உளியின் ஓசை - ராஜாவின் ஓசை
இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் 'உளியின் ஓசை' படத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடலின் துவக்கத்தில் இளையராஜா, கவிதை நடையில் என்ன சொல்லுகிறார்?
நான் ஒரு சிற்பி, நடனக்கலை தெரிய தேவையில்லை.
இருப்பினும் உனக்கதை விளக்கிடவே...
முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரியாவிரை, யாழ்நூல், பஞ்சமரபு
இவை இசை கூறும்.
செயிற்றியம், கூத்தநூல்
நடன கலை வகை கூறும்.
பல தொன்நூல்கள் கூறும்
தோற்கருவி, முழவு, முரசு, உடுக்கை,
மிருதங்க தாள மேளம் ஆகும்.
துளைக்கருவி, புல்லாங்குழலொடு,
மரக்கிளை ஒடித்து மனைத்து சீவாளி பொருந்தும் முகவீணை,
திமிரி நாயனம் நாதஸ்வரமாகும்.
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்,
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்,
சாரங்கியொடு
என்றும் நிறை வீணையாகும்.
மிடற்றுக்கருவி குரல் ஆகும்,
பண்பட்டு பண்பாடும் குரல் வகையாகும்.
இத்தனையும் ஒருங்கிணைந்து
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
ஏழிசை எழும்ப தாளம் தவறாமல், இசைந்தாடும் நடனக் கலைதனில்
எத்தனை பாவமுண்டு நடனத்திலே!!!
குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இராகம்: மாயாமாளவகௌளை & (???நீங்களே சொல்லுங்க!)
பாவாசிரியர்: நா.முத்துலிங்கம்
அகந்தையில்... |
"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே"
- கூத்த நூல்
இசை நூல்கள், இசைக் கருவிகள் பெயரெல்லாம் வருவது போலுளதே? எத்தனையோ காலம் முன்னரே நம் மரபில் திளைத்திட்ட இந்த இசை நயங்களை, இப்போது நினைவில் திருப்பிட, இவையெல்லாம் என்னவென்று விளக்கும் சுட்டிகளையும் இயன்றவரை இணைத்திருக்கிறேன்:
* தமிழ்ச்சங்கங்கள்
* இசைத்தமிழ்
* சுவாமி விபுலானந்தர் - யாழ்நூல்
* நாடகத்தமிழ்
* முரசும் அரசும்
* ஒரு நாகசுரம் உருவாகிறது
* துளைக்கருவிகள்
* விக்கியில் யாழ்
* இசை இன்பம் - சாரங்கி
* வைகோ இசை உரை
* விக்கியில் பஞ்சமரபு
* இசையின் கருவரைகள்
13 comments:
good one :-)
கேட்க கம்பீரமாக இசையும் பாடலும் இருந்தது. உங்கள் குறிப்புகளும் சிறப்பு. எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்..
அருமை! அருமை!
முதல் பகுதி ராஜாவின் ஓசை!
பிற் பகுதியும் சுட்டிகளும், ஜீவாவின் ஓசை!
ஜீவா அற்புதமான பதிவு. பொதுவில் அதிகம் சினிமாவோ தொலைகாட்சியோ பார்க்கும் வழக்கம் இல்லாததாலும், தற்போதைய சினிமா இசைப்பாடல்களில் நாட்டம் அதிகம் இல்லாததாலும் இந்தப்பாடல் கடந்த சில நாட்களாக தொலைக்காட்சியில் வரும்போது கூட கொஞ்சம் கூட கவனமின்றித்தான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போது கேட்கும் போது தவிர்க்கக்கூடாது ஓர் நல்ல இசைக்கோர்வை என்று தெரிகிறது. இசையோடு கூடிய அருந்தமிழ் செய்திகளும் இப்பாடலுக்கு அழகு சேர்க்கிறது. வழக்கம் போல் உங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள் கூடவே வந்தனங்களும்.
இப்பொழுதுதான் தங்கள் வலைப்பூவுக்கு வந்தேன்..ராஜராகத்தோடு களை கட்டுகிறது..விரைவில் மீண்டும் வந்து அனைத்துப் பதிவுகளையும் படிக்க விழைகிறேன்..தொடர்க உமது சேவை..அதுதான் எமக்குத் தேவை..
நல்லதொரு பாடலுக்கு அறிமுகம். நன்றிகள் ஜீவா.
கொடுத்துள்ள சுட்டிகளில் இருப்பவற்றையும் படிக்கிறேன்.
மதுரைகாரர், மாநகர் எல்லாம் சுற்றுபவர், வாங்க யாத்ரீகர்!
யாம் பெற்ற இன்பத்தினை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன், அவ்வளவுதான், திரு.ஜீவி ஐயா.
நல்லது, கே.ஆர்.எஸ்.
ஆமாங்க கிருத்திகா, நிலையாக நிலைக்க என்றிசைக்காமல், ஏதோ புதுமையான சப்தத்தினை ஏற்படுத்தி கேட்பவரின் கவனத்தை திசை திருப்பியே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கில் இன்றைய திரை இசை இருப்பதால், ஒதுக்குவதை தவிர வேறென்ன செய்ய முடியும்? எனினும், அவற்றிலும் குறிஞ்சி மலர் போல், ஆங்காங்கே அரிதாக மலர்கின்றன.
நல்வரவு தமிழ்ப்பறவை. இதுவரை வந்த இடுகைகளையும் தவறாமல் பார்க்கவும், கேட்கவும், இசை இன்பத்தில் திளைக்கவும்.
நல்லது குமரன், சுட்டிகள் பயனுளதாய் இருந்தால் நல்லது.
ராக ராஜாங்கத்தின் உலா வீதிக்கு மேலும் மேலும் அழைத்து செல்லுங்களேன்!
Post a Comment