Thursday, July 05, 2007

பாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்!

அது ஒரு மிகப்பெரிய வித்துவானின் கச்சேரி. யாரும் ஓசியில் உள்ளே நுழையக்கூடாது என்பதால் காரியதரிசியே வாசலில் நின்று கண்காணித்துக் கொண்டு இருந்தார்.
மிருதங்க வித்வான் மிருதங்கத்துடன் வந்தார் உள்ளே அனுப்பினார்.
பிறகு வயலின் வித்வானும் அவர் பின்னால் மற்றொருவரும் வந்தார். வயலினோடு வந்தவரை அனுப்பிவிட்டு பின்னால் வந்தவரை நிறுத்திவிட்டார் கையில் வாத்தியம் இல்லாத காரணத்தால்.

வந்தவர் சொன்னார் நான்தான் இன்று கச்சேரிக்கு கொன்னக்கோல் வாசிக்கப் போகிறேன் என்றார். எங்கே உங்கள் கொன்னக்கோல் வாத்தியத்தை காண்பியுங்கள் என்பதற்கு முழித்தார்.
பின்னால் வ்ந்த பாடகர் சொன்னார்....கொன்னக்கோல் கையில் வைத்திருக்கும் வாத்தியம் இல்லை. வாயால் சொற்கட்டுகளுடன் வாசிக்க வேண்டிய வாத்தியம் என்று.

அந்த நாள் கச்சேரியில் மதுரை சோமு, போன்றவர்கள் பக்கவாத்தியமாக கொன்னக்கோலை வைத்துக் கொள்வார்கள் வாத்தியங்களோடு!
கொன்னக்கோல் வாசிப்பவரும் தனி ஆவார்த்தனத்தின் போது சொற்கட்டுகளை வாயினால் மிருதங்கம், கடம் கஞ்சிரா போன்ற தோல்/மண் வாத்தியத்திற்கு இணையாக வாசிப்பார்.

நடன நிகழ்ச்சிகளிலும் கூட பாடுபவரைத் தவிர நட்டுவனாரும் அவ்வப்போது ஜதிகளை சொற்கட்டுகளாக கூறி அதற்கேற்ப நடனம் செய்பவரும் ஆடுவார்.
இதுவும் ஒருவகை கொன்னக்கோல்தான்


கொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்.
அதுமாதிரி நல்ல தாள ஞானம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.முறைப்படி தாளவாத்தியக் கலைஞரிடம் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கலை பரிமளிக்கும்


காஞ்சிபுரம் திரு பச்சையப்ப பிள்ளை மற்றும் திரு. பக்கிரியாப்பிள்ளை கொன்னக்கோல் வாத்தியத்தில் சிறந்த விற்ப்பன்னர்கள்

இதோ மேற்க்கத்திய கலைஞர் ஒருவர் நம் கொன்னக்கோல் வாத்தியத்தை வாசிப்பதைக் கேளுங்கள் பாருங்கள்


திரு. டி ஹஎச் சுபாஷ் சந்தரன் கடத்திலும் கொன்னக்கோலிலும் நிபுணர்.
அவர் கடம் வாசித்து கொன்னக்கோலையும் உபயோகித்து அமர்களபடுத்துகிறார் பாருங்கள் கேளுங்கள்திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் திரு கே வி மஹாதேவன் இசையில் டி. எம் சௌந்திரராஜன் பாடிய பாட்டும் நானே பாவமும் நானே பாடலிலும் கொன்னக்கோல் வாத்தியம் பிரமாதமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது பார்த்து கேட்டுப்பாருங்கள்

9 comments:

CVR said...

சூப்பர்!!
அந்த வெள்ளைக்கர அக்காக்கு அப்படி என்னதான் கர்நாடக சங்கீதம் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சிட்டு போட்டு விட்டா,அவிங்க வாயிலையே கச்சேரியே வாசிக்கராங்க!!

"பாட்டும் நானே" பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு!! டி.எம்.எஸ் போட்டு தாக்கி இருப்பாரு!!!

அருமையான பதிவு தி.ரா.ச ஐயா!

வாழ்த்துக்கள்!! :-)

ILA (a) இளா said...

ஆஹா, வெள்ளை யக்கா கலக்கறாங்க. எதிர்பார்க்கவே இல்லை. இப்படி ஒரு பதிவிட்டது நன்றிங்க

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச

சூப்பர் பதிவு!
பல பேர் கொன்னக்கோல் என்றால் அதுவும் ஒரு வாத்தியக் கருவி-ன்னே நினைச்சிக்கிட்டு இருக்காங்க! (என்னைப் போலவே :-)
நினைவிருக்கா...உங்களை நானும் அது என்ன கருவி ஐயா என்று தான் கேட்டேன் முன்பு)

நாக்கு தான் கருவி!
அற்புதமான கருவி! இறைவன் தனே கொடுத்த கருவி!
வாயினால் மிருதங்கத்துக்குப் போட்டியா? - சூப்பர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்//

அப்போ, பீடா வெத்தலை எல்லாம் ரொம்ப போட மாட்டாங்கன்னு சொல்லுங்க! :-)

சுபாஷ் சந்தரன் வீடியோ அருமை!
வெள்ளக்கார அக்கா சும்மாஆஆஅ பின்னி எடுக்கறாய்ங்க!
அக்கா பேரு லோரி கோட்லர்!
இதான் அவுங்க முகவரி:
http://www.LoriCotler.com

யக்கா நியுயார்க்கில், சிம்பனி ஸ்பேசில் அடிக்கடி பாடுவாங்களாம்!

வல்லிசிம்ஹன் said...

கொன்னக்கோல் என்றால் வாயில வாசிக்கிறதா.

தி.ரா.ச நிஜமாகவே தெரியாது.
எடுத்துப் போட்டு இருக்கும் படங்களும் சூப்பர்.

என்னமா நாக்குப் பிரளுகிறது இந்தப் பொண்ணுக்கு.

திருவிளையாடல் கேக்கணுமா. பாட்டு,தாளம்,பாவம் அத்தனையும் குழைத்துப் பக்தியோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நேற்று நினைத்தேன்,

இன்னிக்குப் பதிவு செய்துவிட்டீர்கள்.நன்றி தி.ரா.ச.

இலவசக்கொத்தனார் said...

அருமையான நகர்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Anonymous said...

கொன்னக்கோல் - ஒரு இசைக்கருவின்னா நினைச்சேன்!?!?

Anonymous said...

கொன்னக்கோல் - ஹீம்!
வாசிக்கறது - கருவி இல்லையா!?!

துளசி கோபால் said...

சூப்பர்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP