம ஊருல மெகா சீரியல்களின் அட்டகாசங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்கன்னா,நீங்க பாட்டுக்கு எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோன்னு யோசிக்க ஆரம்பிச்சுராதீங்க!! :-)
அவர்களின் பாடல்கள் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் பெறும் புகழ் பெற்றவை. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகள் நடந்த சமயத்தில் அவர்கள் இந்தியா வந்து மேடை கச்சேரிகள் செய்த கதைகள் எல்லாம் உண்டு.

அந்த குழுவின் "சய்யோனி" எனும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது!! சூஃபி இசை ரகத்தில் மேற்கத்திய இசையை அழகாக கலந்து ஒரு விதமான சோகத்தின் ஊடேயும் விறுவிறுப்பான மன நிலையை அளிக்கவல்ல அருமையான பாடல் அது. இசைக்கு மயங்காதோர் எவரும் உண்டோ என்பது போல் பாகிஸ்தானிய இசை திறமை பற்றி எனக்கு அறிமுகப்படுத்திய அழகான பாடல் அது. அருமையாக படப்பிடிப்பும் செய்யப்பட்டிருந்ததால் அந்த பாட்டு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. (நடுவில் வரும் கிதார் அலாபனை அற்புதம்!! :-))

சிறிதே தமிழ் திரை இசை பாணியில் மாற்றப்பட்டது போல் தெரிந்தாலும் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் வரும் "மேகமாய் வந்து போகிறேன்" எனும் பாடலில் ஈயடிச்சான் காபி அடித்திருப்பார் S.A.ராஜ்குமார்
நீங்களே கேட்டு பாருங்களேன்!! :-)

S.A.ராஜ்குமார் "மேகமாய் வந்து போகிறேன்" : படம் "துள்ளாத மனமும் துள்ளும்"




Sayonee - Junoon




இதில் இன்னொரு தமாஷ் என்னவென்றால் இதே பாட்டை நம்ம தேவா சார் தனக்கே உரிய பாணியில் இன்னொரு முறை காபி அடித்திருப்பார்.
"கண்ணெதிரே தோன்றினாள்" எனும் திரைபடத்தில் வரும் "சலோமியா"
எனும் பாடலில் தான் இந்த கூத்து நடந்திருக்கும்!! :-)
தேவாவா கொக்கா?? :P


ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!
இப்பவே கண்ணை கட்டுதே,இதுக்கு மேல எழுதினா இந்த பதிவு தாங்காது. அடுத்து தேவாவை பற்றி வேற எழுத போறேன். அதனால அதை தனி பதிவாத்தான் ஆரம்பிச்சாகனும்!!!
அடுத்த காபி பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து நன்றியுடன் விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!

வரட்டா?? :-)

15 comments:

வெட்டிப்பயல் said...

இது அநியாயம்...

எங்க தேவாவை இன்னும் சீனுக்கே கொண்டு வரல...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR

//திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு//

அட, காபியும் ஒரு திரவம்/திரவியம் தானேப்பா! :-)
அதான் திரை கடல் ஓடி தேடறாங்க!
இதுக்கெல்லாம் நீங்க டென்சனானா எப்படி?

சரி ராஜ்குமாரை என்ன வேணும்னா சொல்லிக்குங்க!
ஆனா
தேனிசைத் தென்றலை
காபியிசைத் தென்றலாக
ஆக்கும் உங்க முயற்சி பலிக்காதுங்கோ!

நல்லா பாருங்க!
"சய்யோனி" என்ற சொல்லை
"சலோமியா" என்று மாற்றித் தான் போட்டுள்ளார் எங்க தேவா!
ஸோ, இது ஈயடிச்சான் காபி என்று சொல்வதை நாங்கள் வன்மையாக் கண்டிக்கறோம்! :-)

Anonymous said...

//வெட்டிப்பயல் said...
இது அநியாயம்...

எங்க தேவாவை இன்னும் சீனுக்கே கொண்டு வரல... ///

ஏன் தேவா மேல இத்தனை கொல வெறி!

Anonymous said...

//ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!
இப்பவே கண்ணை கட்டுதே,//

எனக்கும்தான்.ராஜ்குமாரும் ஒரு copycat ன்னு எனக்கு இப்போதான் தெரியுது.

துளசி கோபால் said...

S.A.ராஜ்குமார் பாடல்களில் இந்தி சினிமாவில் நிமிட்டுக்கு நிமிட்டு வரும்
'ஆஆ ஆஅ ஆஆஆ....'ன்னு ஒரு கோரஸ் படம் முழுக்க வந்து 'போதுண்டா சாமி'ன்னு
ஒரு வழி பண்ணிரும். ரீ ரிக்கார்டிங்கே எதாவது 'சத்தம்' இருந்தே தீரணும்முன்னு இவுங்க
ஒரு நியதி வச்சிருக்காங்க (-:

ஆமாம்........ வேதா ன்னு ஒரு இசை அமைப்பாளரைப் பத்தித் தெரியுமா?
நீங்க பிறக்காத காலக்கட்டமா இருக்கலாம்:-))))))))

Karthikeyan Rajasekaran said...

thalaiva,

ezhudhuvadhai tharkkaaligama niruthi vechu irundhean indha padhippa paartha odaney ezhudhanumnnu thonuchu...

neenga sonna thullaadha manamum thullum padath'la varra "Megamaai vandhu pogirean vennila unnai thedinean.." endra paadaley "junoon'in sayyoni" padalai thaluvi irundhaa pola thonuchu...

"idhula innisai paadi varum" paadal epdi vandhadhunnu theriyala...

iruppinum

"irubhadhu kodi nilavagul koodi" paadal ennai migavum kavarndha paadal....

adhu mattumindri....

S.A Rajkumar'in aarambha kaala paadalgal migavum arumaiyaaga irukkum..

udhaaranamaaga "chinna poovey mella pesu" endra padathil anaithu paadalgalum .Sa.Rajkumar avargal isa amaithu vetri petra paaadalgal. "yea pulla karuppayi ulla vandhu paduthai.." endra paadalai sondha kuralail paadi irundhaar endru ninaikkirean....

idhil innum oru suvaiyaana thagaval ennavendraal....

tharpodhu pala padangalukku vetrigaramaaga isai amaithu kondirukkum Vidyasagar avargal indha padathil. S.A .Rajkumar avargalukku thunai isa amaippaalaraaga paani aartri irukkiraar.... :)

CVR said...

@வெட்டி
பொறுமை எருமையினும் பெரிது தலைவா!! :-D

@KRS
சொல்லின் செல்வரே!!!
வஞ்சப்புகழ்ச்சி அணியில வக்கனையாக வாருகிறீர்கள் போங்கள்!!

@துர்கா
ஆமாம் அக்கா,எனக்கும் கூட S.A.ராஜ்குமார் எல்லாம் காபி அடிப்பார் என்று ரொம்ப நாளாக தெரியாது

@துளசி
தெரியும் டீச்சர். அவரின் "ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே" மற்றும் "பூம் பூம் பூம் மாட்டுகாரன்" போன்ற பாடலகள் எல்லாம் காபி என படித்திருக்கிறேன். அவரை பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது என்பதால்,அதை பற்றி எழுதவில்லை.

@கார்த்தி!!
ஆஹா!!! மிக்க நன்றி தலைவா!! சுட்டியை மாற்றி விட்டேன். அவரின் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா!! அதான் குழம்பி விட்டேன்!! :-)

MyFriend said...

ராஜ்குமாரின் மெல்லிய இசைக்கு நானும் ஒரு ரசிகைதான்..

ஆனால், என்ன பண்றது!! இவரின் காப்பி குடிப்பரில்(!) ஒருவர்தான்..

MyFriend said...

சி.வி.ஆர்,

ஒரு suggestion..

இங்கே வெட்டியை போல தேவாக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு போல..:-P

அதனால் இவரை பற்றி கடைசியாக சொல்லுங்கள். (இவர்தானே winner! :-P)

இவருக்கு முன்னே ஹரீஸ், யுவன், ஸ்ரீகாந்த் தேவா என்று பல பேர் காப்பி அடித்த விஷயங்களை எழுதுங்கள். தேவாவை பற்றி எழுதவேண்டுமானால் அதுவே ஒரு தொடராய் எழுதும் அளவுக்கு அது நீளும்.. :-))

CVR said...

@மை ஃபிரண்ட்
தேவாவிற்கு இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருப்பாங்கன்னு எனக்கும் தெரியாம போச்சு!! :-)
தேவாவை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் என்று ஏற்கெனெவே சொல்லி விட்டேனே!!
பார்க்கலாம்!! :-)

SathyaPriyan said...

சூஃபி இசை பற்றி சாரு நிவேதிதா பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். தங்களின் இரு பதிவுகளையும் படித்து விட்டேன். நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள்.

Readers எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதை தனி மடலில் தெரிவிக்க முடியுமா? பல பதிவுகள் படிக்க இயலாமல் போகின்றன.

CVR said...

@சத்தியப்பிரியன்
வாங்க சத்தியப்பிரியன்!! வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)
கூகிள்ல் ரீடரை பற்றி நம்ம ஜி ஒரு அருமையான பதிவை போட்டிருக்காரே!!


http://veyililmazai.blogspot.com/2007/03/40-google-reader.html
போய் பாருங்க! ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்!! :-)

ulagam sutrum valibi said...

ஏன்கண்ணு எதையும் விட்டுவைக்கிலனு சொல்லு
இப்ப தான் ஒவ்வென்னா பாக்கிரேன்.

G.Ragavan said...

சிவிஆர், எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் நன்றாகவே இருக்கும். முடிந்த வரையில் சுயமாகவே செய்தார். சின்னப்பூவே மெல்லப் பேசு என்ற படத்தில் அறிமுகமானார். அதில் வரும் பாடல்கள் அனைத்துமே அருமை. பிறகு சிதாரா விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் இணைந்து நடித்த படம்..பெயர் மறந்து விட்டது...சொல்லிக் கொடுத்தா குயிலு சிந்து படிக்கும் என்ற பாடல் நினைவில் இருக்கிறது. புதுப்புது ராகங்கள் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும். ஆனால் என்னவோ பிறகு திடீரென மாறி விட்டார். இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகுதான் இவருக்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. இவருடைய பல பாடல்கள் பழைய தமிழ்ப் பாடல்களின் ஆலிங்கணங்களே.

CVR said...

வாங்க ஜிரா
நீங்க சொல்லுறது சரிதான்.முன்பே மை ஃபிரண்ட் குறிப்பிட்டிருந்தது போல அவரின் இசை அமைப்பிற்கு நானும் ஒரு ரசிகன் தான். ஆனால் தமிழ் திரை உலகில் இது போன்ற இசை "பாதிப்புகளில்" இருந்து எந்த ஒரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் தப்பிக்க வில்லை என்பதை காட்டவே இவரை பற்றிய ஒரு பதிவை போட்டேன்!! :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP