சாரங்கியிடம்் மனமிறங்கி
"7G ரெயின்போ காலனி" படத்துல "கனா காணும் காலங்கள்,கரைந்தோடும் மேகங்கள்"னு ஒரு பாட்டு வரும்.பாட்டோட ஆரம்பத்துலையே ஒரு மெல்லிய இசை நம் மனதை மயக்கிவிட்டு செல்லும். தேனில் குழைத்தால் போன்ற ஒரு இசைகருவியின் மெல்லிய ஒலி பாடலை இனிதே ஆரம்பித்து விட்டு நம்மை வேறு ஒரு உலகத்துக்கு எடுத்து சென்று விடும். பின்னர் ஹரிஷ் ராகவேந்த்ரா மற்றும் மதுமிதாவின் இனிய குரலில் நாம் நம்மை மறந்துவிடுவோம். நடு நடுவில் உஸ்தாத் சுல்தான் கானின் ஆலாபனைகள் வேறு பாடலுக்கு மெருகேற்றி விடும். இந்த உணர்ச்சிகரமான பாடலுக்கு எவ்வளவு அழகாக அந்த இசை கருவியின் ஒலி உறுதுணையாக இருந்தது பார்த்தீர்களா??
வேறு ஏதாவது இசைக்கருவியை உபயோகப்படுத்தி இருந்தால் இதே போன்ற உணர்வை அதனால் எழுப்ப முடியுமா???
சரி இன்னொரு பாட்டு பாக்கலாமா?? "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்்" என்று வரும் ஒரு பாட்டு."நந்தா" படத்தில் இடம்பெறும் இந்த பாட்டில் ஆரம்பத்திலும் நெஞ்சை தொடும் ஒரு இசை இடம் பெறும். மிகச்சிறு வயதில் ஒரு கொலையை செய்து விட்டு ,சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லபடுவான் ஒரு சிறுவன்.இப்படிப்பட்ட வேலையில் தன் மகனை ஏமாற்றத்துடனும் நிராசையுடனும் வெறித்துப்பார்ப்பாள் அவன் தாய். பயமும் குற்ற உணர்ச்சியும் மனதை கவ்வ தன் தாயை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே வேனில் ஏறுவான் அச்சிறுவன்.இந்த காட்சியை நம் மனதில் நொடியில் பதித்து நம் ஆர்வத்தை கிளப்பி விட்டு விடும அந்த இசைக்கருவியின் ஒலி். பாடல் முழுவதும் அச்சிறுவன் படும் மன உளைச்சலையும் ,அன்னையை பிரிந்து தனிமையில் வாடும் சூழ்நிலையை மிக அழகாக வெளிக்கொண்டு வரும் இசை.
சரி இந்த இரண்டு பாடலகளிலும் நான் குறிப்பிட்ட இசைக்கருவியின் பெயர் என்ன தெரியுமா?? அந்த இசைக்கருவியின் பெயர் தான் சாரங்கி. உணர்ச்சிமயமான இசை என்றாலே அதில் கண்ணை மூடிக்கொண்டு சாரங்கியை போடு என்று கூறி விடலாம்.அதன் ஒலியை கேட்டாலே நம் மனதில் ஒரு வித உருக்கமான மனநிலை குடி கொண்டு விடும்
சாரங்கி எனும் வாத்தை இந்தியில் நூறு (சௌ) ,வண்ணங்கள் (ரங்) எனும் இரு வார்த்தைகளின் கலப்பு ஆகும். நூற்றுக்கணக்கான வண்ணங்களின் வனப்பும் இன்பங்களையும் தரவல்ல இசைக்கருவி இது என்று பொருள்படும்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதன் வரலாறு பற்றி பெரியதாக குறிப்புகள் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை,ஆனால் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூறாண்டுகளில் அரண்மனைகளில் ஆடல் பாடல் கேளிக்கைகளில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளில் சாரங்கி முக்கிய பங்கு வகித்தது. இதனாலேயே இதை கண்டால் மக்கள் ஒருவிதமான ஒவ்வாமையோடு ஒதுக்கி வந்திருக்கிறார்கள்.ஆனால் வட இந்திய தந்திக்கருவிகளில் சாரங்கி ஒரு மிகப்பிரபலமான கருவியாகவே இருந்து வருகிறது.வட இந்திய பாணியில் அமைந்த இசைக்கச்சேரிகள் என்றாலே பக்கவாத்தியமாகவோ அல்லது தனி ஆவர்த்தனமாகவோ சாரங்கி கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
சரி சாரங்கியின் வடிவமைப்பை கொஞ்சம் இப்பொழுது பார்க்கலாமா??
டுன் (tun) எனப்படும் ஒரு வித மரத்தினால் ஒரு விதமான பெட்டி செய்யப்பட்டு அதன் மேல் கீழ்ப்பகுதியில் ஆட்டுத்தோல் போர்த்தப்படுகிறது. சுமார் 64-67 சென்டிமீட்டர்கள் நீளம் இருக்கும் இந்த பெட்டியின்்பெட்டியின் உள்ளே ஒன்றும் இல்லாமல் வெறுமையாகத்தான் இருக்கும்.இதன் மேல் போர்த்தப்படும் தோலின் மேல் தான் சாரங்கியின் தந்திகள் ஓடும். சாரங்கிக்கு மொத்தம் 40 தந்திகள் உண்டு. ஆனால் இவற்றில் மூன்று தந்திகள் மட்டுமே ஒலியை நிர்ணயிக்க பயன்படும். மற்றவை எல்லாம் சும்மா ஒத்து ஊதுவதற்கு தான். ஆங்கிலத்தில் இதற்கு "Sympathetic strings" என்று பெயர் உண்டு. இவை ஒலியின் மாற்றத்திற்கு உதவாவிட்டாலும் நன்றாகவே ஒலியை கூட்டி விடும்.
சாரங்கிக்கு உபயோகப்படுத்தப்படும் வில் பொதுவாக தேக்கு மரக்கட்டையால் செய்யப்படும். இது நம் வயலினின் வில்லை விட கனமாக இருக்கும்.அதனூடே குதிரை வாலினில் தோன்றும் முடியை கட்டி இந்த வில்லினை உபயோகிப்பார்கள்.
இந்த சாரங்கியை வாசிக்கும் விதம் வயலினை திருப்பிப்போட்டு வாசிப்பது போலத்தான். வயலினில் இடது கைகளால் தந்தியை கீழ்புறம் தொட்டுக்கொண்டு மேல்புறம் வில்லினை தேய்ப்போம் அல்லவா?? ஆனால் சாரங்கியில் இதற்கு நேர் எதிர். இதில் மேற்புறம் இடது கை நகங்களால் தந்தியில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு வலது கையினால் வில்லினை கிழே தேய்ப்பார்கள். வயலினை போல் இல்லாமல் இந்த வாத்தியத்தில் விரல் நகங்கள் மூலமாக தந்தியின் மேல் அழுத்தம் தர வேண்டும்,விரல்களால் அல்ல. இதனால் இந்த வாத்தியத்தை வாசிப்பது மிகவும் கடினம். அதுவும் இல்லாமல் இந்த வாத்தியத்தை வாசிக்க கற்றுக்கொள்வதும் மிகவும் கஷ்டம்.
இதை வாசிக்க பழகுவதற்குள் விரல்களில்் வரும் வலியினை பொறுத்தாக வேண்டும். அதுவுமில்லாமல் தந்தியின் மேல் தேய்த்து தேய்த்து நகங்களின் மேல் ஒரு விதமான பள்ளம் கூட பதிந்து விடும். இதனை பெண் வாத்தியக்கலைஞர்கள் கற்றுக்கொள்ளவும் வாசிப்பதற்கும் கஷ்டமாக இருக்கிறது என்று தான் தில்ருபா,எஸ்ராஜ் போன்ற வாத்தியங்கள் சாரங்கியை ஒற்றி உருவாக்கப்பட்டனவாம்.இவை அனைத்திலும் எழுப்பப்படும் ஒலி ஒரளவிற்கு ஒரே மாதிரி தான் இருக்கும்.
்
இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் கூட இந்த இசைக்கருவி உபயோகப்படுத்த படுகிறது. ஹிந்துஸ்தானி போன்ற பாரம்பரிய இசை வகைகளில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற இசை மெட்டுக்களிலும் சாரங்கி மிக பிரபலம். குறிப்பாக ராஜஸ்தானிய நாட்டுபுற பாட்டுக்கள் என்றால் சாரங்கியின் ஒலியை நிறைய கேட்கப்பெறலாம்.இந்தியாவில் இந்த இசைக்கருவி வித்தகர்கள் என்று பார்த்தால் பண்டித் ராம் நாராயண்,சுல்தான் கான் போன்றோரை சொல்லலாம். பாகிஸ்தானிய இசை கலைஞர்கள் என்றால் உஸ்தாத் அல்லா ரக்கா முசாபிரி,டாக்டர் தைமூர் கான் என்று தனி பட்டியல் உண்டு.நேபாளத்தில் ஜலக் மான் கந்தர்பா,கிம் பஹதுர் கந்தர்பா எனும் ஒரு தனி பட்டியலை விக்கி தருகிறது.
இப்பொழுதெல்லாம் நம் தமிழ் சினிமா இசையிலேயே நிறைய சாரங்கி இசையை நாம் கேட்க பெறுகிறோம். சற்றே யோசித்து பார்த்தால்் என் மனதிற்கு சில பாடல்கள் தோன்றுகின்றன. "தீபாவளி" படத்தில் "காதல் வைத்து" என்ற ஒரு பாடலில்,நடுவில் வரும் இசையில் மிக அழகான சாரங்கி இசை கலந்திருக்கும். அது தவிர "தளபதி" படத்தில் வரும் "சின்ன தாயவள்" படத்திலும் இதை கேட்கப்பெறலாம்.
"காதல் கோட்டை' படத்தில் "சிகப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது " எனும் பாட்டு ஒன்று வரும். ராஜஸ்தானிய இசை மெட்டில் அமைந்திருக்கும் பாடல் என்பதால் சாரங்கி சம்மனில்லாமல் ஆஜராகி விடும்.
இது போன்று கவனிக்க ஆரம்பித்தால் நிறைய கிடைக்கப்பெறும்.
sarangi_bits_all.m... |
பார்த்தீங்களா நம்ம தமிழ் இசையிலேயே நமக்கு தெரியாத வட இந்திய கருவி எவ்வளவு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. இனிமேல் எதாவது பாடல் கேட்டால் அதில் சாரங்கி பயன்படுத்துப்பட்டிருந்தால்,அதை கவனித்து விட்டு நன்றாக ரசித்து கேட்பீர்கள் ,இல்லையா??
சரி போறதுக்கு முன்னாடி ஒரு இனிமையான சாரங்கி இசை போட்டிருக்கேன் கேட்டுட்டு போங்க!!
வரட்டா?? :-)
http://en.wikipedia.org/wiki/Sarangi
http://www.infoweb.co.nz/sarangi
http://www.india-instruments.de/pages/glossar/g-sarangi.html
http://www.sarangi.pwp.blueyonder.co.uk/Sarangi.html
http://www.india-instruments.de/pages/glossar/g-sarangi.html
படங்கள் :
www.aimrec.com/images/
http://www.fiddlingaround.co.uk/Resources/sarangi.gif
20 comments:
சாரங்கி அருமைதாங்க.
நான் உஸ்தாத் சுல்தான் கான் இசையை நம்ம ஜாகீர் ஹுஸைன் தப்லாவுடன் நேரில்
கேட்டுருக்கேன்.
ஆமாம்.... உம்ராவ் ஜானில் சாரங்கி இழையுமே. கேட்டிருக்கீங்கதானே?
சாரங்கி பற்றிய விளக்கப் பதிவுக்கு நன்றி சி.வி.ஆர்.
சாரங்கியா வயலினா என கேட்பவரின் செவியில் வேறுபாட்டினை ஏற்படுத்தித் தரும் அருமையான பதிவுக்கு நன்றிகள் பல!
CVR
பல தகவல்களைத் தொகுத்து எங்களுக்காக அழகாகத் தந்திருக்கீங்க! உங்களால் இசை இன்பத்தில் எங்களுக்கு எல்லாம் இன்பம் தான்!
சாரங்கி, புராணங்களில் மகாலட்சுமியின் வாத்தியமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பின்னாளில் வடஇந்திய செல்வந்தர்கள் கேட்கும் வாத்தியாமாக இருந்த இது, ஆடல் கலைஞர்கள் காரணமாகத் தேய்ந்து திரிந்து, கேளிக்கை இல்லங்களில் பெரும்பாலும் வாசிப்பதாக மாறி விட்டது!
இதை மாற்றி நல்ல நிலைக்கு இப்போது கொண்டு வந்துள்ளனர்!
இதை வாசிப்பவர்கள், வாய்ப்ப்பாட்டிலும் வல்லவர்களாகவே இருப்பார்கள்!
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது பாட்டு சூப்பரு! :-)
சாரங்கி என்று பார்த்ததும் யாரோ பொண்ணுன்னு நினைச்சேன்.நீங்கதான் சாரங்கன் ஆண்பால் சாரங்கி பெண்பால் ன்னு சொன்னீர்கள் என்று பட்சி சொல்லிற்று ;)
நல்ல பதிவு "அண்ணா"
இந்திப்படங்களில் ஹீரொ ஹூக்கா பிடிக்க நங்கையர் ஆடும் காட்சிக்குக் கூடவே சாரங்கியையும் வைத்துக் கொண்டு ஒருவர் வருவார்.
மற்றுமொரு வாத்தியம் என்று நினைத்தேன்.
இதில் இவ்வளவு விஷயம் எடுத்துச் சொன்னதற்கு மிக நன்றி.
இனிமேல் கூடுதல் ரசனையோடு கேட்கலாம்.
@துளசி டீச்சர்
//நான் உஸ்தாத் சுல்தான் கான் இசையை நம்ம ஜாகீர் ஹுஸைன் தப்லாவுடன் நேரில்
கேட்டுருக்கேன்.//
ஆஹா அற்புதம் டீச்சர்!!!
கலக்குங்க!! :-)
//ஆமாம்.... உம்ராவ் ஜானில் சாரங்கி இழையுமே. கேட்டிருக்கீங்கதானே?//
:-( இன்னும் இல்லை டீச்சர். சந்தர்ப்பம் கிடக்கும் போது பாக்கறேன்.
@ஜீவா
//சாரங்கியா வயலினா என கேட்பவரின் செவியில் வேறுபாட்டினை ஏற்படுத்தித் தரும் அருமையான பதிவுக்கு நன்றிகள் பல!//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீவா!! இந்த பதிவுக்கு தயார் செய்ய ஆரம்பித்த பிறகு தான் நம் தமிழ் இசையில் இவ்வளவு பயன்படுத்தி இருக்கிறார்களே என்று நானே கவனிக்க ஆரம்பித்தேன்!! :-)
@கே.ஆர்.எஸ்
//பல தகவல்களைத் தொகுத்து எங்களுக்காக அழகாகத் தந்திருக்கீங்க! உங்களால் இசை இன்பத்தில் எங்களுக்கு எல்லாம் இன்பம் தான்!//
அண்ணாத்த!!!
என்னிய வெச்சு காமெடி மீமெடி எதுவும் பண்ணலையே???
///
சாரங்கி, புராணங்களில் மகாலட்சுமியின் வாத்தியமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பின்னாளில் வடஇந்திய செல்வந்தர்கள் கேட்கும் வாத்தியாமாக இருந்த இது, ஆடல் கலைஞர்கள் காரணமாகத் தேய்ந்து திரிந்து, கேளிக்கை இல்லங்களில் பெரும்பாலும் வாசிப்பதாக மாறி விட்டது!
இதை மாற்றி நல்ல நிலைக்கு இப்போது கொண்டு வந்துள்ளனர்!
இதை வாசிப்பவர்கள், வாய்ப்ப்பாட்டிலும் வல்லவர்களாகவே இருப்பார்கள்!//
ஆஹா!!! இந்த தகவல்கள் எல்லாம் எங்கிருந்து புடிச்சீங்க தலைவா???
தகவல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)
@துர்கா அக்கா
//சாரங்கி என்று பார்த்ததும் யாரோ பொண்ணுன்னு நினைச்சேன்.நீங்கதான் சாரங்கன் ஆண்பால் சாரங்கி பெண்பால் ன்னு சொன்னீர்கள் என்று பட்சி சொல்லிற்று ;)
நல்ல பதிவு "அண்ணா"//
உங்க "பட்சி" யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்!!!! இந்த மாதிரி பிரில்லியன்ட் ஐடியா எல்லாம் எனக்கு வராது,எல்லாம் உங்க கே.ஆர்.எஸ் அண்ண்வுக்கு தான் தோனும்!!!:-P
"அக்கா"
;-D
@வல்லிசிம்ஹன்
//இந்திப்படங்களில் ஹீரொ ஹூக்கா பிடிக்க நங்கையர் ஆடும் காட்சிக்குக் கூடவே சாரங்கியையும் வைத்துக் கொண்டு ஒருவர் வருவார்.
மற்றுமொரு வாத்தியம் என்று நினைத்தேன்.//
இந்த காரணங்களுக்காகவே இந்த வாத்தியத்தை மக்கள் ஒதுக்கி வந்திருந்தார்கள்.
//
இதில் இவ்வளவு விஷயம் எடுத்துச் சொன்னதற்கு மிக நன்றி.
இனிமேல் கூடுதல் ரசனையோடு கேட்கலாம்.//
சந்தோஷம்!! :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!! :-)
ஒரு இசைகருவியை பற்றிய பல தகவல்களை அருமையாக எழுதியுள்ளிர்கள் CVR :))
நன்றிகள் ;)
சாரங்கி என்ற இசைக்கருவியைப் பற்றிய நல்லதொரு அறிமுகம். இந்த இசைக்கருவியை தமிழ்த்திரையிசையில் முதலில் பயன்படுத்தியது மெல்லிசை மன்னர் என நினைக்கிறேன். கர்ணன் என்ற படத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இரவுல் நிலவும் வளரட்டுமே என்ற பாடலில் மிகத் தெளிவாகத் தெரியும். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களிலும் சாரங்கி உண்டென்று நினைக்கிறேன். உள்ளத்தில் நல்ல உள்ளத்திலும் கூட. நீ கொடுத்திருக்கும் பாடல்களும் நல்ல எடுத்துக்காட்டுகளே.
வாவ்..இதெல்லாம் நான்கேள்வி பட்டதே இல்ல. நல்ல பதிவு.. was very informational.. thanks!
@கோபிநாத்
வாங்க கோபி!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)
@ஜிரா
வாங்க அண்ணா!! நீங்க சொன்ன அப்புறம் கர்ணன் படம் பாட்டு எல்லாத்தையும் கேட்டேன்!!
நீங்க சொன்னா மாதிரி எல்லத்துலையும் சாரங்கியை அட்டகாசமா உபயோகப்படுத்தியிருக்காங்க!!!
பாத்துட்டு நம்ம இசையரசி பதிவுல ஒரு இடுகை போட்டாச்சு!! :-)
@Dreamz
வாங்க ட்ரீம்ஸ்!!
பதிவு உங்களுக்கு உபயோகமாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி!! :-)
இனிமே அடிக்கடி வந்துட்டு போங்க!! :-)
wow..unga post ellam kalakkudhu ponga..lots of info...kandippa inimae vandhu ettip paarpaen..
unga blog union la sera enna seyya vaendum sollunga..naanum poondhukkaraen :)
அந்த "கனா கானும்" பாடலில் கொய் கொய் என்று இழுக்கும் போது நம் நரம்பை யாரோ எங்கோ இழுப்பது போன்று இருக்கும்.
ஒரு மாதிரி சோகத்துக்குத்தான் அதிகமாக ஒத்துவரும் போல் தோனுகிறது.
@கிட்டு
வாங்க கிட்டு!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
பதில் போடறதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டு இருக்கறதுக்கு மன்னிக்கனும்.
நம்ம பதிவுலகுல "blog union" என்கிற பேரில் ஒரு தனி கூட்டு பதிவு இருக்கிறதே,அதில் சேருவதை பற்றி சொல்கிறீரோ என்று குழம்பிப்போய் இருந்தேன்.
இந்த கூட்டுப்பதிவில் சேர வேண்டும் என்றால் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி பதிவின் பக்கவாட்டில் இருக்கும் பட்டையிலேயே (sidebar) இருக்கிறது.
எப்பொழுது வேண்டுமானாலும் மின் அஞ்சல் அனுப்புங்கள்!! :-)
@வடுவூர் குமார்
வாங்க குமார்!
நீங்க சொன்னா மாதிரி உணர்ச்சிகரமான பாடல்களுக்கு இந்த சாரங்கி நல்லா ஒத்து போகும். ஆனா பாடல் சோகமாத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
வருகைக்கு மிக்க நன்றி!! :-)
சாரங்கிக்கு ஒரு நல்ல அறிமுகம். மிக்க நன்றி. சாரங்கி இசையைக் கேட்டு மகிழ்ந்தேன்.
Lovely post. My vote for the best Sarangi BGM in any song goes to "Chinna-t-tayaval" from Dalapathy.. Awesome Awesome ! The instrument captures the agony and melancholy .. bang on!
Do you know that Ustad Sultan Khan is also a very good singer and has sung this song "Piya basanti re " with Chitra. It is a non-filmi song.
http://youtube.com/watch?v=NTOQ1cImsMQ
National Anthem - Ustad Sultan Khan's sarangi at 2.03. What a superb touch to the whole piece!
Cheers
Blogeswari
Also, Ustad-ji sang that initial humming bit "Kannoru kaa... " in the Alaipayuthey song 'Snehidane' [CD has two versions of the song - one this and the other that starts with the chorus]
@வாங்க குமரன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
@ப்ளாகேஸ்வரி
வருகைக்கு நன்றி!!
இந்த பதிவு எழுத தயார் செய்துகொண்டு இருக்கும் போது உங்கள் பதிவில் உள்ள சாரங்கி குறித்த கட்டுரையும் பார்த்தேன்! :-)
நீங்கள் அளித்த அந்த வந்தே மாதரம் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
நிறைய மேலதிகத்தகவல்களை அளித்திருக்கிறீர்கள்!!
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!! :-)
இந்த பட்டியலில் அலைபாயுதே படத்தில் வரும் ஸ்நேகிதனே பாடலையும் சேர்த்து கொள்ளுங்கள்.
@செந்தில் குமார்
Good catch!!!
நீங்கள் சொல்வது மிகச்சரி!! :-)
சாரங்கி நன்றாக உபயோகப்படுத்தப்படும் பாடல் அது!!
பதிவுக்கு அடிக்கடி வந்துட்டு போங்க!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)
சாரங்கிபற்றிய கட்டுரை எனக்கு புதிய அனுவமாக அமைந்தது.அதன் இசையைக் கேட்கும் பொழுது மனதில் சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒரே நேரத்தில் ஏற்ப்படுத்துகிறது. மிகவும் நன்றி .
Post a Comment