பூர்விகல்யாணி ராகம் - பகுதி 2
சென்ற பகுதியின் தொடர்ச்சி:
சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!.
'நீ மாடலு' என்கிற பூர்விகல்யாணி கீர்த்தனையும் இந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது. இது பரதநாட்டியத்தில் ஜவளியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
பூர்வி கல்யாணியில் இதர கிருதிகள்/கீர்த்தனைகள்:
* நின்னுவின - சியாமா சாஸ்திரி
Dr.N.ரமணி அவர்களின் புல்லாங்குழலில் இந்த பாடலை இங்கு கேட்கலாம். இந்தப் பாடலில் காஞ்சி ஏகாம்பரநாதர் / காமாட்சி பற்றிய குறிப்பும் உண்டு.
* மொய்யார் தடம் - மாணிக்கவாசகர்
பூர்வி கல்யாணி ராகத்தில் இந்த திருவெம்பாவை பாடலுக்கு பண்ணேற்றி - குறிப்பாக செம்மங்குடி அவர்களும் எம்.எஸ் அம்மா அவர்களும் பாடி இருக்கிறார்கள்.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழற்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
இந்த மார்கழி மாதத்திற்கு பொருத்தமான இந்த திருப்பள்ளிஎழுச்சியை எம்.எஸ் அம்மா பாடிட இங்கே கேட்கலாம்.
* பரதெய்வம் உனையன்றி - பாபநாசம் சிவன்
இந்தக் கிருதியின் ஆலாபனையும் பின்னர் அதை வயலினில் இசைத்திடவும் கேட்கலாம். பூர்வி கல்யாணியின் இனிமையை இதில் இனிதே நுகரலாம்:
03 Paratheivam-POO... |
இந்தக் கிருதியின் வரிகள் இங்கே:
பல்லவி
பரதெய்வம் உனையன்றி உண்டோ
பலநோய்க்கு மருந்தே என் துயர்தீர்க்கும் காருண்ய (பரதெய்வம்)
அனுபல்லவி
ஹரனே சதாசிவ பரனே வராபய
கரனே உமையாள் மனமகிழ் சுந்தரனே எமையாள் மறைபுகழும் (பரதெய்வம்)
சரணம்
அடிமுடியார் கண்டார் ஆதி-மத்
யாந்த ரஹித சம்போ-நாமமுடன்
வடிவமும் உனக்குண்டோ-மாலயனும்
வணங்கும் சுவயம்போ
சடை முடியணி கைலாச விஹாரா
சங்கரா த்ரிபுர ஹரநிர்விகார (பரதெய்வம்)
தொடர்ந்து, சுதா ரகுநாதன் அவர்கள் இந்தப் பாடலை பாடிடக் கேட்கலாம்:
03 Paratheivam-Sud... |
திரை இசையில் பூர்விகல்யாணி:
* சந்திக்க துடித்தேன் பொன்மானே / SPB, ஜானகி / வேதம் புதிது
SandhikkaThudittae... |
(இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை என்பது வேறு விஷயம்!)
10 comments:
சபாஷ்..பலே..பலே..
சிவ.சூ. நா.
சென்னை.
வருக சூரியநாரயணன் சார், பாராட்டுக்கு நன்றிகள்!
நல்ல பாடல் கலக்ஷன் தந்திருக்கிறீர். இதயெல்லாம் கேட்ட பிறகாவது எனக்கு கன்பூஷன் வராமல் இருக்கான்னு பார்க்கலாம்
வாங்க மதுரையம்பதி!
// இதயெல்லாம் கேட்ட பிறகாவது எனக்கு கன்பூஷன் வராமல் இருக்கான்னு பார்க்கலாம்
//
:-)
ஜீவா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே பாட்டு எப்படிப் பிடிச்சீங்க தலைவா? வேதம் புதிது படத்தில் கூட வெளிவரலையே! சென்ற பதிவில் கேட்டதை மறக்காம கொடுத்தமைக்கு நன்றி!
கேட்டதும் கொடுப்பவனே ஜீவா ஜீவா!
பூர்வியின் பாடகனே ஜீவா ஜீவான்னு
பாட்டை மாத்திறலாமா? :-))
எம்.எஸ் அவர்களின் திருப்பள்ளி எழுச்சியும் மிக அருமை!
When I hear "Ethilum ingu irrupan avan yaaro" from film Bharathi, I feel it is like Purvi Kalyani, but some websites indicated as Rasikaranjai. How do I relate this.
இசை இரசனை உண்டு ஆனால் ராகங்களை அறிந்து கொள்ளும் திறனோ பயிற்சியோ இல்லை( இதனால் ஒன்றும் குறைவு இல்லை) ஏதாவது அடிப்படை பாடங்களைக் கொண்ட பதிவுகள் பற்றி அறிந்தால் சொல்ல முடியுமா..
//சந்திக்கத் துடித்தேன் பொன்மானே பாட்டு எப்படிப் பிடிச்சீங்க தலைவா? //
நம்ப இணையத்தில் தான் KRS!
ஆம், அனானி:
"எதிலும் இங்கு இருப்பான்" - பாடலில் பூர்வி கல்யாணியின் சாயலும் பந்துவரளின் சாயலும் பார்க்கலாம்.
கிருத்திகா:
/ராகங்களை அறிந்து கொள்ளும் திறனோ பயிற்சியோ இல்லை( இதனால் ஒன்றும் குறைவு இல்லை)//
நிச்சயமாக, குறை ஏதும் இல்லை.
இசை இன்பத்தில் - ஒவ்வொரு ராகமாக பாடல்களை தொகுத்துக் கொண்டிருக்கிறோம். இடப்பக்கம் உள்ள குறிச்சொற்களில் இதுவரை வந்த ராகப் பதிவுகளைப் பார்க்கலாம்.
இந்தப் பதிவையும் பார்க்கவும்.
ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு அதிலுள்ள பாடல்கள் பலவற்றைக் கேட்டுப்பாருங்கள். அவற்றில் உள்ள ஒற்றுமையை உங்கள் செவிகள் அறிந்துகொண்டால், there you Go!
Post a Comment