சாருகேசியின் மன்மத லீலையும், Jazz Fusion-உம்!
எவன் டா அவன் சாருகேசி?
அடப் பாவி...இது தெரியாதா உனக்கு? உன்னால் முடியும் தம்பி படம் பாத்துக்கீறயா நீயி? அதுல கமலுக்குப் போட்டியா ஜெமினி கிட்ட சிஷ்யனா சேந்துக்கிட்டு, கமல் தங்கச்சியவே டாவடிப்பானே! அவன் பேரு தான் மச்சி சாருகேசி!
அட அவனுக்கும் Jazz Fusionக்கும் என்னா சம்பந்தம் டா? டேய் வாணாம்! பிட்டு போடறத நிறுத்திக்கினு ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வா மாமே! சாருகேசி ராகத்த தான சொல்லற நீயி?
ஆமா, இவரு அப்படியே ராகத்தை எல்லாம் ஒன்னாக் கலந்து ராவா அடிச்சவரு! பேச வந்துட்டான்! சொல்றத கேள்றா!
ஜாஸ் மீசிக் பத்தி நம்ம சிவிஆரு ஒரு பதிவ போட்டாரு எப்பாலியோ!
ஆனா அதே ஜாஸ்-ஐ நம்மூரு மீசிக்-ல கலந்து, சாக்ஸோபோன்-ல நம்மூரு பையன் ஒருத்தன் வாசிக்கறான். சான் பிரான்சிஸ்கோவுல இருக்குறான். பிரசாந்து-ன்னு பேரு! நம்ம கே.ஆர்.எஸ் ஃபிரண்டு தானாம்! இலவச டிக்கெட் எதுன்னா கெடைக்குமான்னு கேட்டு வையி!
அவன் கூட சேர்ந்துக்குனு, டேவிட் ஈவெல்-னு ஒரு அமெரிக்கா காரன் Bass வயலின்-ல, நம்மூரு சாருகேசிய வாசிக்கறான்!
அடங்கொக்க மக்கா...சார்லஸ் கேசின்னு நினைச்சிருப்பான் போல சாருகேசிய!
டேய், சாருகேசின்னா ஒனக்கு அவ்ளோ கேவலமாப் போயிடுச்சா? சாருகேசி உலகம் பூரா இருக்கு! தெரியும்-ல? கர்நாடிக், ஹிந்துஸ்தானி ரெண்டுத்தலேயும் இருக்கு!
ஒரு காலத்துல இது எவ்ளோ பெரீய்ய்ய்ய் ஹிட்! மன்மத லீலையை வென்றார் உண்டோ - இது சாருகேசி தான்! இதைப் பாடாதவன்னே எவனும் கிடையாது!
சரி நம்ம ஜாஸ் மீசிக்குக்கு வருவோம்! Where Jazz meets Carnaticன்னு ஒரு தீம் வச்சிக்கிட்டாங்க பசங்க! அவங்க குழுவின் பேர் vidyamusic
Where Jazz meets Carnatic |
பிரபல Sax கலைஞர் கத்ரி கோபால்நாத்-பிரசாந்த் |
இளமைத் துடிப்புக்கு ஜாஸ்! அதில் மெலடிக்கு தென்னாட்டு இசை!
புதுசு புதுசாய் மெட்டுக்கள், Fusion மற்றும் மரபு இசை - ரெண்டுமே தராங்க.
இதுல டேவிட் = பெரிய ஆளுயர Bass வயலின்.
கவுதம் = ரெகுலர் வயலின்.
சமீர் = டிரம்ஸ்.
பிரசாந்த் = சாக்ஸபோன்.
கீழே சாருகேசிய Fusion-ல அற்புதமா வாசிக்கறாங்க! Million Fishes Artist Collective என்ற நிகழ்ச்சியில் வாசித்தது. கேளுங்க, பாருங்க!
சாருகேசின்னாலே இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி. நல்ல வெரைட்டி கொடுக்க முடியும். ராஜா, ரகுமான் ரெண்டு பேருமே சாருகேசியில் பூந்து விளையாடி இருக்காங்க.
சின்னத் தாய் அவள் பெற்ற ராஜாவே - தளபதி
உதயா உதயா - உதயா (ஹரிஹரன்-சாதனா சர்கம் பாடுவது)
காதலா, காதலா - அவ்வை சண்முகி
ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திரா
இதுல சாருகேசி ராகத்தின் பேரைச் சொல்லி அபிநயம் பிடிக்க முடியாமல் செய்து, அம்பிகாவைப் போட்டியில் ஜெயிப்பாரு நம்ம தலைவரு!
பண்டிட் ரவிசங்கர் சிதார் இசையில் சாருகேசி
அட சாரு சாரு என்ன வேணும்னாலும் சொல்லுங்க சாரு. சாருகேசி-ன்னா அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும், இது ரெண்டு தான் சாரு!
ஆட மோடி கலதே - தியாகராஜர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
போன வாட்டி நளினகாந்தி போட்டோம்ல, அதான் இன்னிக்கி ஒரு ஆம்பள ராகம் - சாருகேசி!
அடுத்த தபா, கட்டாயம் ஒரு கட்டழகு விளையாடும் கன்னிப் பொண்ணு ராகம் தேன்! அதுவரை வர்ட்டா ஸ்டைலில், வரட்டா? :-)
23 comments:
உதயா உதயா பாடல் தானாகவே பாடத் துவங்குகிறது! (வேண்டுமென்றே அப்படிச் செய்தீர்களா அல்லது வேறு வழியில்லாமலா என்று தெரியவில்லை!). நான் பார்த்த வரை நிறைய பேருக்கு பிடிக்காத பாடல் இது! ஹரிஹரனின் கசல் குரல் இனிக்கும் பாடல்!
சாருகேசியின் அறிமுகம் நன்றாக இருக்கிறது.
இது தான் சாருகேசியா?
என்னது உதயா பாடல் பலருக்கு பிடிக்காதா? ஜீவா?
நன்றாகத்தானே இருக்கு.
என்னிடம் ஒரு ஆள் உளறிய போது இந்த பாடல் தான் சட்டென்று ஞாபகம் வந்தது.
@கே ஆர் ஸ் முதன்முதலில் சாருகேசியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே பாபநாசம் சிவன்தான்.மன்மதலீலையில்.பிறகுதான் மற்றவர்கள் புலிகேசி போன்றவற்றில் இறங்கினார்கள்
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்ணிலாவே" என்ற பழைய பாடலும், கமலின் சிங்காரவேலன் படத்தில் "தூது செல்வதாரடி" பாடலும் சாருகேசியில் திரைஇசை.
"இன்னம் என் மனம் அறியாதார் போலே
இருந்தால் நியாயமா, யாதவா, மாதவா."
- இப்படி இரு தமிழ் வர்ணமும் இருக்கிறது, லால்குடி ஜெயராமன் இசை அமைப்பினில்!
ஊரெங்கும் தேடி ஒருவரைக்கண்டேன்
(தேன்நிலவு) சின்னத்தாய் அவள் (தளபதி)சாருகேசிதான்
//ஜீவா (Jeeva Venkataraman) said...
உதயா உதயா பாடல் தானாகவே பாடத் துவங்குகிறது! (வேண்டுமென்றே அப்படிச் செய்தீர்களா அல்லது வேறு வழியில்லாமலா என்று தெரியவில்லை!).//
மாற்றி விட்டேன் ஜீவா! musicplug.inல அப்படித் தான் கொடுக்குறாங்க போல!
//நான் பார்த்த வரை நிறைய பேருக்கு பிடிக்காத பாடல் இது!//
அச்சோ...மெல்லிய இழையில் பாடல் நல்லா இருக்குமே! படம் தான் ஊத்திக்கிச்சு! பாட்டு ஹிட் தானே!
//குமரன் (Kumaran) said...
சாருகேசியின் அறிமுகம் நன்றாக இருக்கிறது.//
சாருகேசிக்கு பொருள் உங்களைத் தான் கேட்கணும்-னு நினைச்சேன்!
சாரு+கேசி=நான்கு+தலை? :-))
//வடுவூர் குமார் said...
இது தான் சாருகேசியா?
என்னிடம் ஒரு ஆள் உளறிய போது இந்த பாடல் தான் சட்டென்று ஞாபகம் வந்தது//
ஆகா...உளறியவரை ஒண்ணும் பண்ணலீயே நீங்க? :-)
நமக்காகவே போட்ட பதிவுன்னு நினைச்சுக்கிறேன். ஆனாலும் நோரா ஜோன்ஸ் இல்லாத இந்த பதிவை......
Good diversified post on Charukesi.
The Fusion was just too good. Super a irukku .
Other noted Film Songs are
vasantamullai polE vandu - The older song..Not the new vijay's one
kadhalin dipam onru - Thambikku enda ooru ( Thaliavr Padam)
Singaravelan la oru paatu irukku . Vanmathi Vanmathi..appadi nnu varum ( Forgot the pallavi).Thats also Full and full charukesi without kalapadam .
Waiting for more such posts on different ragams impact on other music .
//தி. ரா. ச.(T.R.C.) said...
@கே ஆர் ஸ் முதன்முதலில் சாருகேசியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே பாபநாசம் சிவன்தான்.மன்மதலீலையில்.//
ஆமாம் திராச
சினிமா இசையில் சாருகேசியை சிவன் தான் அறிமுகம் செய்து வைத்தர்-ன்னு சொல்லக் கேட்டுள்ளேன்! நல்ல எடுப்பான ராகம்.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்ணிலாவே" என்ற பழைய பாடலும்//
அட ஆமாம்!
இதை எப்படி மறந்து போனேன்?
//இன்னம் என் மனம் அறியாதார் போலே
இருந்தால் நியாயமா, யாதவா, மாதவா."
- இப்படி இரு தமிழ் வர்ணமும் இருக்கிறது, லால்குடி ஜெயராமன் இசை அமைப்பினில்!//
கலக்குறீங்களே ஜீவா.
அடுத்த ராகம் நீங்க போடுங்களேன்!
//தி. ரா. ச.(T.R.C.) said...
ஊரெங்கும் தேடி ஒருவரைக்கண்டேன்
(தேன்நிலவு) சின்னத்தாய் அவள் (தளபதி)சாருகேசிதான்//
சூப்பர்.
திராச நீங்க ஒரு ராகத் தொடரே எங்களுக்குத் தரணும். இளமை ததும்பும் ராகம் - அடுத்து என்ன எடுக்கலாம்-னு சொல்லுங்களேன்.
//ILA(a)இளா said...
நமக்காகவே போட்ட பதிவுன்னு நினைச்சுக்கிறேன். ஆனாலும் நோரா ஜோன்ஸ் இல்லாத இந்த பதிவை......//
ஹலோ இளா
பண்டித ரவிசங்கர் வாசிக்கற சித்தார்ல் சாருகேசியைக் கேளூங்கன்னா...நீஙக
அவர் பொண்ணு நோராவை எதுக்குய்யா தேடறீரு? :-)
//Madhusoodhanan said...
The Fusion was just too good. Super a irukku//
ஆமாங்க மது. அருமையாப் பண்ணியிருக்காங்க பசங்க.
//vasantamullai polE vandu kadhalin dipam onru
Vanmathi Vanmathi..appadi nnu varum ( Forgot the pallavi).Thats also Full and full charukesi without kalapadam //
தகவல்களுக்கு நன்றி.
அந்தப் பல்லவி ஜீவா சொல்லி இருக்காரு பாருங்க.
ஜானகி பாடும் தூது செல்வது ஆரடி...
சிங்கார வேலன்-ல கம்பீர நாட்டை ராகம் வேறு வரும். என்ன பாட்டு தெரியுதுங்களா? :-)
//Waiting for more such posts on different ragams impact on other music//
நிச்சயமா ஒவ்வொன்றாகத் தருகிறோம்.
//அடுத்த ராகம் நீங்க போடுங்களேன்!//
அப்படியே ஆகட்டும் ரவி.
அடுத்தது ஆபோகி ஆகலாமா?
//ஜீவா (Jeeva Venkataraman) said...
//அடுத்த ராகம் நீங்க போடுங்களேன்!//
அப்படியே ஆகட்டும் ரவி.
அடுத்தது ஆபோகி ஆகலாமா?//
ஓகோ!
ஆபோகி, "போ"கி இல்ல "வா"கி:-)
தூள் கெளப்புங்க!
இரவிசங்கர்.
சாரு என்றால் இனிய, விரும்பத்தக்க, பெருமைமிக்க, அழகிய போன்ற பொருள் வரும்.
சாருகேசி - மேலே சொன்ன எல்லாமுமான முடியை உடையவர்(ன்/ள்)
சாருஹாச/சி - மேலே சொன்ன எல்லாமுமான புன்னகையை உடையவர்(ன்/ள்)
சாருபாஹு - மேலே சொன்ன எல்லாமும் உடைய தோள்களை உடையவன்
சாருசர்யா - மே...ய நடத்தையை உடையவர்(ன்/ள்)
இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.
இன்னம் கொஞ்சம் சாருகேசியில்
"க்ருபையா பாலய" - ஸ்வாதித் திருநாள்
தமிழ்த் திரையிசையில்:-
1. தூது செல்வதாரடி கிளியே - சிங்காரவேலன்
2. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
3. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
4. மலரே குறிஞ்சி மலரே - டாக்டர்.சிவா
5. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
6. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
7. வசந்தமுல்லைப் போலே வந்து - சாரங்கதாரா
//குமரன் (Kumaran) said...
சாரு என்றால் இனிய, விரும்பத்தக்க, பெருமைமிக்க, அழகிய போன்ற பொருள் வரும்.
சாருகேசி - மேலே சொன்ன எல்லாமுமான முடியை உடையவர்(ன்/ள்)
சாருஹாச/சி - மேலே சொன்ன எல்லாமுமான புன்னகையை உடையவர்(ன்/ள்)
//
அட, ஆமாம்.
இதுக்கு தான் எப்பமே பெரியவங்களை ஒரு வார்த்தை கேட்டுக்கணும்ங்கிறது.
நன்றி குமரன்!
சாருஹாசினி என்று ருக்மிணிப் பிராட்டியைக் குறிப்பிடுவார்கள். இப்போது புரிகிறது!
//Simulation said...
இன்னம் கொஞ்சம் சாருகேசியில்//
வாங்க சிமுலேஷன்.
கொஞ்சமா? நிறையவே கொடுத்திருக்கீங்க!
மலரே குறிஞ்சி மலரே - ஆகா கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு! - சாருகேசியில் தான் எத்தனை சுகமான பாடல்கள்! :-)
ஆஹா, எனக்கு பிடித்த ராகம் சாருகேசி. இதோ இன்னும் சில பாடல்கள்
1.காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்ஜில் - தம்பிக்கு எந்த ஊரு
2.நீயே கதி ஈஸ்வரி - அண்ணையின் ஆணை
3.அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவல்காரன்
4.மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
5.வா கலாப மயிலே - காத்தவராயன்(an outstanding song by T.M.S)
6.நல்லதோர் வீணை செய்தே - மறுபடியும்
Post a Comment