தீராத விளையாட்டுப் பிள்ளை
மகாகவி பாரதியின் இந்தப் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்தப் பாடல் இராகமாலிகையில் அமைந்துள்ளது. இராகமாலிகை என்றால், இராகங்களின் மாலை - அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களால் கோர்க்கப்பட்ட கீதமாலை! இங்கே, சிந்துபைரவி, கமாஸ், சண்முகப்பிரியா, மாண்டு ஆகிய இராகங்களால் அமைந்துள்ளது.
இந்தக் கண்ணன் பாடலை எத்தனையோ முறை எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருப்போம். இந்த எளிய பாடலை, ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கக் கேட்போமா?
முதலில் நமது பழம்பெரும் இசைக்கருவியான வீணையில், முதுபெரும் இசைக்கலைஞர் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வாசித்திடக் கேட்கலாமா? (இந்தப் பாடலை பதிவு செய்தது 1965இல் - HMV Shellac LP கிராமபோன் இசைத்தட்டில்)
வீணை |
தொடர்ந்து, புல்லாங்குழலில் நம்மை குழைத்தெடுப்பார், Dr.S.ரமணி அவர்கள்:
புல்லாங்குழல் |
அடுத்து, திரு.T.N.கிருஷ்ணன் வாசிக்க வயலின் இசையில் நனையலாமா?
வயலின் |
தொடர்ந்து, மாண்டலின் U.ஸ்ரீநிவாஸ் வாசித்துக் கேட்கலாமா?
மாண்டலின் |
அடுத்து, ஷேக் சின்ன மௌலானா சாஹிப் அவர்கள் நாயன வாசிப்பில் கேட்கலாம் இந்த சுட்டியில்.
இறுதியாக, பிரசன்னா அவர்களின் கிடார் வாசிப்பிலும் கேட்டு மகிழலாம். சுட்டி இங்கே.
பல இசைக்கருவிகளில் கேட்டாயிற்று, பாடியும் கேட்டுவிடலாமா, திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட:
வாய்ப்பாட்டு |
இன்னும் எப்படி எல்லாம் இந்த இசை இன்பத்தினை பருகலாம்?
ம்ம்ம்ம்ம், நடனத்திலே! - ராஜஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் ஆடும் ப(ர)தத்தில் தான் எத்தனை சக்தி! - பிரம்மிக்க வைக்கிறது! "கண்ணன் - விளையாட்டுப்பிள்ளை" என்ற தலைப்பிட்டு கவி எழுதிய பாரதி இந்த பரதத்தைப் பார்த்தால் நிச்சயம் பெருமிதம் அடைவான். குறிப்பாக "வன்னப்புதுச் சேலை தனிலே..." என்ற இடத்தில் பார்க்க வேண்டும்!
ஆகா, நமது இசையில்தான் எத்தனை பரிணாமங்கள், எத்தனை உயர் பாரம்பரியங்கள்!
வாழ்க நமது இசை, வளர்க நமது இசை!
14 comments:
wonderful presentation.is it possible for me to download them in Itunes? Good and expect more.
ஆஹா! அற்புதம் ஜீவா! இப்போதைக்கு பரதம் மட்டும்தான் பார்த்தேன்! 'தின்னப் பழம் ஒன்று தருவான்' பகுதி, 'வன்னப்புதுச் சேலைதனிலே' இரண்டுமே வெகு அருமை! ராஜஸ்ரீ கிருஷ்ணன் அசத்துகிறார்கள்! அந்த பாவமும், energy-ம் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி! நீங்கள் சொன்னது போல பாரதி பார்த்திருந்தால் பெருமிதம் அடைந்திருப்பான். மிக்க நன்றி!
வருக திரு.சந்தரமோஹன்!
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
என்னுடைய ensips folderஇல் இருந்து இறக்கிக் கொள்ளலாம். iTunes store-இல் இருந்தும் வாங்கிக் கொள்ள கிடைக்கிறது. "தீராத விளையாட்டுப்பிள்ளை" மட்டும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வழங்கிட கிடைக்கிறது.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டேன். அற்புதமான தொகுப்பு! மிக்க நன்றி, ஜீவா!
வாங்க கவிநயா, மிக்க மகிழ்ச்சி!
ஜீவாவின் one stop shop அருமை! அருமை! :-)
தீராது விளையாட்டுப் பிள்ளையை இசை இன்பத்துக்கு அள்ளிக் கொடுத்த பிள்ளை, ஜீவா, வாழ்க! வாழ்க!!
:-) கே.ஆர்.எஸ்,
வாழ்க கோஷம் - இசையோடு நின்றால் சரி - மனிதர்களுக்கு சரிப்படுவதில்லை!
:-)
அருமையான பாடல். எல்லாவற்றையும் கேட்டு, நடனத்தை குழந்தைகளுக்கும் காட்டி மகிழ்ந்தேன். நன்றி!
கிருஷ்ணர் என்னவெல்லாம் செய்தார் என்று குழந்தைகள் விவரமாகக் கேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்;) கோடை விடுமுறை வேறு...
//கிருஷ்ணர் என்னவெல்லாம் செய்தார் என்று குழந்தைகள் விவரமாகக் கேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்;) //
வாங்க கெக்கே மேடம்,
ஆகா, மிகவும் நல்லது!
இது ரொம்ப பிடித்த பாட்டு ஜீவா. பாடவும் ஆடவும் அருமையான பாடல். எங்கள் வீட்டில் பல நாட்களில் தாலாட்டுப் பாடலும் ஆகும். :-)
வாங்க குமரன்
!
தாலாட்டுப் பாடலுமா! அப்படி நான் யோசிக்கவே இல்லையே! யோசித்துப் பார்த்தால், அதுவும் மிகவும் உசிதமாகப் படுகிறது. முயற்சித்து விட வேண்டியதுதான், சீக்கிரமே!
நான் அதிகம் ரசித்த பாடல் இது ஜீவா அண்ணா.
குழுவில் இருந்து கொண்டு இன்றுதான் இந்தப் பதிவைப் படிக்க வாய்த்தது.
வேலை காரணமாக சில நாள், வலைப்பூக்கள் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
முதல் பதிவு முடிந்து சில சரிபார்த்தலுக்காகக் காத்திருக்கிறது.
சில நாட்களுக்குள்ளாகவே முடித்து,
நமது மஹாவிஷ்ணு-விடமும், அம்மாவிடமும் அனுப்புகிறேன்.
அவர்கள் சரி சொன்னவுடனேயே போட்டுவிடலாம்.
வாங்க அந்தோணி முத்து,
KRS உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்.
நிறைய இடுகைகள் இசை இன்பத்திற்கு தர வேணும். காத்திருக்கிறோம்.
அருமையான பாடல்
மிக்க நன்றி
தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலின் ஸ்வர அமைப்பு கிடைக்குமா?
Post a Comment