Saturday, July 28, 2007

அன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று

அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ? அகிலம் முழுமைக்கும் அன்னையாம், அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும் உலகத்தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ? அவள் குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்கா விட்டாலும், அவர்களிடம் அவள் அன்பு என்றென்றும் குறைவதில்லை.

அழும் பிள்ளையாம் திருஞான சம்பந்தனக்கு ஒடிவந்து பாலூட்டிய அன்னை அவள்! இசையால் என் பிள்ளை அம்புலி புனையும் பெருமானைப் பாடித் துதிப்பான் என அன்னை அறிவாளன்றோ! - மதுரையில் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், காசியில் விசாலாட்சியாய் - அவள் தானே இட பாகத்தே வீற்றிருக்கும் உமையன்னை!

உயர் ஞானம் வேண்டி நிற்பார்க்கு புகலிடம் ஏது? வெள்ளைத் தாமரை மீதினில் வீற்றிருக்கும் , வேத ஞானம் யாவும் வித்தாய் விளைந்திருக்கும் கலையன்னை - ஞான சரஸ்வதி அன்றோ? இசை மீட்டிடும் அவள் கையில் தான் ஆதார ஸ்ருதி இழைத்திடும் வீணையன்றோ! - அவள் தானே இசை ஞானம் அருளும் வீணா வாணி, நாத ரூபிணீ!

மங்களம் தந்திடும் மலர் மகள், மாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் - அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது? துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட, வந்து சேராதோ வளம் யாவும்! - அவள்தானே திருவரங்கத்திலேயும் (நமக்கு) பக்கத்திலேயே இருக்கும் ஸ்ரீதேவி!

முப்பெரும் தேவியர் புகழினை இசையால் பாடிப் புகழாதவர் உண்டா? இசைப்பாடல்களிலும் அன்னையர் துதி பாடி ஆராதனை செய்யும் பாடல்கள் இல்லாமல் போகுமா? அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டு பெறுவோமே இசை இன்பம்!

மலைமகள்:
ஜனனி ஜனனி
திரைப்படம் : தாய் மூகாம்பிகை
பாடகர் : இளையராஜா


கலைமகள்:
கை வீணையை
திரைப் படம் : வியட்நாம் காலணி
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ

Kai veenaiyai.mp3


அலைமகள்:
பாடல் : பாக்யதா ஸ்ரீ
பாடகர் : எம்.எல்.வசந்தகுமாரி
Bagyatha Sri.mp3


ஒரே பாட்டில் முப்பெரும் அன்னையரை பாரதி பாடுகிறான் இவ்வாறாக:

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

கலையன்னை:

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே !

அலையன்னை:

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

மலையன்னை:

மலையிலே தான்பிறந்தாள். சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையி லுயர்த்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே!

பாடலை எஸ்.சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்:

Maatha Parasakthi-...

12 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன ஜீவா, கல்யாணி ஸ்பெஷலா? :-)

இளையராஜாவின் பக்திப் பாடல்களில் மகுடம் ஜனனீ ஜனனீ...இது கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். ராஜாவின் குரலோடு, தீபன் சக்ரவர்த்தி குரலும் தூக்கலா ஒலிக்கும்!

இளையராஜா போட்ட அற்புதமான அமீர் கல்யாணி இந்தப் பாட்டு - கை வீணையை ஏந்தும் கலைவாணியே!

வந்தாள் மகாலக்ஷ்மியே பாட்டும் கல்யாணி தான். ஆனா அது பக்திப்பாடல் இல்லைன்னு ஜீவா இங்கு கொடுக்கலை போலும்! :-)

அன்னையர்களைப் பற்றி அள்ளும் பதிவு! இசை இன்பமாக!

வடுவூர் குமார் said...

ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய பாடல்கள்.
நன்றி

CVR said...

அழகான பாடல்கள்
நல்ல தொகுப்பு!!

பதிவிட்டதற்கு நன்றி!! :)

jeevagv said...

ரவி,
கல்யாணியும், ஹமீர் கல்யாணியும் வெவ்வேறு ராகங்களானாலும் அவை இரண்டிலும் கல்யாணி என்ற சொல் இருப்பதே அன்னையின் அருள்!

சிந்துபைரவி படத்தில் ஜேசுதாஸ் பாடியே ' கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்...உயிர்தீயை வளர்த்தேன்...' பாடலை சேர்த்திருந்தால், அதும் கல்யாணியாக இருந்திருக்கும்!

நீங்கள் சொன்னது போலவே, மகாலஷ்மி பாடலுக்கு திரைப்பாடல் தேடிக்கொண்டு இருந்த போது, 'வந்தாள் மகாலஷ்மியே' பாடல் மனதில் தோன்றியது. (அட என்ன ஒற்றுமை!). ஆனால், மகாலஷ்மியை துதிக்கும் பாடல் இல்லாததால், அதனை சேர்க்கவில்லை!. தமிழ்த் திரையில் மகாலஷ்மி முழு துதிப்பாடல் இருந்தால் யாரேனும் சொல்லவும். 'ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்யவா...' என்றொரு ஜேசுதாஸ் பாடல் உண்டு. ஆனால் சரணங்களில் படத்தின் நாயகியை பாடுவதுபோல் இருக்கும்!

இன்னொன்று 'கல்யாணி' விஷயம்:
மேற்சொன்ன "கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்..." பாடி முடித்து, அடுத்த கல்யாணியாக "வந்தாள் மகாலஷ்மியே" பாடினால் எப்படி இருக்கும்?
கலைவாணியை அழைத்து, மகாலஷ்மி வந்தாள் என்று இருக்கும்!

jeevagv said...

வடுவூர் குமார் மற்றும் சி.வி.ஆர், தங்கள் விருப்பத்திற்கு இனிதாக பாடல்கள் அமைந்தது என் மகிழ்சியே!

rahini said...

isaithane manithanai vaala vaikuthu.
poiyum veesamum suyanalamum kaatum manitharkal maththiyil

isaiyum lai enraal.
maanidan maandu poovaan.

arumai.
rahini

Anonymous said...

À¡ðÎ ±ýÀÐ ±øÄ¡ÕìÌõ
¦À¡ÐÅ¡É ´ýÚ.
ƒÉÉ¢ ƒÉÉ¢ À¡ðÎ ´Õ Á¢ø ¸ø.
superb selection of songs.
acsr

Unknown said...

Collection of songs are good .
Another important aspect of Kalaivani in Sindhubhairavi . It has only Arahonam ( Directorial touch , referring that hero has only upward growth . Great director , greater music director .

Annainnu subject la "Amma endru azhaikadha uyir illayeah" podathathukku any specific reason ?

jeevagv said...

வாங்க மதுசூதனன்!
'அம்மாவென்று அழைக்காத...' பாடலும் இனிதான இன்னொரு கல்யாணி ராகப் பாடலாகும், ங்கு குறிப்பிட்டதற்கு நன்றி!
மற்றபடி, இந்த பதிவு குறிப்பாக முப்பெரும் தேவியருக்கான பதிவானதால் - அந்த பாடலைச் சேர்த்துக் கொள்ளவில்லை!

வடுவூர் குமார் said...

திரும்ப வந்துள்ளேன்.
முடிந்தால் கூகிள் விடியோவில் ஜெயா டிவி என்று போட்டு பார்த்தால் இளையராஜாவின் நிகழ்வுகளை கொண்டு வந்து கொடுக்கும் அதில் உள்ள ஜனனி பாட்டை கேட்டுப்பாருங்கள்.
உருகாத மனமும் உருகும்.
இவருடைய இந்த பாடல்/இசை என்னவோ செய்கிறது.

. said...

ஆசிப் மீரான்
my wife yasmin has left me and my chidrenand reachedthe kingdom of the almighty. plesepray for her soul to rest in peace

ஆசிப் மீரான்
dear thamil friends
plz convert this messege to thamil
ஆசிப் மீரான் number

98406 00846

ஆசிப் மீரான்

jeevagv said...

ஆசிப் மீரான் அவர்களுக்கு, உங்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது...எல்லாம் வல்ல இறையருள் துணை செய்ய வேண்டுகிறோம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP