Thursday, July 19, 2007

சினிமா காரம் காபி - பாகம் 5

தற்போது இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களிலேயே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர ராஜா். தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி பெயரை நிலை நிறுத்திக்கொண்டு வருகிறார்.
அவரின் ஆரம்பகால படங்களான துள்ளுவதோ இளமை,நந்தா,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்களிலேயே அவர் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று எனக்கு தோன்றியது. சமீப காலம் வரை அவர் கூட காபி அடிப்பார் என்று எனக்கு தகவல் இல்லாமல் தான் இருந்தது.

இந்த தொடருக்காக சிறிது இணையத்தில் நோண்டி பார்த்த போது தான் இவரும் ஆங்காங்கே சில அட்டை காபிகளை செய்து வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். அதுவும் அவரின் தந்தையின் இசையமைப்பிலிருந்து அவர் புனைந்த சில இசை அமைப்புகள் பற்றி ஒரு தனி பட்டியலே உண்டு. குறிப்பாக 7G ரெயின்போ காலனியில் வரும் தீம் ம்யூசிக் ஜானி படத்தில் இறுதி காட்சியில் வரும் பிண்ணனி இசையை ஒத்து இருப்பதை பார்க்கலாம். இன்னொரு உதாரணமாக தாஸ் படத்தில் வரும் "வா வா வா,வராங்காட்டி போ போ போ" எனும் பாடல். இந்த பாடல் கேட்கும் போதே இது எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது இது "நீங்கள் கேட்டவை" படத்தில் வரும் அடியே!! மனம் நில்லுனா நிக்காதடி"" பாட்டின் காபி என்று. பாடலின் சில பகுதிகளை உன்னிப்பாக கவனித்தால் எப்படி அவை அச்சு அசலாக ஒத்து போகின்றது என்று பார்க்கலாம்.
ஆனால் நாம் இன்றைக்கு இதை பற்றி பார்க்கப்போகும் உதாரணம் "பாலா" படத்தில் இடம் பெறும் "தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே" எனும் பாடல். இந்த பாடல் இவரின் தந்தை "மஹாதேவ்' எனும் இந்திப்படத்தில் இசையமைத்த "ரிம்ஜிம் ரிம்ஜிம்"(1942 லவ் ஸ்டோரி எனும் படத்தில் வரும் ரிம்ஜிம் பாட்டோடு இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்) எனும் பாடலின் காபி . நீங்களே சற்று கேட்டு பாருங்களேன்.

பாலா - தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே
மஹாதேவ் - ரிம்ஜிம்

ஹ்ம்ம்ம்!!
இப்போ கொஞ்சம் வெளிநாட்டு காபியை பாக்கலாம். "காதல் கொண்டேன்" படம் செல்வராகவன்,தனுஷ்,சோனியா அகர்வால் என்று பல பேருக்கு தமிழ் திரையுலகிற்கு முகவரி அமைத்து கொடுத்த படம். நான் யுவன் சங்கரின் இசைக்கு தீவிர ரசிகனாவதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். திரையில் இடம் பெற்ற பாடல்கள் தவிர "நட்பினிலே நட்பினிலே" போன்ற படத்தில் வெளிவராத சில பாடல்களும் அற்புதமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் புகழ் பெற்ற இரு பாடல்கள் அப்படியே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை.
படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை எங்கிருந்து பிடித்திருக்கிறார் யுவன் என்று சற்று பாருங்கள்!! :-)

மனசு ரெண்டும் பார்க்க - காதல் கொண்டேன்A rose in the wind - Anggun
படத்தில் இன்னொரு பிரபலமான பாட்டு "காதல் காதல் காதலின் நெஞ்சம்" என் தொடங்கும் பாடல். இது எங்கிருந்து எடுத்திருக்கிறார் என்று பார்க்கலாமா??

காதல் காதல் - காதல் கொண்டேன்
Raven - Hedningarna
இது தவிர இந்த படத்தில் வரும் ஒரு அழகான மெலடி "நெஞ்சோடு கலந்திடு" என தொடங்கும் பாடல். இந்த பாடல் Corrs இசைஇக்குழுவின் பாடலான "Runaway" எனும் பாட்டின் தொடக்கத்தின் இன்ஸ்பிரேஷன் என பட்டவர்த்தமாக தெரியும். இது முழுக்க முழுக்க காபி அடிக்கபடவில்லை என்பதால் இதை கூட சற்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பாடலை பற்றி் நான் என்னுடைய வயலின் பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன்.
நல்ல திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் கூட சந்தர்ப்பவசத்தில் இன்ஸ்பயர் ஆகி அல்லது காபி அடிக்க வேண்டி வந்து விடுகிறது என்பதையே இது காட்டுகிறது. :-)

நன்றி:
http://www.itwofs.com/

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி பெயரை நிலை நிறுத்திக்கொண்டு வருகிறார்//

முன்பு எப்போதோ ஒரு முறை இசைஞானியின் பேட்டியைப் படித்த நினைவு...CVR மாதிரி விவரம் புடிச்ச ஒரு நிருபர், ராஜாவைக் காப்பி பற்றிக் கேள்வி கேட்க...டென்சனான ராஜா...

இருப்பது ஏழு ஸ்வரம்..எத்தனைக் காலத்துக்குத் தாங்க ஏழு ஸ்வரத்துக்குள்ளேயே பாட்டு போட்டு காட்டிக் கொண்டிருக்க முடியும்? அப்பப்ப சில சாயல் படத் தான் செய்யும் என்று சொன்னதாக நினைவு!....இன்று நீங்க யுவனையும் வெளுத்து வாங்கிய போது நினைவுக்கு வருகிறது! :-)))

என்னமோ போங்க! என்னத்த்ச் சொல்ல! நல்ல காலம் நட்பினிலே, நட்பினிலே பாட்டு காப்பி இல்ல! ஏன்னா அது எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப புடிச்ச பாட்டு!

நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பதும் இல்லை...
உன்மனமும் என்மனமும் பேச
வார்த்தைகள் தேவை இல்லை....
ஹூம்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி...கேக்கணும்னு நினைச்சேன்...

நம்ம இசையை, வெளிநாட்டுக் காரய்ங்க காப்பி அடிச்சதே இல்லையா CVR?
தியாகராஜரின் ஏதா வுணரா-வை மை ஃபேர் லேடிக்கு காப்பி பண்ணதா ஒரு சேதி வந்ததே! அது பத்தி எல்லாம் கூட சொல்லுங்க...கேட்டுக்கறோம் அண்ணா!

CVR said...

//இருப்பது ஏழு ஸ்வரம்..எத்தனைக் காலத்துக்குத் தாங்க ஏழு ஸ்வரத்துக்குள்ளேயே பாட்டு போட்டு காட்டிக் கொண்டிருக்க முடியும்? //
அதற்காக அட்டை காபி அடிக்க வேண்டும கே.ஆர்.எஸ்???
இதை பற்றி தான் முதல் பகுதியிலேயே விவாதித்தோமே.

//தியாகராஜரின் ஏதா வுணரா-வை மை ஃபேர் லேடிக்கு காப்பி பண்ணதா ஒரு சேதி வந்ததே! அது பத்தி எல்லாம் கூட சொல்லுங்க...கேட்டுக்கறோம் அண்ணா!
//
அதை பற்றி எல்லாம் மேலதிக தகவல்கள் தெரிந்த நீங்கள் சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும் அண்ணா!! :-)

Boston Bala said...

எப்பா.. நோண்டி நுங்கெடுக்கறீங்க! நன்றி

CVR said...

@பாஸ்டன் பாலா
வாங்க பாபா!!
உண்மைய மக்களுக்கு யாராவது எடுத்து சொல்லனும்ல!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP